`சர்கார்’ ஆடியோ விழாவில் ரஜினி பங்கேற்பு?

0 14

ஒரு காலத்தில் ஒரு படத்துக்கு பூஜை போடும்போதே அந்தப் படத்தின் ரிலீஸ் தேதியை முன்கூட்டியே அறிவித்து  விநியோகஸ்தர்களுக்கு ஆனந்த அதிர்ச்சி கொடுப்பது ஏவிஎம் நிறுவனத்தின் வழக்கம் இப்போது விஜய் நடிக்கும் படத்தின் ஷூட்டிங் நடந்துகொண்டிருக்கும் போதே  தீபாவளி சரவெடியாக 39சர்கார்39 வெளிவருகிறது என்ற அறிவிப்பை வெளியிட்டது சன்பிக்சர்ஸ் விஜய் நடிக்கும் அனைத்து காட்சிகளும் படமாக்கப்பட்டு முடிந்தன  தற்போது போஸ்ட் புரொடக்‌ஷன் வேலைகளைப் பார்த்துப் பார்த்து செதுக்கி வருகிறார் டைரக்டர் ஏஆர்முருகதாஸ்அடுத்த அக்டோபர் மாதம் 39சர்கார்39 படத்தின் ஆடியோ விழாவை பிரமாண்டமாக நடத்த திட்டமிட்டு வருகிறது தயாரிப்பு தரப்பு சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் ஒரே நேரத்தில் விஜய்யின் 39சர்கார்39 ரஜினியின் 39பேட்ட39 படவேலைகள் நடப்பதால் நிச்சயம் 39சர்கார்39 ஆடியோ விழாவுக்கு சிறப்பு விருந்தினராக ரஜினி கலந்துகொண்டு விஜய்யை வாழ்த்துவார் என்று உறுதியாகச் சொல்கிறார்கள் ஏற்கெனவே விஜய் நடித்த 39வில்லு39 படத்தையும் அஜித் நடித்த 39ஏகன்39 படத்தையும் ஒரே நேரத்தில் தயாரித்தது ஐங்கரன் மூவீஸ் அப்போது நட்சத்திர ஹோட்டலில் நடந்த ஐங்கரன் மூவீஸ் தயாரிப்பாளர் அருண்பாண்டியன் பிறந்தநாள் விழாவில் விஜய்யும் அஜித்தும் குடும்பத்தோடு கலந்துகொண்டு குதூகலித்தனர்தமிழ்சினிமாவில் கடும்போட்டியாளர்களாக  இருந்துவரும் விஜய்யும் அஜித்தும் ஒரே விழாவில் கலந்துகொள்ளும்போது ரஜினியும் விஜய்யும் ஏன் 39சர்கார்39 விழாவில் கலந்துகொள்ளக்கூடாது என்று கேள்வி எழுப்புகிறது சினிமா வட்டாரம்

Leave A Reply

Your email address will not be published.