`தேள் கொடுக்கை நாம்தான் வெட்டணும்!’ – பேரவையில் அதிர்ந்த துரைமுருகன்; கலகலத்த ஓ.பி.எஸ்

0 9

மேக்கே தாட்டூவில் கர்நாடக அரசு அணை கட்டுவதற்கு எதிராக தமிழக சட்டப்பேரவையின் சிறப்புக் கூட்டத்தில் தனித்தீர்மானம் நிறைவேற்றப்பட்டது காவிரியின் குறுக்கே மேக்கே தாட்டூவில் அணை கட்டும் கர்நாடக அரசின் முடிவுக்கு எதிராக தமிழகத்தில் பல்வேறு தரப்பினரும் குரல் கொடுத்து வருகின்றனர் உச்ச நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக அணை கட்டும் முடிவு இருப்பதாகக் கூறி கர்நாடக அரசுக்கு எதிராகத் தமிழக அரசு உச்ச நீதிமன்றத்தில் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர்ந்திருக்கிறது அதேபோல் மேக்கே தாட்டூ விவகாரம் தொடர்பாக தவறான புரிதல் இருப்பதாகவும் இதுதொடர்பாக பேச்சுவார்த்தைக்கு நேரம் ஒதுக்கவும் கோரி கர்நாடக நீர்வளத்துறை அமைச்சர் சிவக்குமார் தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்குக் கடிதம் எழுதியிருந்தார்இந்த நிலையில் கர்நாடக அரசின் போக்கைக் கண்டித்துத் தீர்மானம் நிறைவேற்றும் வகையில் தமிழக சட்டப்பேரவையின் சிறப்புக் கூட்டம் இன்று கூட்டப்பட்டது இதில் மேக்கே தாட்டூவில் அணை கட்டும் கர்நாடக அரசின் முடிவுக்குக் கடும் கண்டனம் தெரிவித்து தீர்மானம் முன்மொழியப்பட்டது அந்தத் தீர்மானத்தில் “ஜெயலலிதா முதல்வராக இருந்தபோது அவரின் வழிகாட்டுதலின்படி கடந்த 5122014 2732015 ஆகிய நாள்களில் கர்நாடக அரசு மேக்கே தாட்டூவில் புதிய அணை கட்டக் கூடாது என ஒருமனதாக நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களைக் கருத்தில் கொள்ளாமலும் உச்ச நீதிமன்றத் தீர்ப்பில் குறிப்பிடப்பட்டுள்ளவாறு கீழ்ப்படுகை மாநிலங்களின் முன் அனுமதி பெறாமல் கர்நாடக அரசு எந்த ஒரு திட்டத்தையும் செயல்படுத்தக் கூடாது என்பதையும் மீறி தற்பொழுது கர்நாடக அரசு மேக்கே தாட்டூ அணை கட்டுவதற்கான ஆரம்பக் கட்டப் பணிகளைத் தொடங்க உள்ளதற்கும் மேக்கே தாட்டூவில் புதிதாக அணை கட்ட விரிவான திட்ட அறிக்கை தயாரிப்பதற்கு மத்திய நீர்வளக் குழுமம் 22112018 அன்று அனுமதி வழங்கியதற்கும் இம்மாமன்றம் கடும் கண்டனத்தையும் எதிர்ப்பையும் தெரிவித்துக்கொள்கிறது மத்திய நீர்வளக் குழுமம் வழங்கிய அனுமதியைத் திரும்பப்பெற அக்குழுமத்துக்கு மத்திய நீர்வள ஆதார அமைச்சகம் உடனடியாக உத்தரவிட வேண்டும் என்றும் இம்மாமன்றம் வலியுறுத்திக் கேட்டுக்கொள்கிறது காவிரி நடுவர் மன்ற இறுதி ஆணை மற்றும் உச்ச நீதிமன்றத் தீர்ப்பு ஆகியவற்றை மீறும் வகையில் கர்நாடக அரசோ அல்லது அதன் கீழ் இயங்கும் நிறுவனங்களோ கர்நாடகாவில் உள்ள