“என்னை வளர்த்தவர் இவர்!”- ஸ்டாலினிடம் கருணாநிதி அறிமுகப்படுத்திய முத்துவைத் தெரியுமா?

0 16

கலைஞர் என்னும் ஆளுமை மெரினாவில் நிரந்தர நித்திரையில் ஆழ்ந்திருக்கிறது இன்னும் அவரை இழந்த சோகம் தமிழக மக்களின் மனதில் இருந்து முற்றாக நீங்கவில்லை இந்நிலையில் 39கடலில் மூழ்கி முத்தெடுத்தேன் அதில் ஒன்று மதுரை முத்து இன்னொன்று கவுண்டம்பட்டி முத்து என் கிரீடத்தில் அந்த இரு முத்துகளை மட்டுமே எப்போதும் பதிந்திருப்பேன்39ன்னு என்னைப் பற்றி கலைஞர் மதுரை மாநாட்டுல பேசினார் எனக்குப் பதவி தர்றேன்னார்தான் சினிமாவுக்கு கதை வசனம் எழுதிச் சம்பாதித்த பணத்தில் ஒரு கோடி ரூபாய் தர்றேன்னார் நான் எல்லாத்தையும் மறுத்துட்டு39உங்க அன்பு மட்டும் போதும் இந்தத் தம்பி உங்க சிரித்த முகத்தைப் பார்த்துக்கிட்டு இருந்தாலே போதும்39ன்னு சொன்னேன் இப்போ என்னை அழ வச்சுட்டுஇப்படி பொசுக்குன்னு போயிட்டாரே என்று ஆற்றாமையாகப் பேசுகிறார் கவுண்டம்பட்டி முத்துகலைஞர் 1957-ல் குளித்தலை தொகுதியில் முதல் தேர்தலைச் சந்திக்கவும்அங்கே அவர் 8296 ஓட்டுகளில் ஜெயிக்கவும் காரணம் இந்த கவுண்டம்பட்டி முத்துதான் குளித்தலையில் கலைஞர் ஜெயித்ததும்கவுண்டம்பட்டி முத்தோடு அண்ணாவைப் போய் பார்த்திருக்கிறார் அப்போதுஇரண்டு மாலைகளை வாங்கி வரச் சொல்லிஅவற்றைக் கலைஞர்கவுண்டம்பட்டி முத்து கழுத்துகளில் போட்டு39இந்த வெற்றித் தேரை இழுத்த இரண்டு குதிரைகள் நீங்கள்39 என்று புகழாரம் சூட்டினாராம் வீட்டில் கலைஞர் இழப்பு பெரிய பாதிப்பை ஏற்படுத்தி இருக்கஎங்கோ வெறித்தபடி கலைஞர் இழப்பை ஆசுவாசப்படுத்திக் கொண்டிருந்தார் கவுண்டம்பட்டி முத்து கரூர் மாவட்டம்குளித்தலைத் தொகுதியில் உள்ள கவுண்டம்பட்டிதான் அவருக்குச் சொந்த ஊர் ஆறுதல் சொல்லி அவரைப் பேச வைத்தோம் இன்னைக்கு நங்கவரம்மேல நங்கவரம்சூரியனூர்காவகாரப்பட்டின்னு 50 க்கும் மேற்பட்ட கிராம விவசாயிகள் மூனு வேளைச் சோறு சாப்பிடுறாங்கன்னாஅதுக்கு காரணம் கலைஞர்தான் நங்கவரம் பண்ணையை எதிர்த்து அவர் நடத்திய மாபெரும் போராட்டம்தான் 1953 ம் ஆண்டு இந்தத் கிராமங்களை சேர்ந்த 20000 க்கும் மேற்பட்ட விவசாயிகள் நங்கவரம் பகுதியைச் சேர்ந்த என்ஆர்ராமநாதய்யர்என்ஆர்ரெங்கநாதய்யர் என்கிற இரண்டு பண்ணையார்களை எதிர்த்து போராட்டம் நடத்தினாங்க அதாவதுஅந்தப் பண்ணையார்களுக்கு சொந்தமான 33412 ஏக்கர் நிலங்களை இந்தத் பகுதி விவசாயிகளுக்குக் குத்தகைக்கு விட்டிருந்தாங்க பல வருடங்களாக விவசாயிகள் பயன்பாட்டில் அந்த நிலங்கள் இருந்தன அப்போதுகாமராஜர் 60 க்கு நாற்பதுன்னு ஒரு சட்டம் போட்டார் அதாவதுநிலங்களின் உரிமையாளர்களுக்கு 60 சதவிகிதமும்உழுத விவசாயிகளுக்கு 40 சதவிகித நிலங்களையும் பிரிச்சு தரணும்ன்னு சொல்லிய சட்டம் அது ஆனால்ராமநாதய்யர் அப்படிச் செய்யாமல்விவசாயிகளின் பயன்பாட்டில் இருந்த அத்தனை நிலங்களையும் பிடுங்க முயன்றார் இதனால்விவசாயிகள் நங்கவரம் பண்ணையார்களை எதிர்த்து போராட்டம் நடத்தினார்கள் மூன்று