அறிவாலயம் நோக்கி வரும் அழகிரி ஆதரவாளர்கள்! – இணைப்புக்காக நடக்கும் தொடர் போராட்டம்

0 19

தமிழக இடைத்தேர்தல் தள்ளிப் போய்விட்டதால் மிகுந்த அப்செட்டில் இருக்கிறார் அழகிரி 39 கருணாநிதிக்குத் தொடர்ந்து புகழ் அஞ்சலி கூட்டங்களைத் தொடர்ந்து நடத்த இருக்கிறார் அழகிரி அவரைக் கட்சிக்குள் சேர்க்க வலியுறுத்தி கையெழுத்து இயக்கம் நடந்தது இதுதொடர்பாக அறிவாலயத்துக்கு நேரில் வர இருக்கிறோம்39 என்கின்றனர் அவரது ஆதரவாளர்கள் காவிரி டெல்டா பகுதிகளில் பெய்யக் கூடிய பருவமழையைக் காரணம் காட்டி தமிழகத்தில் நடக்க இருந்த இடைத்தேர்தலை ஒத்தி வைத்துவிட்டது தேர்தல் ஆணையம் இந்த அறிவிப்புக்கு முன்னதாக திருவாரூரில் உள்ள கருணாநிதியின் தாயார் அஞ்சுகத்தம்மாளின் நினைவிடத்துக்குச் சென்று அதிரடி காட்டினார் அழகிரி ` கருணாநிதிக்கென்று தனிப்பட்ட செல்வாக்கு இருப்பதால் நீங்கள் நிச்சயம் வெற்றி பெறுவீர்கள்39 என அழகிரி தரப்புக்கு அரசியல் ஆய்வாளர் ஒருவர் எடுத்துக் கூறியிருந்தார் இதையடுத்து திமுக தலைவர் ஸ்டாலினுக்கு சில விஷயங்களை உணர்த்துவதற்காக திருவாரூருக்குச் சென்றார் அழகிரி இதனைத் தொடர்ந்து இசை வேளாளர் சமூகப் பிரதிநிதிகளை அழைத்து கருணாநிதிக்குப் புகழ் அஞ்சலி கூட்டம் ஒன்றையும் நடத்தினார் இந்நிலையில் வரும் 13-ம் தேதி திண்டுக்கல்லில் கருணாநிதிக்குப் புகழ் அஞ்சலி கூட்டம் ஒன்றை நடத்த இருக்கிறார் அழகிரி அழகிரி ஆதரவாளர் ஒருவரிடம் பேசினோம் “ வரும் சனிக்கிழமை மாலை திண்டுக்கல் நாயுடு மகாலில் கருணாநிதிக்குப் புகழ் அஞ்சலி கூட்டம் நடக்க இருக்கிறது இடைத்தேர்தல் தள்ளிப் போனதில் கொஞ்சம் அப்செட்டில்தான் இருக்கிறார் திமுக போட்ட வழக்கும் ஆளும்கட்சியின் கடிதமும்தான் தேர்தலை நிறுத்துவதற்குக் காரணமாக அமைந்துவிட்டது `இடைத்தேர்தலை நடத்த மாட்டார்கள்39 என முன்கூட்டியே எங்களிடம் கூறினார் அழகிரி இதுதொடர்பாக அவர் பேசும்போது ` இப்போது தேர்தலை நடத்த மாட்டார்கள் நாடாளுமன்றத் தேர்தல் நேரத்தில்தான் நடத்துவார்கள்39 என உறுதியாகக் கூறினார் அவருக்கு யார் தகவல் சொன்னார்கள் என்று தெரியவில்லை திமுக தலைமையிடம் இருந்து இதுவரை எந்தப் பதிலும் வராததால் கருணாநிதிக்குத் தொடர்ந்து புகழ் அஞ்சலிக் கூட்டங்களை நடத்த இருக்கிறார் இதற்கிடையில் `கட்சிக்குள் அழகிரியைச் சேர்க்க வேண்டும்39 எனக் கூறி கையெழுத்து இயக்கம் நடத்தினோம் திமுகவில் அடிப்படை உறுப்பினராக இருக்கக் கூடியவர்களிடம் மட்டுமே கையெழுத்து பெறப்பட்டது ஒரு லட்சம் கையெழுத்துகளை வாங்க வேண்டும் எனத் திட்டமிட்டோம் இதுவரையில் பத்தாயிரம் பேர் கையெழுத்து போட்டிருக்கிறார்கள் இதற்கு ஆதாரமாக அவர்களின் உறுப்பினர் அடையாள அட்டையையும் இணைத்திருக்கிறோம் எங்களில் பலரைக் கட்சியில் இருந்து நீக்கிவிட்டார்கள் எனவே கட்சியில் இருந்து நீக்கப்படாத உறுப்பினர்களைத் திரட்டிக் கொண்டு போய் அறிவாலயம் செல்ல இருக்கிறோம் வரும் 20-ம் தேதிக்குள் கையெழுத்து இயக்கம் தொடர்பான ஆவணங்களைக் கொடுக்க இருக்கிறோம் அவர்கள் வாங்குகிறார்களோ இல்லையோ ` தொண்டர்களிடம் நம்முடைய செயல்பாடுகளைக் காட்டுவது முக்கியம்39 என நினைக்கிறார் அழகிரி கட்சிக்குள் சேர்க்கும் வரையில் அழகிரியின் போராட்டம் தொடரும் என்றார் விரிவாக அழகிரியின் நடவடிக்கைகள் குறித்துப் பேசும் திமுக முன்னணி நிர்வாகி ஒருவர் “ அரசியலில் எந்த நிகழ்வும் நடக்காமல் இருப்பதால் அழகிரி கொதிப்பில் இருப்பது இயல்பானதுதான் மெரினா பேரணியின்போது திமுகவின் முக்கிய மாவட்ட நிர்வாகிகளை நேரடியாகத் தொடர்பு கொண்டு பேசினார் அந்த நேரத்தில் அவரது பேச்சுக்கு யாரும் முக்கியத்துவம் தரவில்லை ஏழு ஆண்டுகளாக ஆட்சியில் இல்லாவிட்டாலும் கட்சி நிர்வாகிகள் பலரும் அழகிரிக்கு ஆதரவு கொடுப்பதில் எச்சரிக்கையாக இருந்தனர் எதாவது சம்பவம் நடந்தால்தான் அழகிரியால் ஆக்டிவ்வாக இருக்க முடியும் திருவாரூரில் இசைவேளாளர் சங்க நிர்வாகிகள் நடத்திய கூட்டத்திலும் மதுரையைச் சேர்ந்த சிலர்தான் கலந்து கொண்டனர் இரண்டே இரண்டு ஃபிளக்ஸ் பேனர்கள்தான் வைக்கப்பட்டிருந்தன திருவாரூர் தொகுதியில் இருந்தே பொதுமக்கள் யாரும் பெரிதாக கலந்து கொள்ளவில்லை மெரினாவிலும் அவர் எதிர்பார்த்த கூட்டம் கூடவில்லை கட்சிக்குள் எப்படியாவது சேர வேண்டும் எனத் தீவிரம் காட்டி வருகிறார் அவரது முயற்சியைப் பற்றி திமுக தலைமை பொருட்படுத்தவில்லை என்றார்  

Leave A Reply

Your email address will not be published.