காவிரிப் படுகையில் மேக்கே தாட்டூ அல்லது வேறு எந்த ஓர் இடத்திலும் தமிழ்நாட்டின் இசைவின்றி எந்தவிதக் கட்டுமானப் பணிகளையும் மேற்கொள்ளக் கூடாது என்று கர்நாடக அரசுக்கு மத்திய அரசு உத்தரவிட வேண்டும் என்று இம்மாமன்றம் கேட்டுக்கொள்கிறது’’ என்று குறிப்பிடப்பட்டிருக்கிறது தீர்மானம் குறித்து பேசிய துணை முதல்வர் ஓபன்னீர்செல்வம் “மேக்கே தாட்டூ அணை தொடர்பாக 2 வழக்குகள் நிலுவையில் உள்ளன இந்த நிலையில் சட்டத்துக்குப் புறம்பாக கர்நாடக அரசு அணை கட்டுவது தவறு என்பதை வலியுறுத்தி தொடரப்பட்ட வழக்கும் நிலுவையில் உள்ளது காவிரிப் படுக்கையில் எந்த அணையும் கட்டக்கூடாது என்பதுதான் எங்கள் வாதம் மத்தியில் ஆட்சியில் இருப்பவர்கள் தேனாகப் பேசித் தேளாகக் கொட்டுவார்கள் என அண்ணா கூறியிருக்கிறார்’’ என்று திட்டத்துக்கு அனுமதி வழங்கிய மத்திய அரசைச் சாடினார் இதுகுறித்து பேசிய திமுக பொருளாளர் துரைமுருகன் தேளின் கொடுக்கை நாம்தான் வெட்ட வேண்டும் என்று குறிப்பிட்டார் இந்தத் தீர்மானத்தின் மீது உரையாற்றிய எதிர்க்கட்சித் தலைவர் ஸ்டாலின் மேக்கே தாட்டூ அணை விவகாரம் தொடர்பாக சட்டப்பேரவையின் சிறப்புக் கூட்டத்தைக் கூட்டியதற்கு நன்றி தெரிவித்தார் மேலும் அவர் கூறுகையில் “கஜா புயலின் வடு ஆறுவதற்குள் மேக்கே தாட்டூ அணைக்கு அனுமதி அளித்தது வருத்தமளிக்கிறது காவிரி மேலாண்மை ஆணையத்தின் 9 பேர் கொண்ட குழுவில் மாநிலத்தின் சார்பில் ஒருவர்கூட இடம்பெறவில்லை அதேபோல் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கப்பட்டு 189 நாள்களாகியும் இன்று வரை முழுநேரத் தலைவர் நியமிக்கப்படவில்லை முழுநேரத் தலைவரை நியமிக்க தமிழக அரசு வலியுறுத்தாதது ஏன் தமிழகம் முழுமையாக வஞ்சிக்கப்பட்டுள்ளது மத்திய அரசைக் கண்டித்துத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டிருக்க வேண்டும் இருப்பினும் மக்கள் நலனுக்காக திமுக இந்தத் தீர்மானத்தை முழுமையாக ஆதரிக்கிறது’’ என்றார் அதேபோல் இந்தத் தீர்மானத்தைக் காங்கிரஸ் கட்சி ஆதரிப்பதாக அக்கட்சியின் சட்டப்பேரவைக் குழுத் தலைவர் கேஆர்ராமசாமி ஆதரித்துப் பேசினார் தீர்மானத்தை முன்மொழிந்து முதல்வர் எடப்பாடி பழனிசாமி பேசினார் அவர் பேசுகையில் “ ஒட்டுமொத்த தமிழக மக்களின் உணர்வுகளைப் பிரதிபலிக்கும் வகையில் மேக்கே தாட்டூ அணைக்கு எதிரான தீர்மானத்தை முன்மொழிகிறேன் மேக்கே தாட்டூவில் அணைகட்ட மத்திய நீர்வள ஆணையம் அனுமதி அளித்தது அனைவரையும் கொதிப்படைய வைத்துள்ளது இந்தத் தீர்மானத்தை உறுப்பினர்கள் அனைவரும் ஒருமனதாக நிறைவேற்றித் தர வேண்டும்’ என்றார்

Leave A Reply

Your email address will not be published.