‘சீமராஜா’ சீக்ரெட்ஸ் – நள்ளிரவில் கண் கலங்கிய சிவகார்த்திகேயன்!

0 14

வழக்கமாக அரசியலில்தான் நிரந்தர நண்பரும் இல்லை நிரந்தர எதிரியும் இல்லை என்று சொல்வார்கள் அது சினிமாவிலும் உண்டு என்று நடிகர் சிவகார்த்திகேயன் மற்றும் தயாரிப்பாளர் ஞானவேல் ராஜா இருவரும்  நிரூபித்திருக்கிறார்கள்  சினிமாவில் சிவகார்த்திகேயன் சொற்ப சம்பளம் வாங்கிய காலத்தில் சில லட்சம் கொடுத்து அவரிடம் கால்ஷீட் வாங்கினார் ஞானவேல் ராஜா அதன் பிறகு சிவாவின் மார்க்கெட் ஜெட் வேகத்தில் உயர்ந்ததால் ஞானவேலுக்குக் கால்ஷீட் கிடைக்காமல் இருந்து வந்தது ஒரு கட்டத்தில் தமிழ் தயாரிப்பாளர்கள் சங்கத்தில் சிவாவும் ஞானவேலும் மாறி மாறி புகார்களைத் தெரிவித்து வந்தனர் ஒருவழியாக ஞானவேலுவுக்கு கால்ஷீட் தந்தார் சிவகார்த்திகேயன் அதன் பிறகும் இருவருக்கும் இடையே மனஸ்தாபம் இருந்ததுசமீபத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஃபைனான்ஸ் கொடுத்த ஜஸ்வந்த் பண்டாரி 39எனக்கு சிவா 13 கோடி ரூபாய் பணத்தை செட்டில் செய்யவில்லை அதனால் 39சீமராஜா39 படத்துக்குத் தடை போடுங்கள்39 என்று ரிலீஸுக்கு முந்தைய நாள் இரவு நெருக்கடி கொடுத்தார் நள்ளிரவில் திடீரென ஏற்பட்ட பணப் பிரச்னையால் மனம் நொந்துபோனார் சிவகார்த்திகேயன் அப்போது 39சிவா கொடுக்க வேண்டிய பணத்தை நான் தருகிறேன்39 என்று ஞானவேல் ராஜா கூறியுள்ளார் ஆனால் “பணத்தை நானே கொடுத்து விடுகிறேன் புகாரை வாபஸ் வாங்க சொல்லுங்கள் என சிவகார்த்திகேயன் கூறவே கடைசியாக ஜஸ்வந்த் பண்டாரி புகாரைத் திரும்பப் பெற்றார் அதன் பிறகே 39சீமராஜா39 ரிலீஸ் ஆனது ஏற்கெனவே ஞானவேலுவுக்கு ஒரு படத்துக்கு கால்ஷீட் கொடுத்து இருந்த சிவா 39சீமராஜா39 பட ரிலீஸுக்கு செய்த உதவியால் கண்கலங்கி நெகிழ்ந்துபோய் போனஸாக இன்னொரு படத்துக்கான கால்ஷீட்டைக் கொடுத்து ஞானவேல் ராஜாவுக்கு ஆனந்த அதிர்ச்சி கொடுத்துள்ளார்

Leave A Reply

Your email address will not be published.