வருடம் அந்தப் போராட்டம் நடந்தது இந்தப் போராட்டத்தை ஒருங்கிணைத்து நான்தான் நடத்தினேன்1956-ல் இந்தத் போராட்டம் உக்கிரம் அடைந்தது அப்போது திமுகவின் ஒருங்கிணைந்த திருச்சி மாவட்ட செயலாளராக இருந்த அன்பிலாரை கூப்பிட்ட அண்ணா39கலைஞரை அழைத்துப் போய்நங்கவரம் விவசாயிகள் போராட்டத்தை பேச்சுவார்த்தையின் மூலம் தீர்த்து வைக்க ஏற்பாடு செய்ய சொன்னார் கலைஞர் களத்திற்கு வந்தார் நேராக வயல்களுக்கு 10000 விவசாயிகளை திரட்டிட்டு போய்தானே ஏரைப் பூட்டி ஓட்டியதோடு39உழுதவனுக்கே நிலம் சொந்தம்3939நாடு பாதி நங்கவரம் பாதி39 என்று கோஷம் போட்டார் தொடர்ந்து ஆறு நாள்கள் வயல்களிலேயே இருந்து கடுமையான போராட்டம் நடத்தினார் அதன் காரணமாகமாவட்ட நிர்வாகமும்ராமநாதய்யரும் என்னையும்கலைஞரையும் பேச்சுவார்த்தைக்கு அழைத்தனர் அங்கே விவசாயிகள் சார்பாக நாங்க வைத்த கோரிக்கையை பண்ணையார் ஏத்துக்கிட்டார் இதனால்மூனு வருஷ விவசாயிகளின் உரிமை போராட்டம் முடிவுக்கு வந்தது எத்தனையோ பொதுவுடைமை கட்சித் தலைவர்களின் போராட்ட வியூகங்களால் சாதிக்க முடியாத விஷயத்தைத் தனது வீரியமான போராட்டத்தால் சாதித்துக் காட்டினார் கலைஞர் இதனால்அந்த நிலங்களை மேல்மடையில் உள்ள நிலங்களுக்கு ஏக்கருக்கு 1000நடுமடை பாசன நிலங்களுக்கு 750கடைமடை பாசன நிலங்களுக்கு ஏக்கருக்கு 500 என்று பணையாருக்கு கொடுத்துநிலங்களை விவசாயிகள் தங்கள் பெயர்களில் பட்டா பண்ணிக் கொண்டார்கள் அதன்பிறகு1957 ல் வந்த சட்டமன்ற தேர்தலில் கலைஞர் தனது சொந்த மாவட்டமான தஞ்சாவூரில் நிற்க நினைத்தார் ஆனால்அங்கே காங்கிரஸ் சார்பில் செல்வாக்கு மிக்க பரிசுத்த நாடார் என்பவர் நின்றதால்கலைஞரால் அங்கே ஜெயிக்க முடியாது என்று அண்ணா நினைத்தார் நங்கவரம் போராட்டத்தால்திமுகவுக்கு இங்கே செல்வாக்கு இருக்கு என்று நினைத்து குளித்தலையில் நிற்கச் சொன்னார் என்னை அழைத்த அண்ணா39குளித்தலையில் கலைஞரை உன்னை நம்பி நிற்க வைக்க நினைக்கிறேன் நீ உறுதி கொடுத்தால்நிற்க வைப்பேன்39ன்னு என்கிட்ட கேட்டார் அதுக்கு நான்39நான் இருக்கிறேன் நிற்க வையுங்கள்39ன்னு சொன்னேன் அதன்பிறகே கலைஞரை இங்கே அண்ணா நிற்க வைத்தார் காங்கிரஸ் சார்பில் தர்மலிங்கம் என்பவர் நின்றார் ஆனால்அவர் காரிலேயே ஓட்டுக் கேட்டு போவார் கலைஞரோ கார் போகமுடியாத பகுதிகளுக்கு சைக்கிளிலும் சைக்கிள் போகமுடியாத பகுதிகளுக்கு நடந்தும் ஓட்டுக் கேட்டு போவார் சூரியனூர் கிராமத்திற்கு போகும் போது குறுக்கே போன காட்டுவாரியை கடக்கக் கலைஞரை கட்டிலில் அமர வைத்து தூக்கிப் போனோம் அந்த ஊரில் அதிக ஓட்டுக்கள் கிடைத்தது இதனால்அந்த ஊருக்குப் பிற்பாடு பாலம் கட்டிக் கொடுத்தார்சாதிமதம் பார்க்காமல்எல்லோர் வீட்டுக்குள்ளும் உரிமையாகப் போய்நீராகாரம்கம்மஞ்சோறு வாங்கிச் சாப்பிடுவார் இதனால்மக்களுக்கு அவரை ரொம்ப பிடிச்சுப் போச்சு அதோடஅவரோட சினிமா பிரபலமும்கவர்ச்சிகரமான பேச்சும் பெண்கள் ஓட்டுகளைக் கவர்ந்தது இதன் காரணமாகதர்மலிங்கத்தை 