பாபர் மசூதி இடிப்பு நாள் – சென்னையில் ரயில்நிலையங்களில் பலத்த சோதனை!

0 19

பாபர் மசூதி இடிக்கப்பட்ட தினமான இன்று சென்னையில் எழும்பூர் சென்ட்ரல் ரயில்நிலையங்களில் காவல்துறையினர் பலத்த சோதனையில் ஈடுபட்டனர் உத்தரப்பிரதேச மாநிலம் அயோத்தியில்  கடந்த 1992-ம் ஆண்டு டிசம்பர் 6-ம் தேதி பழைமையான பாபர் மசூதி இடித்து தகர்க்கப்பட்டது இக்கோரச்சம்பவம் நிகழ்ந்து இன்றுடன் 26 ஆண்டுகள் நிறைவடைந்து விட்டன நாட்டையே உலுக்கிய இச்சம்பவத்தில் பலர் கொல்லப்பட்டனர் இது தொடர்பான வழக்கை உச்சநீதிமன்றம் விசாரித்து வருகிறது ஆண்டுதோறும் இந்நாளை இஸ்லாமிய அமைப்புகள் துக்க நாளாகவும் கருப்பு தினமாகவும் அனுசரித்து வருகின்றனர்நாட்டின் பல முக்கிய நகரங்களில் நீதி கோரி இஸ்லாமிய அமைப்புகளால் ஆர்ப்பாட்டங்களும் பேரணிகளும் நடத்தப்படுவது வழக்கம் அந்த வகையில் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் ரயில்வே நிலையங்கள் விமான நிலையங்கள் உள்ளிட்ட இடங்களில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்சென்னையைப் பொறுத்தவரை பல்வேறு இடங்களில் சோதனை நடைபெற்று வருகிறது தனிப்படை  காவல் துணை கண்காணிப்பாளர் ரவி தலைமையிலான காவல்துறையின் எழும்பூர் சென்ட்ரல் ரயில்நிலையங்களில் நடைமேடைகளில் அமர்ந்திருப்பவர்களின் உடைமைகளை சோதனை செய்தனர் இதையடுத்து சோதனைகளுக்கு பிறகே ரயில்நிலையங்களில் பயணிகள் அனுமதிக்கப்படுகின்றனர்      

Leave A Reply

Your email address will not be published.