`ஒரே இரவில் இப்படிப் பண்ணிட்டாங்க; எங்க குடும்பம் என்னாகும்?’- ஸ்விக்கி ஊழியர்கள் கண்ணீர்

0 10

இணைய உணவு டெலிவரி நிறுவனமான ஸ்விக்கியின் ஊழியர்கள் கடந்த இரண்டு நாள்களாக சென்னையின் பல்வேறு பகுதிகளில் போராட்டம் நடத்திவருகின்றனர்  ‘பழைய சம்பளத்தையே வழங்க வேண்டும் ஊக்கத் தொகையை வெளிப்படையாக மாற்றியமைக்க வேண்டும் இரவில் டெலிவரி செய்யும்போது போலீஸ் கெடுபிடிகள் அதிகம் இருப்பதாகவும் அது தொடர்பாக காவல் துறையினரிடம் ஸ்விக்கி நிர்வாகம் ஆலோசனை நடத்த வேண்டும்’  போன்ற கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டம் நடத்திவருகின்றனர் ஸ்விக்கி நிறுவனத்துக்கும் ஊழியர்களுக்கும் இடையே உள்ள கருத்து வேறுபாடு போராட்டத்தின் முக்கியக் காரணம் ஆகியவைகுறித்து சில ஊழியர்கள் பகிர்ந்துகொண்டனர் நாங்கள் தினமும் காலை ஏழு மணி முதல் இரவு 12 மணிவரை பல பகுதிகளில் டெலிவரி செய்து வருகிறோம் சில சமயங்களில் அதிகாலை 3 மணிக்குக்கூட டெலிவரி செய்துள்ளோம் எங்களுக்கு சம்பள உயர்வு நிர்வாகம் எங்களை ஏமாற்றிவிட்டதுபோன்ற காரணங்களுக்காகப் போராடவில்லை கடந்த 8 மாதங்களுக்கு முன் ஒரு டெலிவரி எடுத்தால் அதற்கு 40 ரூபாயும் ஒரே நேரத்தில் இரண்டு டெலிவரி எடுத்தால் அதற்கு கூடுதலாக 20 ரூபாயும் சம்பளமாக வழங்கப்பட்டுவந்தது அப்போது நாங்கள் மிகவும் மகிழ்ச்சியாக இருந்தோம் அந்தச் சமயத்தில்தான் ஸ்விக்கியில் இன்னும் அதிகமான ஊழியர்கள் வேலைக்குச் சேர்ந்தனர்  அதன் பின்னர் 40 ரூபாய் டெலிவரி 36 ரூபாயாகக் குறைக்கப்பட்டது பின்னர் 20 ரூபாய்16 ரூபாயாகக் குறைக்கப்பட்டது இதற்கு நிர்வாகம் பல காரணங்களை கூறியது அப்போதும் எங்கள் தரப்பில் இருந்து சில எதிர்ப்புகளைத் தெரிவித்தோம் இருந்தும் நிர்வாகம் அதற்கு செவி சாய்க்கவில்லை அதை நாங்களும் பெரிதாக எடுத்துக்கொள்ளாமல் தொடர்ந்து எங்கள் வேலையைச் செய்துவந்தோம் ஆனால் தற்போது 36 ரூபாய் டெலிவரி 35 ரூபாயாகக் குறைக்கப்பட்டுள்ளது மேலும் 20 ரூபாய் டெலிவரி 10 ரூபாயாகக் குறைக்கப்பட்டுள்ளது ஒரு கிலோ மீட்டருக்கு ஒரு ரூபாய் என்ற கணக்கில் மட்டுமே தற்போது எங்களுக்கு சம்பளம் வரையறுக்கப்பட்டுள்ளது கடந்த வாரம் 7 கிலோமீட்டர் தொலைவில் டெலிவரி செய்தால் அதற்கு 70 ரூபாய் வந்தது அதுவே மறுநாள் அதே 7 கிமீ டெலிவரிக்கு 45 ரூபாய் மட்டுமே வழங்கினர் ஒரே இரவில் எங்களில் சம்பளம் குறைக்கப்பட்டது எங்களுக்கு ஒரு நாளுக்கு உணவு டீ பெட்ரோல் போன்ற பல செலவுகள் உள்ளன நாங்கள் இன்னும் அதிக சம்பளம் வேண்டும் என கோரிக்கை வைக்கவில்லை முன்னதாக வழங்கிய அதே சம்பளத்தை மட்டும் வழங்கினால் போதும் என்றே இந்த போராட்டத்தை நடத்திவருகிறோம் இங்குப் போராட்டம் நடத்தும் அனைவருக்கும் குடும்பம் உள்ளது எங்கள் தேவைகளையும் குடும்பத்தின் தேவைகளையும் பூர்த்திசெய்துகொண்டு எங்களின் குழந்தைகளின் வருங்காலத்துக்காகவும் சேர்த்துவைக்க வேண்டும் இந்தச் சம்பளத்தில் அது கண்டிப்பாக சாத்தியம் இல்லை முதலில் வழங்கப்பட்ட ரூ40 கூட கேட்கவில்லை 36 ரூபாய் மற்றும் 20 ரூபாய் கொடுத்தால் போதும் என்பதே எங்களின் கோரிக்கை எங்கள் போராட்டத்தினால் பல வாடிக்கையாளர்கள் கடும் சிரமம் அடைந்துள்ளனர் என்பது எங்களுக்குத் தெரிகிறது அவர்களிடம் நாங்கள் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறோம் மேலும் எங்களுக்கு வழங்கப்படும் இந்தச் சம்பளமே போதும் என சில ஊழியர்கள் போராட்டத்தில் கலந்துகொள்ளாமல் நிர்வாகத்துக்கு ஊக்கமளித்துவருகின்றனர் அவர்களுக்கு நாங்கள் நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறோம் ஏனெனில் போராட்டம் காரணமாக நாங்கள் ஏமாற்றிய வாடிக்கையாளர்களை அவர்கள் திருப்திபடுத்தியுள்ளனர் இந்தச் சம்பளம் உங்களுக்கு போதுமானதாக இருக்கலாம் ஆனால் எங்களின் குடும்ப நிலையைக் கருதி இதுபோன்ற பிரச்னைகளில் மற்ற ஊழியர்களும் எங்களுக்கு உதவ வேண்டும் எனக் கேட்டுக்கொள்கிறோம் இந்த விவகாரம் தொடர்பாக வரும் திங்கள்கிழமை தங்களின் முடிவை அறிவிப்பதாக நிர்வாகம் தெரிவித்துள்ளது நிர்வாகத்தின் முடிவைப் பொறுத்தே எங்களின் அடுத்தகட்ட நகர்வு இருக்கும் இதே நிலை நீடிக்குமானால் எங்களின் போராட்டம் இன்னும் வலுவடையும் ஸ்விக்கி நிறுவனத்தை அசிங்கப்படுவது எங்கள் நோக்கம் இல்லை கூடுதல் சம்பளமும் நாங்கள் கேட்கவில்லை முன்னதாக வழங்கிய சம்பளத்தை மட்டுமே கேட்கிறோம்” எனப் பேசி முடித்தனர் 

Leave A Reply

Your email address will not be published.