`ஓர் இடத்தில்கூட தி.மு.க வெற்றி பெறக் கூடாது!’ – தொகுதிக்கு 100 கோடி பட்ஜெட்?

0 9

கொங்கு மண்டலத்தில் தேர்தல் வியூகங்களை வகுத்து வருகிறது ஆளும்கட்சி `கொங்கு மண்டலத்தில் திமுக வீக்காக இருப்பதால் ஈஆர்ஈஸ்வரன் உள்ளிட்டவர்களுடன் பேச்சு நடத்தி வருகின்றனர் ஒரு சீட்டைக்கூட திமுக வென்றுவிடக் கூடாது என்பதில் அமைச்சர்கள் உறுதியாக உள்ளனர்39 என்கின்றனர் அதிமுக நிர்வாகிகள் நாடாளுமன்றத் தேர்தலுக்கான ஆயத்தப் பணிகளில் ஈடுபட்டுள்ளது திமுக தலைமை காங்கிரஸ் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் உள்ளிட்ட கட்சிகளோடு வேறு சில கட்சிகளும் திமுக தலைமையிலான அணிக்குள் வரவிருக்கின்றன ஐந்து மண்டலங்களிலும் வெற்றி வாய்ப்பு எப்படியிருக்கிறது என்பதைப் பற்றியும் விரிவான ஆய்வுகளை நடத்தியிருக்கிறது திமுக அதில் அவர்களுக்கு மிகுந்த கவலையை அளித்த இடமாகக் கொங்கு மண்டலம் இருக்கிறது தமிழக முதல்வர் உட்பட சீனியர் அமைச்சர்கள் பலரும் கொங்கு மண்டலத்தில் இருப்பதால் அந்தப் பகுதிகளை மிகுந்த செல்வாக்குடன் வைத்திருக்கின்றனர் கடந்த தேர்தலில் அதிமுக-வுக்கு அதிக வெற்றியைக் கொடுத்ததும் கொங்கு மண்டலம்தான் முந்தைய காலகட்டங்களைப்போல திமுக-வுக்குப் பெயர் சொல்லக்கூடிய மாவட்டச் செயலாளர்கள் அங்கு இல்லை இந்தப் பலவீனத்தைத் தனக்கான பலமாகப் பார்க்கிறது ஆளும்கட்சி 10 நாடாளுமன்றத் தொகுதிகள் 80 சட்டமன்றத் தொகுதிகள் என மேற்கு மண்டலத்தை மிக முக்கியமானதாகப் பார்க்கிறார் எடப்பாடி பழனிசாமி `பிற மண்டலங்களில் சரிவு ஏற்பட்டாலும் கொங்கு மண்டலம் கைகொடுக்கும்39 என அமைச்சர்கள் நம்புகின்றனர் எனவேதான் `ஒரு எம்பி தொகுதிக்கு 100 கோடி செலவானாலும் பரவாயில்லை கொங்கு மண்டலத்தில் உள்ள 10 தொகுதிகளையும் நாம் கைப்பற்றியாக வேண்டும் ஒரு சீட்டில்கூட திமுக வெற்றி பெற்றுவிடக் கூடாது39 என வரிந்து கட்டிக்கொண்டு தேர்தல் வேலைகளைப் பார்க்கத் தொடங்கிவிட்டனர் இதை அறிந்து வைத்திருக்கும் திமுக-வும் கொங்கு மண்டலத்தில் சில வேலைகளைச் செய்யத் தொடங்கியிருக்கிறது இதைப் பற்றி நம்மிடம் பேசிய திமுக முன்னணி நிர்வாகி ஒருவர் “வடமாவட்டங்களில் வெற்றியைப் பெற பாமக அவசியம் என துரைமுருகன் உள்ளிட்ட சீனியர்கள் வலியுறுத்தியதைப்போலவே கொங்கு மண்டலத்துக்கும் சில திட்டங்களை அவர்கள் முன்வைத்துள்ளனர் கடந்த சட்டமன்றத் தேர்தலில் திமுக-வுக்குக் கிடைத்த தோல்விக்கு மிக முக்கியமான காரணம் கட்சியின் முக்கிய நிர்வாகிகள் தேர்தல் வேலை பார்க்காமல் புறக்கணித்ததுதான் இதுகுறித்து அறிவாலயத்தில் நடந்த ஆய்வுக் கூட்டத்தில் கோவை வடக்குத் தொகுதியில் போட்டியிட்ட மீனா லோகு பகிரங்கமான குற்றச்சாட்டுகளை முன்வைத்தார் `நான் ஒருத்தி ஜெயிக்கக் கூடாது என மாவட்ட நிர்வாகிகள் வேலை பார்த்தனர் இப்போது மொத்தமாக அந்தம்மா (ஜெயலலிதா) பின்னால் போய்விட்டது39 எனக் கொதித்தார் இந்தக் குற்றச்சாட்டை ஆய்வு செய்த ஸ்டாலினும் மாவட்ட நிர்வாகிகளை மாற்றியமைத்தார் ஆனால் வெற்றி பெறுவதற்கு நிர்வாகிகள் மாற்றம் மட்டும் போதாது என்பதால் கொங்குநாடு மக்கள் தேசியக் கட்சியின் பொதுச் செயலாளர் ஈஆர்ஈஸ்வரனோடு பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர் திமுக நிர்வாகிகள் கொங்கு மண்டலத்தில் செல்வாக்காக இருக்கும் பிரதான கட்சி ஒன்றை சேர்த்துக்கொண்டால் வெற்றி கிடைக்கும் என நம்புகிறார் ஸ்டாலின் இதனால் ஆளும்கட்சிக்குச் செல்லக்கூடிய வேளாளர் சமூக வாக்குகள் சிதறக்கூடிய வாய்ப்பு உருவாகும் மேலும் ஆளும்கட்சிக்கு எதிரான வாக்குகளும் சிறுபான்மையின சமூக வாக்குகளும் திமுக அணிக்கு வந்து சேரும் எனக் கணக்குப்போடுகிறார் இன்னும் சில வாரங்களில் இந்தத் திட்டம் இறுதி வடிவம் பெற இருக்கிறது இதை அறிந்து தங்களுக்கு எதிரான சிறு கட்சிகளையும் ஆளும்கட்சிக்குள் கொண்டு வரக்கூடிய வேலைகளைத் தொடங்கிவிட்டனர் கொங்கு அமைச்சர்கள் இதற்கான பேரங்களும் நடந்துகொண்டிருக்கின்றன என்றார் விரிவாக 

Leave A Reply

Your email address will not be published.