ராஜாஜி ஹால் முதல் அண்ணா சமாதி வரை… கருணாநிதி இறுதி ஊர்வலத்தில் என்ன நடந்தது?

0 15

“வீரன் சாவதே இல்லை கோழை வாழ்வதே இல்லை என்ற பழமொழியைப் பிரபலப்படுத்தியவர் மறைந்த திமுக தலைவர் முகருணாநிதி39 அவரின் இந்தப்  பொன்மொழி அவர் உடல் மெரினாவில் அடக்கம் செய்யப்பட்ட கடைசி நாளிலும் ஜெயித்துள்ளது39 என சிலாகித்துக் கண்ணீர் வடித்தனர் திமுக தொண்டர்கள்சென்னை ராஜாஜி ஹாலில் இறுதி அஞ்சலிக்காக வைக்கப்பட்டிருந்த கருணாநிதியின் உடலுக்கு பிரதமர் காங்கிரஸ் கட்சித் தலைவர் எனப் பெருந்திரளானோர் கண்ணீர் அஞ்சலி செலுத்தினர்இறுதி அஞ்சலிக்காகக் கருணாநிதியின் உடல் 882018-ம் தேதியன்று (புதன்கிழமை) காலை 5 மணியளவில் வைக்கப்பட்டதைத் தொடர்ந்து சுமார் 9 மணியிலிருந்தே வெளிமாவட்டங்களிலிருந்து ஆயிரக்கணக்கான தொண்டர்கள் அஞ்சலி செலுத்த வரத்தொடங்கினர் நேரம் செல்லச் செல்ல தொண்டர்களின் வருகை அதிகரித்தது அங்கு பாதுகாப்புக்காகப் பணியில் இருந்த போலீஸார் அதிகரிக்கும் கூட்டத்தைக் கட்டுப்படுத்த முடியாமல் பெரிதும் சிரமத்துக்கு ஆளானார்கள் ராஜாஜி ஹாலில் கருணாநிதியின் உடலுக்குத் தொண்டர்கள் இறுதி அஞ்சலி செலுத்திய நிகழ்வு பற்றி செய்தி சேகரிப்பதற்காகச் சென்ற நாம் `கூட்டத்தில் சிக்கிவிடக் கூடாது39 என முன்னெச்சரிக்கை மற்றும் யோசனையுடன் இருந்தோம் தொடர்ந்து வந்துகொண்டேயிருந்த தொண்டர்களின் கூட்டத்தை ஒரு வாயிலில் அனுப்பிக்கொண்டிருந்த போலீஸார் மற்றொரு நுழைவாயிலில் செய்தியாளர்களை அனுப்பியதால் எளிமையாகச் செல்ல முடிந்தது  `தள்ளுமுள்ளு39-வில் தொண்டர்கள் விழிபிதுங்கிய போலீஸார்அஞ்சலி செலுத்த வந்த விஐபி-க்கள் செல்வதற்காக ஒரு நுழைவாயில் தொண்டர்கள் செல்ல ஒரு நுழைவாயில் காவல்துறை உயரதிகாரிகள் மற்றும் செய்தியாளர்கள் உள்ளே செல்வதற்கு இன்னொரு நுழைவாயில் என மூன்று வழிகளில் பாதுகாப்பில் இருந்தவர்கள் பிரித்து அனுப்பிக்கொண்டிருந்தனர் காலை 10 மணிவரை சீரான அளவில் இருந்த தொண்டர்கள் கூட்டம் மெரினாவில் கருணாநிதிக்கு இடம் ஒதுக்க உயர் நீதிமன்றம் உத்தரவிட்ட தகவலை அறிந்ததும் ஆர்ப்பரித்து அலைமோதத் தொடங்கியது தொண்டர்களின் வருகை அதிகரித்ததால் போலீஸாருக்கு பதற்றம் ஏற்பட்டது ஒரு கட்டத்துக்குப் பிறகு தொண்டர்களைக் கட்டுப்படுத்த முடியாமல் போலீஸார் திணறினர் இதனால் தடுப்பு கம்பிகளைக் கீழே தள்ளிவிட்டு தொண்டர்கள் அனைத்து வாயில்களிலும் கருணாநிதியின் உடலைப் பார்க்க நுழைந்ததால் திடீரென்று தள்ளுமுள்ளு ஏற்பட்டது தனித் தனியாக இருந்த நுழைவாயிகள் அனைத்தும் ஒன்றாகிப்போனது விஐபி-க்கள் நுழைவாயில் வழியாக நேரடியாகத் தொண்டர்கள் உள்ளே புகுந்துவிட்டனர் அதனால் அப்பகுதி முழுவதும் பதற்றம் ஏற்பட்டது இதனால் தொண்டர்களும் போலீஸாரும் ஒருவரை ஒருவர் தள்ளிக்கொள்ளும் நிலை உருவானது கூட்டத்தினரைக் கலைக்க போலீஸார் தடியடி நடத்த வேண்டிய சூழல் ஏற்பட்டது அதைத் தொடர்ந்து கூட்டம் கலைந்து சென்றதும் மிகவும் உணர்ச்சிப் பெருக்கில் இருந்த