டாடாவிடமிருந்து தீபாவளி பரிசு காத்திருக்கிறது! #டியாகோJTP

0 15

டாடா மோட்டார்ஸ் தனது டியாகோ JTP காரை அடுத்த மாதம் தீபாவளி சமயத்தில் வெளியிடப்போவதாக அறிவித்துள்ளது 2018 ஆட்டோ எக்ஸ்போவில் டியாகோ மற்றும் டிகார் காரின் பெர்ஃபார்மன்ஸ் மாடலான JTP கார்களை காட்சிப்படுத்தியிருந்தார்கள் இந்த மாடல்கள் எப்போது விற்பனைக்கு வரும் என்ற விவரங்கள் தெரியாமலிருந்த நிலையில் அடுத்தமாதம் விற்பனைக்கு வரவிருப்பதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளனடாடா மோட்டார்ஸும் கோவையைச் சேர்ந்த ஜெயம் ஆட்டோமோடிவ் நிறுவனமும் இணைந்து தயாரிக்கும் இந்த மாடல்களில் முதலில் விற்பனைக்கு வரவிருப்பது டிகார் JTP மட்டுமே நெக்ஸானில் இருக்கும்12 லிட்டர் டர்போசார்ஜ் ரெவ்ட்ரான் இன்ஜின் இதில் வரவுள்ளது 110 bhp பவரையும் 150 Nm டார்க்கையும் தரும்விதமாக இந்த இன்ஜின் டியூன் செய்யப்பட்டுள்ளது தற்போது இருக்கும் டியாகோ 85bhp பவரையும் 114Nm டார்க்கையும் மட்டுமே தருகிறது காரின் பர்ஃபாமன்ஸை அதிகரிக்க இன்டேக் மற்றும் எக்ஸாஸ்ட் மாற்றியமைக்கப்பட்டுள்ளது டியாகோவின் 5 ஸ்பீடு மேனுவல் கியார்பாக்ஸில் ஸ்போர்ட்டியான ரைடிங் கொடுப்பதற்காக கியர் ரேஷியோவில் சிறிய மாற்றம் செய்யப்பட்டதாகக் கூறியுள்ளார்கள் ஸ்போர்ட்டி ரைடுக்காக சஸ்பென்ஷனிலும் சிறிய மாற்றங்களைச் செய்துள்ளார்கள் கிரவுண்டு கிளியரன்ஸ் குறைந்துவிட்டது மெக்கானிக்கலாக மட்டுமல்லாமல் காரின் ஸ்டைலை மாற்றியிருக்கிறார்கள் பம்பரில் பெரிய ஏர் டேம் பெரிய ஹவுசிங் கொண்ட பனி விளக்குகள் பானெட் மற்றும் ஃபென்டரில் ஏர் வென்டுகள் ஸ்மோக்ட் புரொஜக்டர் லைட் சைடு ஸ்கர்ட் பின்பக்க டிஃப்யூசர் டைமன்ட்-கட் அலாய் வீல் காரின் நிறத்துக்கு எதிர்மறையான சிவப்பு நிற ஹைலைட்டுகள் என காரின் ஸ்டைலை முன்பைவிட ஸ்போர்ட்டியாக மாறியிருக்கிறதுகாரின் உள்பக்கம் லெதர் ஃபினிஷ் சீட் ஸ்டியரிங் அலுமினியம் பெடல் டேஷ்போர்டு கியர்பாக்ஸ் என முழுவதும் கறுப்பு மயம்தான் ஏசி வென்டுகிளிலும் சீட்டிலும் சிவப்பு நிறம் பளிச்சிடுகிறது டியாகோ NRG காரில் வரும் அதே 50 இன்ச் டர் ஸ்கிரீன் இன்ஃபோடென்மென்ட் சிஸ்டம் மற்றும் ஹார்மன் ஸ்பீக்கர்களை இந்தக் காரிலும் தருவதாகக் கூறியுள்ளார்கள் இந்தக் காரின் ஆக்சிலரேஷன் டாப் ஸ்பீடு பற்றிய தகவல்கள் இன்னும் ரகசியமாகவே உள்ளன தற்போது வரும் டியாகோவைவிட 1 லட்சம் முதல் 125 லட்சம் விலை கூடுதலாக இருக்கும் என்ற எதிர்பார்ப்பும் உள்ளது 7 லட்சம் என்ற ஆன்ரோடு விலையில் வெளிவந்தால் டியாகோ JTP இந்தியாவின் விலைகுறைவான ஹாட்ஹேச் காராக இருக்கும்

Leave A Reply

Your email address will not be published.