“நீ எனக்கு ஓட்டுப் போட வேண்டாம்!’’ – கேள்வி கேட்ட இளைஞரிடம் தம்பிதுரை வாக்குவாதம்

0 25

தொகுதி மக்களிடம் மனு வாங்கப் போனபோது `நாலரை வருடமாகத் தொகுதிக்கே வரவில்லையே39 என்று கேள்வி கேட்ட இளைஞருடன் மக்களவைத் துணை சபாநாயகர் தம்பிதுரை வாக்குவாதம் செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது மக்களவைத் துணை சபாநாயகர் மற்றும் அதிமுக-வின் கொள்கைப் பரப்புச் செயலாளராகவும் இருக்கும் தம்பிதுரை கரூர் தொகுதி எம்பி-யாவார் நான்கு முறை கரூர் தொகுதியிலிருந்து எம்பி-யாகத் தேர்ந்தெடுக்கப்பட்டவர் எம்பி-யாக இருந்து இந்தத் தொகுதிக்கு உருப்படியா எதையும் செய்யவில்லை என்று மக்கள் அவர்மீது வெறுப்பாக இருப்பதாகச் சொல்லப்படுகிறது அடுத்த வருடம் தேர்தல் வர இருப்பதால் கடந்த இரண்டு மாதங்களாகத் தொகுதி முழுக்க விசிட் அடித்து மக்களிடம் கோரிக்கை மனுக்களை வாங்கிவருகிறார் பல இடங்களில் மக்கள் அவரை கேள்வி கேட்டு எதிர்ப்பு தெரிவித்துவருகிறார்கள் அந்த வகையில் கரூர் மாவட்டம் தாளியாப்பட்டி என்ற கிராமத்துக்கு இன்று தம்பிதுரை மனு வாங்கச் சென்றார் அப்போது அவரை முற்றுகையிட்ட மக்கள் நீங்க எம்பி-யாகி இத்தனை வருஷமாச்சு இப்பதான் உங்களுக்கு கண் தெரிஞ்சதா என்று கேள்விகளால் துளைத்தனர் விஜயகுமார் என்ற இளைஞர் நாலரை வருடமா வரலை இப்போ தேர்தல் வரப்போறதால் மனு வாங்கறதா வந்து ஏமாத்துறீங்களா என்று கேள்வி எழுப்பினார் இதனால் கோபமான தம்பிதுரை அந்த இளைஞரைப் பார்த்து இந்தா பாரு நான் ஒண்ணும் உன்னுகிட்ட ஓட்டுக் கேட்டு வரவில்லை நீ எனக்கு ஓட்டு போட வேண்டாம் நான் இந்தக் கிராமத்துக்கு பலமுறை வந்திருக்கிறேன் நீ இப்படி பேசுறது தப்பு இந்த நாடக மேடையை யாரு கட்டிக்கொடுத்தா எம்பி ஃபண்டுல நான்தான் கட்டிக்கொடுத்தேன் எனக்கு 30000 கிராமங்கள் இருக்கு இன்னைக்கு வந்துட்டுப்போனா திரும்பி வர அஞ்சு வருஷம் ஆவும் கடந்த ஆறு மாசமா தினமும் 50 கிராமத்துக்குப் போறேன் சும்மா வரலை வரலைன்னு சொல்லக் கூடாது 39தொகுதிக்கு வரலை39ன்னு சொல்றது இப்போதும் எங்கும் ஃபேஷனாகிவிட்டது உங்களுக்கு என்ன வேணும்னு கேளுங்க இதைச் செஞ்சு தாங்க அதைச் செஞ்சு தாங்கன்னு சொல்லுங்க அதை விட்டுட்டு 39நாலரை வருஷம் ஆச்சு நீங்க தொகுதிக்கே வரலை39ன்னு சொல்றதுல என்ன பலனும் கிடைக்கப்போவது இல்ல அந்த வார்த்தைகளைக் கேட்டுக் கேட்டு எனக்கு புளிச்சுப் போச்சு என்று கூறினார் தம்பிதுரை இப்படி தன்னிடம் கேள்வி கேட்ட அந்த இளைஞரிடம் நேருக்கு நேராகக் கோபத்துடன் வாக்குவாதம் செய்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது

Leave A Reply

Your email address will not be published.