8296 ஓட்டு வித்தியாசத்தில் ஜெயித்தார் அண்ணாவைப் பார்க்க நானும்கலைஞரும் போனப்ப ரெண்டு பேருக்கும் மாலை போட்டார் சட்டமன்றத்தில் 1957 ல் கலைஞர் தனது கன்னிப்பேச்சாக இந்த நங்கவரம் விவசாயிகள் போராட்ட வெற்றியை பற்றிதான் பேசினார் காமராஜர் 1961 ல் நிலஉச்ச வரம்பு சட்டம் கொண்டு வந்ததற்கும் இந்த நங்கவர கலைஞர் போராட்டம் முக்கிய காரணமாக இருந்தது அதன்பிறகு1967 ல் திமுக ஆட்சியை பிடிச்சப்பஅண்ணா எனக்கு எம்எல்சி பதவி கொடுத்துஅமைச்சரவையில் சேர்க்க சம்மதம் கேட்டார் நான் வேண்டாம்ன்னு சொல்லிட்டேன் எம்ஜிஆர் திமுகவை விட்டு பிரிஞ்சப்பஎன்னை எம்எல்சியாக்கி அமைச்சரவையில் சேர்க்க கலைஞர் கேட்டார் 39நான் இவ்வளவையும் செஞ்சது பதவியை எதிர்பார்த்த மாதிரி ஆயிடும்39ன்னு சொல்லிமறுத்துட்டேன் தான் சினிமா எழுதிச் சம்பாதித்த பணத்தில் இருந்து ஒரு கோடி ரூபா தர்றேன்னு சொன்னார் மறுத்துட்டேன் ஆனால் எனக்குத் தெரியாமல் எனது இரண்டாவது மகனுக்கு பிஆர்ஓ வேலை வாங்கிச் கொடுத்தார் கலைஞர் அவங்க அம்மா கலைஞரை மூத்த மகன்னும்எல்லை இளைய மகன்னும்தான் சொல்வாங்க அவர் சிஎம்மா இருந்தப்பல்லாம்நான் கோட்டைக்கு போனா எந்தக் கேள்வியும் கேட்காம என்னை அவரைப் பார்க்க அனுமதிப்பாங்க ஒருதடவைகோட்டைக்கு போற திருப்பத்துல நின்னுக்கிட்டு இருந்தேன் காரில் போனவர்என்னை அடையாளம் பார்த்திட்டுகாரை நிறுத்தச் சொல்லி39நீ அறிவாலயம் போ பின்னாலேயே வர்றேன்39ன்னு சொல்லிட்டுஒரு மணி நேரத்துல எனக்காக முதலமைச்சர் பதவியையும் மறந்து அவசரமா வந்தார் அவர் தண்டுவடத்துல பிரச்னையாகி அறுவைக் சிகிச்சை நடந்து சிரமப்பட்டு ஓய்வில் இருந்தப்பயார் அவரை பார்த்தப்பயும் சிரிக்கலை நான் பார்த்தப்பதான் சிரிச்சார் அந்த அளவிற்கு என்னை அவரது தம்பியா நினைச்சு மதிச்சார் அதோடுஸ்டாலின்கிட்ட39நான் அரசியலில் இந்த அளவுக்கு வளர்ந்த இந்த உயர்ந்த நிலைக்கும்இனி உயர போற நிலைக்கும் காரணம் இவர்தான் இவரது குடும்பத்தை மறந்துடாத39ன்னு என்னை அறிமுகப்படுத்தி வச்சார் நான் அவர்கிட்ட எதையும் எதிர்பார்க்கலை நான் அவரோட சிரிப்பை மட்டும் பார்த்திக்கிட்டே இருக்கனும்ன்னு நினைச்சேன் அவருக்கு உடம்பு சரியில்லங்கிற தகவலையே என்னிடம் மறைச்சுட்டாங்க வீட்டுல உள்ளவங்க அதைக் கேட்ட அதிர்ச்சியில எனக்கு ஏதாவது ஆயிரும்ன்னு பயந்துதான் அப்படி பண்ணினாங்க டிவியையும் என்னைப் பார்க்க விடலை என் பேரன்தான் நேத்து 39கலைஞர் செத்துட்டார் தாத்தா39ன்னு சொன்னதும்எனக்கு இதயத்தில் இடி விழுந்தாப்புல ஆயிட்டு 39எனது அரசியல்பதவிகளுக்கு அடித்தளமிட்டது கவுண்டம்பட்டி முத்துதான்39ன்னு எங்கும் பேசுவார் அதேபோல்எல்லா மேடையில் நங்கவரம் போராட்டத்தை ஒரு வரி பேசாமல் இருக்கமாட்டார் ஆனால் இந்தப் தம்பியால் அவரைப் கடைசியா பார்க்க முடியாம போயிட்டே அவரில்லாமல் இனி நான் எப்படி உயிர் வாழ்வேன் என்று குலுங்கி அழ ஆரம்பித்துவிட்டார்

Leave A Reply

Your email address will not be published.