அறிவாலயத்தில் விசேஷம்… குவிந்த பி.ஜே.பி. தொண்டர்கள்!

0 6

திமுக தலைவர் முகஸ்டாலின் வெளிப்படையாகவே பிஜேபி-யுடன் கூட்டு இல்லை என்று அறிவித்துவிட்டார் மத்திய அரசைத் தொடர்ந்து விமர்சித்து வருகிறார் ஆனால் பிஜேபியின் மத்திய அமைச்சர் பொன்ராதாகிருஷ்ணன் அறிவாலயத்தில் நேரில் வந்தது ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது ராதாகிருஷ்ணன் மட்டும் அல்லாமல் பிஜேபி-யின் தமிழகத்தின் முக்கிய நிர்வாகிகளான முன்னாள் மாநிலச் செயலாளர் சிபிராதாகிருஷ்ணனும் மாவட்ட அளவில் முக்கிய பொறுப்பில் உள்ள பிஜேபி நிர்வாகிகள் பலரும் அறிவாலயத்துக்கு என்ட்ரி கொடுத்துள்ளனர்இவர்கள் எதற்காக வந்தார்கள் கூட்டணி பேசவா என்றால் அதுதான் இல்லை திமுகழக வர்த்தகர் அணி மாநிலச் செயலாளர் கவிஞர் காசி முத்துமாணிக்கம் இல்லத் திருமண விழாவில் கலந்துகொள்ளவே வந்தார்கள் இவர் முன்பு பிஜேபி-யில் இருந்தவர் அந்த நட்பில் பிஜேபி தலைவர்களை திருமணத்துக்கு அழைத்திருந்தார் திருமணம் நடக்குமிடம் அறிவாலயத்தின் பின்புறம் உள்ள கலைஞர் அரங்கில் என்று தெரிந்தே அனைவரும் தயங்காமல் வந்தனர்முதலில் வந்த பொன்ராதாகிருஷ்ணனை அழைத்துச் சென்று ஒரு அறையில் உட்காரவைத்தார் காசிமுத்துமாணிக்கம் அந்த அறையில் டிஆர்பாலு ஆர்எஸ்பாரதி மற்றும் கிவீரமணி ஆகியோர் அமர்ந்திருந்தனர் அவர்களுடன் அரை மணிநேரம் பேசிக்கொண்டிருந்துவிட்டு மேடைக்கு வந்தார் மணமக்களை வாழ்த்திவிட்டுக் கிளம்பினார் இன்று இரவு அதே அறிவாயலத்தில் நடக்க இருக்கும் வரவேற்பு விழாவுக்கு மேலும் பல பிஜேபி தலைவர்கள் வர இருக்கிறார்களாம்

Leave A Reply

Your email address will not be published.