திடீர் மின்வெட்டுக்குக் காரணம் என்ன? – மின்துறை அமைச்சர் தங்கமணியின் விளக்கம்

0 15

அதிமுக ஆட்சிக்கு வந்தால் மின் வெட்டு இருக்காது என்று 2011 தேர்தல் பிரசாரத்தில் ஜெயலலிதா சொன்னார் ஆனால் அவர் ஆட்சிக்கு வந்த பின்னும் மின் வெட்டு பிரச்னை தீரவில்லை பின்னர் தனியாரிடமிருந்து மின்சாரம் வாங்க ஒப்பந்தம் செய்யப்பட்ட பிறகு நிலைமை சீரானது இதன் பின்னர் மின் மிகை மாநிலமாக மாறி விட்டது என்று அப்போதைய மின் துறை அமைச்சர் நத்தம் விசுவநாதன் கூறி வந்தார் இப்போதைய மின் துறை அமைச்சர் தங்கமணியும் தமிழகம் மின் மிகை மாநிலமாக இருக்கிறது என்று சொல்லி வருகிறார் ஆனால் கடந்த வாரத்தில் திடீரென மதுரை திருநெல்வேலி கோவை மாவட்டங்களில் பல பகுதிகளில் அறிவிக்கப்படாத மின்வெட்டு ஏற்பட்டது இதனால் சாதாரண மக்கள் விவசாயிகள் தொழில்நிறுவனங்கள் கடுமையாகப் பாதிக்கப்பட்டனஉண்மை நிலவரம் என்ன என்று விசாரித்தோம் “தனியாரிடமிருந்து 3180 மெகாவாட் மின்சாரம் நீண்டகால அடிப்படையில் கொள்முதல் செய்யப்பட்டு வருகிறது இதையெல்லாம் வைத்துத்தான் மின் மிகை மாநிலம் என்று சொல்கிறார்கள் இப்போது தனியார் காற்றாலைகளிலிருந்து மின்சாரம் வாங்கிக் கொண்டிருந்தனர் ஆனால் காற்று அடிக்கும் காலம் முடிந்து விட்டதால் அதில் பற்றாக்குறை ஏற்பட்டிருக்கிறது இது தவிர நிலக்கரி போதுமான அளவு இருப்பு இல்லாததால் அனல் மின் நிலையங்களை இயக்க முடியவில்லை தமிழகத்தில் உள்ள அனல் மின் நிலையங்களை இயக்க 75 ஆயிரம் டன் நிலக்கரி தேவை எப்போதுமே தேவையை விட ஒரு மாதத்துக்கான நிலக்கரி இருப்பு வைக்கப்பட்டிருக்கும் ஆனால் அரசு நிலக்கரியை இருப்பு வைக்கவில்லை மேற்கு வங்கத்தில் மழை காரணமாக அங்கிருந்து வர வேண்டிய நிலக்கரி வரவு குறைந்துள்ளது இதுவும் மின்பற்றாக்குறைக்குக் காரணம் மின்வெட்டு செய்யப்போகிறோம் என்பதை யாருக்கும் அறிவிக்காமல் ரகசியமாகச் செய்திருக்கின்றனர்” என்றார் மத்திய மின் ஊழியர் கூட்டமைப்பின் மாநிலத் தலைவர் சுப்பிரமணிஇது குறித்து தமிழ்நாடு மின் துறை பொறியாளர் அமைப்பின் தலைவர் சாகாந்தியிடம் கேட்டோம் “தமிழகத்தில் உள்ள அனல் மின் நிலையங்களில் ஆண்டு பராமரிப்புப் பணிகள் மேற்கொள்வதற்காகத் தற்காலிகமாக மின் உற்பத்தி நிறுத்தப்பட்டிருந்தன அதே நேரத்தில் காற்று வீச வேண்டிய இந்த மாதம் காற்று வீசவில்லை இதனால் காற்றாலை மின்சாரம் கிடைக்கவில்லை எனவே மின் பற்றாக்குறை ஏற்பட்டிருக்கிறது 30 லட்சம் டன் நிலக்கரி வாங்க அரசு கொள்முதல் ஆர்டருக்கான டெண்டர் பணிகள் கடந்த ஆகஸ்ட் மாதம்தான் முடிவடைந்திருக்கிறது இந்த மின்வெட்டு என்பது தற்காலிகப் பிரச்னைதான் தற்காலிக மின்வெட்டு என்றாலும் கூட தினந்தோறும் வெளியிடப்படும் மின் உற்பத்தி மின் விநியோகம் குறித்த அறிக்கையில் மின் வெட்டு குறித்து குறிப்பிடப்படவில்லை ரகசியமாக மின் வெட்டை அமல்படுத்தி இருக்கின்றனர் இது தவறான ஒன்று  வழக்கமாக தமிழகத்தில் கோடைக்காலத்தில்தான் 17 ஆயிரம் மெகாவாட் மின்சாரம் தேவைப்படும் ஆனால் இப்போது அதே போன்ற தேவை வந்திருக்கிறது சென்னையில் ஒரு டிகிரி செல்சியஸ் வெப்பம் கூடினால் 750 மெகாவாட் மின்சாரம் கூடுதலாகத் தேவைப்படும் கூடுதலாகத் தேவைப்படும் மின்சாரத்தைச் சென்னைக்குக் கொடுத்து விட்டு கோவை மதுரை திருநெல்வேலி மூன்று மாவட்டங்களில் கிராமப்புறங்களில் மின் வெட்டை அமல்படுத்தி இருக்கின்றனர்” என்றார்மின் வெட்டுக்கான உண்மையான காரணம் என்ன என்று மின்துறை அமைச்சர் தங்கமணியிடம் விளக்கம் கேட்டோம் “நிலக்கரி இல்லாததால் மின்சாரம் உற்பத்தி ஆகவில்லை என்று சொல்ல முடியாது தேவையான நிலக்கரி இருப்பு இருக்கிறது கூடுதல் நிலக்கரி அடுத்தமாதம் முதல் வாரம் வந்து விடும் காற்றாலைகள் மூலம் மின்சாரம் கிடைக்கும்போது அனல் மின் நிலையங்கள் பராமரிப்புப் பணிகளுக்காக மூடப்படும் காற்று வீசும் காலம் தொடரும் என்று வானிலை அறிக்கையும் எங்களுக்குத் தரப்பட்டது அதை வைத்துத்தான்  அனல் மின் நிலையங்களில் பராமரிப்புப் பணி மேற்கொள்ளப்பட்டது இப்போது  காற்று வீசுவது திடீரென நின்று விட்டதால் மின் பற்றாக்குறை ஏற்பட்டது இப்போது அனல் மின் நிலையங்களை இயக்க ஆரம்பித்து விட்டோம் நிலைமை சீராகி விட்டது” என்றார்

Leave A Reply

Your email address will not be published.