கோவில்பட்டியில் உலக சிக்கன நாளில் உண்டியலில் சேமிப்பைத் தொடங்கிய பள்ளி மாணவர்கள்!

0 20

“தின்பண்டம் வாங்கக் கிடைக்கும் தொகையில் தினமும் ஒரு ரூபாய் வீதம் உண்டியலில் சேமிப்பேன்” எனக் கோவில்பட்டியில நடந்த உலக சிக்கன நாள் விழாவில் பள்ளி மாணவ மாணவிகள் உறுதி மொழி எடுத்துக்கொண்டு உண்டியலில் ஒரு ரூபாய் செலுத்தி சேமிப்பைத் தொடங்கினர் சர்வதேச சேமிப்பு வங்கிகளின் சிக்கன மாநாடு இத்தாலியில் உள்ள மிலான் நகரில் கடந்த 1924-ம் ஆண்டு நடைபெற்றது உலகின் பல நாடுகளிலிருந்தும் சேமிப்பு வங்கிகளின் பிரதிநிதிகள் கலந்துகொண்ட இந்த மாநாட்டில் உலக சிக்கன தினம் என ஒரு தினம் கடைப்பிடிக்கப்பட வேண்டும் எனவும் இந்தத் தினத்தில் சிக்கனத்தின் அவசியம் மற்றும் சேமிப்பின் முக்கியத்துவம் ஆகியவற்றைப் பற்றி மக்களுக்கு எடுத்துக் கூறக்கூடிய நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் எனவும் தீர்மானிக்கப்பட்டது அதன்படி ”சிக்கனமும் சேமிப்பும் பொருளாதார சம நிலையைப் பேணுகின்றன” என்ற கருப்பொருளை மையமாகக் கொண்டு ஒவ்வோர் ஆண்டும் அக்டோபர் 30-ம் தேதி ‘உலக சிக்கன நாள் கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது  சிக்கனமாக வாழ்ந்தால்தான் சேமிக்க முடியும் சேமித்தால்தான் மனிதனின் நிகழ்கால மற்றும் எதிர்காலத் தேவைகளைப் பூர்த்தி செய்ய முடியும் இதை உணர்த்தும் வகையில் தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் ரோட்டரி சங்கம் சார்பில் நகராட்சி தொடக்கப்பள்ளியில் சிக்கன நாள் விழா கடைப்பிடிக்கப்பட்டது சேமிப்பு பழக்கத்தை மாணவர்களிடமிருந்தே தொடங்கி வளர்க்கும் விதமாக இப்பள்ளியில் பயிலும் 120  மாணவ மாணவிகளுக்கு ஆப்பிள் மாம்பழம் அன்னாசிப்பழம் பூசணிக்காய் பொம்மை கிளி வீடு போன்ற பல வடிவங்களில் மண்ணால் ஆன உண்டியல்கள் வழங்கப்பட்டனதொடர்ந்து தின்பண்டம் வாங்குவதற்காகப் பெற்றோர்கள் தரும் தொகையில் தினமும் குறைந்தபட்சம் ஒரு ரூபாய் வீதம் உண்டியலில் சேமித்து வருவேன் இந்தச் சேமிப்புத் தொகை மூலம் நோட்டு பேனா புத்தகம் போன்ற எனது படிப்பு சம்பந்தமான பொருள்களை நானே வாங்கிக்கொள்வேன் சேமிப்பு பழக்கம் குறித்து வீட்டில் உள்ளவர்களிடமும் உறவினர்களிடம் எடுத்துச் சொல்லி அவர்களையும் சேமிக்க வைப்பேன்” என உறுதிமொழி எடுத்துக் கொண்டனர் உறுதிமொழிக்குப் பின்னர் அனைத்து மாணவ மாணவிகளும் தங்களது உண்டியலில் ஒரு ரூபாய் நாணயத்தைப் போட்டு தங்களது சேமிப்பை தொடக்கினர் 

Leave A Reply

Your email address will not be published.