20 ஆண்டுகளாக மாற்றுத்திறனாளிகளுக்கு ஏணியாக இருக்கும் இன்ஸ்பெக்டர் சிவமணி!

0 10

சென்னையில் பணியாற்றும் இன்ஸ்பெக்டர் சிவமணி கடந்த 20 ஆண்டுகளாக மாற்றுத்திறனாளிகளுக்கு தன்னால் முடிந்த உதவிகளைச் செய்துவருகிறார் மாற்றுத்திறனாளிகள் மீது ஏன் இன்ஸ்பெக்டர் சிவமணி பாசம் காட்டுகிறார் என்று விசாரித்தால் அவரின் மனித நேயமும் உதவிசெய்யும் குணமும்தான் காரணம் என்கின்றனர் அவருடன் பணியாற்றிய சக காவலர்கள் தமிழக காவல்துறையில் பணியாற்றும் காவல் அதிகாரிகளில் சிலர் சத்தமில்லாமல் பலருக்கு உதவிகளைச் செய்துவருகின்றனர் அவர்களில் இன்ஸ்பெக்டர் சிவமணியும் ஒருவர் காக்கிக்குள்ளும் கருணை உள்ளம் இருக்கிறது என்பதை சிவமணி நிரூபித்துக் காட்டிவருகிறார்  காக்கிச் சீருடையில் கம்பீரமாக காட்சியளிக்கும் இன்ஸ்பெக்டர் சிவமணி மாற்றுத்திறனாளிகளை எங்கு கண்டாலும் ஓடோடிச் சென்று உதவிகளைச் செய்வார் தண்டையார்பேட்டை காவல் நிலையத்தில் அவர் பணியாற்றியபோது அந்தப்பகுதியில் மாற்றுத்திறனாளிகளைப் பார்த்தால் அவர்களை ஜீப்பில் ஏற்றிச் சென்று இறக்கிவிடுவார் இன்ஸ்பெக்டர் சிவமணி தற்போது உளவுப்பிரிவில் பணியாற்றுகிறார் திருப்பூர் உடுமலை வல்லக்கொண்டாபுரம் கிராமத்தைச் சேர்ந்தவர் இன்ஸ்பெக்டர் சிவமணி இவர் தமிழக காவல்துறையில் சப்-இன்ஸ்பெக்டராக கடந்த 97-ல் சேர்ந்தார் பயிற்சி முடிந்து நெல்லை மாவட்டம் சுத்தமல்லி காவல் நிலையத்தில் சப்-இன்ஸ்பெக்டராக பணியைத் தொடங்கினார் வள்ளியூர் செங்கோட்டை வீரவநல்லூர் காவல் நிலையங்களில் வேலை பார்த்தார் பிறகு 2001-ல் அமைச்சர் ஜெயக்குமாருக்கு பாதுகாப்பு அதிகாரியாக பணியாற்றினார் 2006-ல் பதவி உயர்வு பெற்று எம்கேபிநகர் காவல் நிலையத்தில் இன்ஸ்பெக்டராக பணியாற்றினார் கிண்டி செம்பியம் புதுவண்ணாரப்பேட்டை தண்டையார்பேட்டை மணலிபுதுநகர் ஆர்கேநகர் சிந்தாரிப்பேட்டை ஆகிய காவல் நிலையங்களில் பணியாற்றினார்இன்ஸ்பெக்டர் சிவமணி மாற்றுத்திறனாளிகளுக்கு உதவுவதற்கு இதுவும் ஒரு காரணம் அதாவது அவரின் சகோதரியும் மாற்றுத்திறனாளி என்பதால் சிறுவயது முதலே மாற்றுத்திறனாளிகளுக்கு உதவி செய்துவந்துள்ளார் காவல்துறையில் சேர்ந்தபிறகு தன்னால் முடிந்த உதவிகளைத் தொடர்ந்து செய்துவருகிறார் கடந்த 20 ஆண்டுகளாக  பல மாற்றுத்திறனாளிகளுக்கு வழிகாட்டியாக இருந்துவருகிறார் சிவமணி மீது மாற்றுத்திறனாளிகளுக்கு தனிப்பட்ட மரியாதை பாசம் உள்ளது  