ஸ்டாலின் மைக் பிடித்தார் கெஞ்சிய ஸ்டாலின் உருகிய தொண்டர்கள்அப்போது அவர் கலைஞரின் இறுதி ஊர்வலம் அமைதியாக நடைபெற வேண்டும் என்றால் தொண்டர்கள் தயவு செய்து அமைதி காத்து கலைந்து செல்ல வேண்டும் என்று நான் உங்களைக் கேட்டுக்கொள்கிறேன் தலைவர் கலைஞர் எண்ணியதுபோல் உயர் நீதிமன்றம் நல்ல தீர்ப்பைத் தந்துள்ளதுஅனைவரும் நெருக்கடி இல்லாமல் கலைந்து செல்ல வேண்டும் இட ஒதுகீட்டுக்காக சளைக்காமல் போராடிய தலைவரைப் பிரிந்துள்ள இந்த நேரத்தில் அவருக்காக இட ஒதுக்கீடு கேட்டு நாம் போராடி தற்போது வெற்றி பெற்றிருக்கிறோம் மிகப் பெரிய சோகமான சூழலில் இருக்கும் இந்த நேரத்தில் கலைஞரின் கனவு நனவாகி இருக்கிற நல்ல உணர்வு ஏற்பட்டுள்ளது இந்த நேரத்தில் நீங்கள் அமைதிகாக்க வேண்டும் ஆட்சியாளர்களாக இருப்பவர்கள் தலைவர் கலைஞருக்குப் பெருமை சேர்க்கக் கூடாது எனத் திட்டமிட்டிருந்தார்கள் நானே நேரில் போய் முதலமைச்சரைப் பார்த்து இடம் கேட்டும் ஆட்சியாளர்கள் இடம் அளிக்க பிடிவாதம் பிடித்தனர் அதன்பிறகே நீதிமன்றத்தை நாடினோம் நீதிமன்ற உத்தரவால் வெற்றிபெற்று கலைஞரின் கனவை நனவாக்கும் இந்த நேரத்தில் இதையெல்லாம் விரும்பாத ஆட்சியாளர்கள் மத்தியில் இந்த நிகழ்வில் கெட்டப்பெயர் ஏற்படுவதற்கு நாம் இடம் அளிக்கக் கூடாது காவல்துறை நமக்கு பாதுகாப்பு கொடுத்தாலும் கொடுக்கவில்லை என்றாலும் அதை நாம் பெரிதுபடுத்தாமல் அமைதி காக்க வேண்டும் உங்களைப் போன்றே நானும் கலைஞரால் உருவாக்கப்பட்டவன் என்ற முறையில் மீண்டும் ஒருமுறை பணிவோடு கேட்கிறேன் கலைந்து செல்லுங்கள் என்றார் ஸ்டாலின் பேசிய அந்த உணர்ச்சி மிகுந்த பேச்சைக் கேட்ட தொண்டர்கள் கண்ணீருடன் மனம் உருகி அந்தப் பகுதியில் இருந்து கலைந்துச் செல்லத் தொடங்கினார்கள் அதன் பிறகு இறுதி ஊர்வலம் தொடங்கும்வரை போலீஸாருக்கு பாதுகாப்புப் பணியில் பெரிய பிரச்னை ஏற்படவில்லைபாதுகாப்புப் பணியில் இருந்த காவல் ஆய்வாளர் ஒருவர் பேசுகையில் திடீரென்று கூட்டத்தினர் இடையே ஒட்டுமொத்தமாகக் கட்டுப்பாடு இல்லாமல் போய்விட்டது ஏன் என்பது எங்களுக்கே தெரியவில்லை போதிய எண்ணிக்கையில் காவலர்கள் பணியில் இருக்க மேலிடம் அனுமதிக்கவில்லை தள்ளுமுள்ளு ஏற்பட்டதற்கு அதுவும் ஒரு காரணம் பணியில் இருந்த காவலர்களால் தொண்டர்களைத் தைரியமாக நெருங்க முடியவில்லை கூட்டத்தினர் மிகுந்த உணர்ச்சிப் பெருக்குடன் இருப்பதால் வலியுறுத்திக் கட்டுப்படுத்தவும் எங்களால் முடியவில்லை எனவே ஒதுங்கி நின்றவாறே பாதுகாப்புப் பணியை மேற்கொண்டோம் சில நேரங்களில் கூட்டத்தினர் அத்துமீறி தடுப்புகளைத் தாண்டிச் சென்றபோது வேடிக்கை பார்க்க வேண்டியதாகிவிட்டது என்றார்இறுதி ஊர்வலத்தின்போது தொண்டர்கள் பேசியதுதலைவா நீ வாழும் போதும் போராடினாய் உயிர் பிரிந்தபோதும் போராடினாய் தலைவா சர்ச்சையின்றி சரித்திரம் படைத்துள்ளாய் சென்று வா சூரியனே என ஏராளமானோர் கண்ணீர் வடித்தார்கள்

Leave A Reply

Your email address will not be published.