`நாம பேசி தீர்க்கலாம்; நேரம் ஒதுக்குங்கள்!’ – முதல்வர் பழனிசாமிக்கு கர்நாடக அமைச்சர் கடிதம்

0 11

மேக்கே தாட்டூ அணை தொடர்பாக விவாதிக்க வேண்டும் எனக் கூறி தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கு கர்நாடக அமைச்சர் சிவகுமார் கடிதம் எழுதியுள்ளார்கர்நாடகத்தில் காவிரி ஆற்றின் குறுக்கே மேக்கே தாட்டூ என்ற இடத்தில் ரூ5912 கோடி செலவில் புதிய அணை கட்டுவதற்கான சாத்தியக்கூறு அறிக்கையை மத்திய நீர்வளத்துறையிடம் தாக்கல்செய்து புதிய அணை கட்ட ஒப்புதல் வழங்கும்படி கோரியுள்ளது கர்நாடக அரசு  கர்நாடகாவின் இந்த கோரிக்கையை ஆய்வுசெய்யப்போவதாக மத்திய அரசு அறிவித்திருப்பது தமிழகத்தில் பெரும் புயலைக் கிளப்பியுள்ளது இதற்குக் கண்டனம் தெரிவித்து தமிழகத்தின் எதிர்க்கட்சிகள் ஆங்காங்கே ஆர்ப்பாட்டம் நடத்திவருகின்றன இந்த விவகாரம் தொடர்பாக விவாதிப்பதற்காக இன்று மாலை தமிழக சட்டசபை கூடுகிறது இந்த நிலையில் மேக்கே தாட்டூ அணை தொடர்பாக விவாதிக்கலாம் எனக் கூறி தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கு கர்நாடக பாசனத்துறை அமைச்சர் டிகேசிவகுமார் கடிதம் எழுதியுள்ளார் அதில் “அணை தொடர்பாக உங்களைச் சந்திக்க நேரம் ஒதுக்க வேண்டும் மேக்கே தாட்டூ விவகாரத்தைச் சுமுகமாக பேசித்தீர்க்கவே கர்நாடக அரசு விரும்புகிறது அதேபோல் காவிரி பிரச்னைக்கு நிரந்தரத்தீர்வு காணக் கர்நாடக அரசும் மக்களும் விரும்புகிறோம் மேக்கே தாட்டூவில் அணை கட்டப்பட்டால் மேட்டூர் அணை உபரிநீர் கடலில் கலப்பதை தடுக்கலாம் மேக்கே தாட்டூ அணை குறித்து தமிழக மக்கள் தமிழக அரசு நினைப்பது வேறு ஆனால் உண்மை நிலை வேறு என்று கூறியுள்ளார் இதற்கிடையே கர்நாடக அமைச்சரின் கோரிக்கையை தமிழக சட்டத்துறை அமைச்சரின் நிராகரித்துள்ளார் “கர்நாடகாவுக்கு எதிராக நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடரப்பட்டுள்ளதால் பேச்சுவார்த்தைக்கு வாய்ப்பில்லைஎன அவர் திட்டவட்டமாக கூறியுள்ளார்

Leave A Reply

Your email address will not be published.