நெல்லை மாவட்டம் வீரவநல்லூர் பகுதியைச் சேர்ந்த பொன்னுதுரை என்ற மாற்றுத்திறனாளிக்கு திருமணத்தை முன்னின்று நடத்தி வைத்துள்ளார் அவருக்கு அரசு மூலம் வீடு கட்ட வழிவகுத்துள்ளார் இதுகுறித்து பொன்னுதுரையிடம் கேட்டதற்கு `சிவமணி சார்தான் எனக்கு உதவி செய்துவருகிறார் மாதந்தோறும் அவரால் முடிந்த பணம் அனுப்புவார் அதைக்கொண்டுதான் வாழ்ந்துவருகிறேன் எனக்கு 90 சதவிகிதத்துக்கு மேல் ஊனம் என்பதால் என்னால் எந்த வேலையும் செய்ய முடியவில்லை அவர்தான் என்னை வாழவைக்கும் கடவுள் என்றார் கண்ணீருடன்  மாற்றுத்திறனாளிகளின் வாழ்வாதாரத்துக்கு ஏணியாக இருந்துவரும் சிவமணி குறித்து பெரம்பூரைச் சேர்ந்த மாற்றுத்திறனாளி சீனிவாசன் கூறுகையில் “காவல்துறையில் சிவமணி சார்போல இருப்பவர்கள் அரிது மாற்றுத்திறனாளிகளுக்கு தன்னால் முடிந்த உதவிகளைச் செய்வார் என்றார் நெல்லை மாவட்டம் களக்காடு பகுதியைச் சேர்ந்த வினயப்பெருமாளுக்கு இன்ஸ்பெக்டர் சிவமணி அளித்த ஊக்கத்தாலும் உற்சாகத்தாலும் அவர் வாழ்ந்துகொண்டிருக்கிறார் பெட்டிக்கடை வைத்து அதன்மூலம் கிடைக்கும் வருமானத்தில் அவரின் குடும்பம் உள்ளது சமீபத்தில் அவருக்கு அழகான பெண் குழந்தை பிறந்துள்ளது மாற்றுத்திறனாளிகளுக்கு மட்டுமல்லாமல் காவல்துறையிலும் நேர்மையாகவும் சிறப்பாகவும் பணியாற்றும் சிவமணியின் மனிதநேய பணிகள் பாராட்டுதலுக்குரியது காவல்துறையில் சிறப்பாக பணியாற்றியதால் கடந்த ஆர்கேநகர் இடைத்தேர்தலின்போது ஆர்கேநகர் காவல் நிலையத்துக்கு இன்ஸ்பெக்டராக தேர்தல் ஆணையம் இவரை நியமித்தது  மணலி புதுநகர் காவல் நிலையத்தில் பணியாற்றிய போது மைனர் பெண்ணை மிரட்டி காதலிக்க வற்புறுத்திய வாலிபர் கடைசியில் அந்தப் பெண்ணைக் கொலை செய்தார் இந்த வழக்கில் கைதான வாலிபருக்கு சமீபத்தில் திருவள்ளூர் நீதிமன்றம் தண்டணை கொடுத்துள்ளது இன்ஸ்பெக்டர் சிவமணியிடம் பேசியபோது “மாற்றுத்திறனாளிகளும் மனிதர்கள்தான் அவர்களும் இந்த உலகில் நம்மில் ஒருவராக வாழ்ந்துகொண்டிருக்கிறார்கள் அவர்களுக்கு முடிந்தளவு உங்களால் முடிந்த உதவிகளைச் செய்யுங்கள் ஒரு நாள் முழுவதும் கண்ணைக் கட்டிக்கொண்டு வாழ்ந்து பாருங்கள் அப்போது புரியும் மாற்றுத்திறனாளிகளின் வேதனைகளும் வலிகளும் என்னால் முடிந்த உதவிகளை செய்துவருகிறேன் அதை நான் என்றுமே விளம்பரப்படுத்த விரும்பியதில்லை என்றார் 

Leave A Reply

Your email address will not be published.