விஜய் ரசிகர்களை `ஸ்கெட்ச்’ போட்டுத் தூக்கியது எப்படி?- விவரிக்கும் போலீஸ் 

0 12

`சர்கார்39 படத்துக்கு அதிமுக-வினர் எதிர்ப்பு தெரிவித்ததும் ஆத்திரமடைந்த விஜய் ரசிகர்கள் அரிவாளை வைத்து கொலை மிரட்டல் விடுத்தனர் அதில் இரண்டு பேரை போலீஸார் கைதுசெய்துள்ளனர் தீபாவளியையொட்டி நடிகர் விஜய் நடித்த `சர்கார்39 படம் திரையிடப்பட்டது இந்தப் படத்தில் வில்லி கதாபாத்திரம் முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவை விமர்சிப்பதாக அதிமுக-வினர் குற்றம் சாட்டினர் மதுரையில் 39சர்கார்39 படம் திரையிடப்பட்ட தியேட்டரில் அதிமுக–வினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர் தொடர்ந்து தமிழகம் முழுவதும் அதிமுக -வினர் சர்கார் படத்துக்கு எதிர்ப்பு தெரிவித்ததால் சர்ச்சைக்குரிய படக்காட்சிகள் நீக்கப்பட்டன இந்த நிலையில் கையில் அரிவாளுடன் விஜய் ரசிகர்கள் இருவர்  ‘‘மொத்த விஜய் ரசிகர்களும் ஒண்ணு சேர்ந்தா அதிமுக-வில் ஒருத்தன்கூட உசுரோட இருக்க மாட்டீங்க வந்து நேரா அறுத்துப்போட்டுட்டு போய்டுவோம் ஆனா எங்களால தளபதி விஜய்க்கு கெட்ட பேர் வந்துடும்னு அடங்கிப்போறோம் உங்க உசுரெல்லாம் தளபதி கையில் இருக்கு ஞாபகம் வெச்சுக்கங்க நாளை காசி தியேட்டர் அருகில் வருகிறேன் நீங்கள் கிழித்த பேனரையெல்லாம் எடுத்துட்டு பேனர் வெப்பேன் நீங்கள் ஆம்பளையா இருந்தா கைவெச்சுப் பாருங்க’’ என்று அவர்கள் சவால் விடுத்திருந்தனர் இந்த வீடியோ சமூக வலைதளத்தில் வைரலானது  இந்த வழக்கை சென்னை மத்திய குற்றப்பிரிவு சைபர் கிரைம் போலீஸ் துணை கமிஷனர் செந்தில்குமார் கூடுதல் துணை கமிஷனர் சரவணகுமார் உதவி கமிஷனர் வேல்முருகன் இன்ஸ்பெக்டர் சீனிவாசன் ஆகியோர்  கொண்ட தனிப்படை போலீஸார் விசாரித்தனர் வீடியோவை முதலில் பதிவுசெய்த நபர் யார் என்று விசாரித்தும் எந்தத் தகவலும் கிடைக்கவில்லை இதனால் இணை கமிஷனர் பாலகிருஷ்ணன் வீடியோவை வெளியிட்ட விஜய் ரசிகர்கள் யார் என்பதைக் கண்டறிய அதிரடியாக ஒரு முடிவை எடுத்தார் அதாவது மிரட்டல் வீடியோவை வெளியிட்ட விஜய் ரசிகர்கள் குறித்து தெரிந்தவர்கள் சைபர் கிரைம் போலீஸாருக்குத் தகவல் தெரிவிக்கலாம் என்று கூறியிருந்தனர் அந்தச் செய்தி அனைத்து பத்திரிகை மீடியாக்களில் வெளியானது    இந்த நிலையில்தான் மிரட்டல் விடுத்த விஜய் ரசிகரான ஆவடி அருகே உள்ள  பட்டாபிராமைச் சேர்ந்த  லிங்கத்துரை என்பவர் முன்ஜாமீன் கேட்டு சென்னை உயர்  நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்த தகவல் போலீஸாருக்குக் கிடைத்தது உடனடியாக அவரின் விவரங்களை போலீஸார் சேகரித்தனர் அவர் கொடுத்த முகவரிக்குச் சென்ற போலீஸார் ஏமாற்றமடைந்தனர் ஏனெனில் அந்த முகவரியில் லிங்கதுரை இல்லை விஏஓ சான்றிதழுடன் அந்தத் தகவலை உயர்நீதிமன்றத்துக்குத் தெரிவித்தனர் இதனால் லிங்கதுரைக்கு முன்ஜாமீன் கிடைப்பதில் சிக்கல் ஏற்பட்டது அதன்பிறகு போலீஸார் போட்ட ஸ்கெட்ச்சில் லிங்கத்துரையைத் தவிர மிரட்டல் விடுத்த இன்னொரு ரசிகரும் வீடியோ எடுத்த நபரும் சிக்கினர்  இதுகுறித்து போலீஸார் கூறுகையில் “மிரட்டல் விடுத்த விஜய் ரசிகர்களில் ஒருவர் பட்டாபிராம் பகுதியில் இருப்பதை உறுதி செய்ததும் அவர் குறித்த விவரங்களைச் சேகரித்தோம் லிங்கதுரையின் செல்போன் நம்பரில் உள்ள கால் ஹிஸ்டரியை ஆய்வு செய்தபோது அடிக்கடி இரண்டு பேருக்கு பேசுவது தெரியவந்தது இதனால் அவர்களைப் பிடித்தோம் அதே சமயத்தில் லிங்கதுரை ட்ரை கிளினிங் வேலைப்பார்த்த ஓனரிடமும் விசாரித்தோம் அப்போது அவர் லிங்கதுரை வேலையை விட்டு சில தினங்களுக்கு முன் நின்றுவிட்டார் ஆனால் அவரின் நண்பர் எனக்குத் தெரியும் என்று ஒரு செல்போன் நம்பரைக் கொடுத்தார் அந்த நம்பர் மூலம் எண்ணூரைச் சேர்ந்த 17 வயது சிறுவனைப் பிடித்தோம் மிரட்டல் வீடியோவில் இருக்கும் விஜய் ரசிகர்களில் ஒருவர் என்று எங்களின் விசாரணையில் தெரியவந்தது அவரிடம் விசாரித்தபோது லிங்கதுரையின் நண்பரான வடபழனியைச் சேர்ந்த அனிஷேக் என்பவரைப் பிடித்தோம் அவர்தான் லிங்கதுரை 17 வயது சிறுவன் பேசியதை செல்போனில் வீடியோவாக எடுத்துள்ளார்அந்த வீடியோவை பெங்களூருவுக்கு அனுப்பியுள்ளார் அதன்பிறகுதான் அந்த வீடியோ பரவியுள்ளது அனிஷேக்கும் லிங்கதுரையும் ஒரே கல்லூரியில் பிஎஸ்சி எலெக்ட்ரானிக்ஸ் படித்துள்ளனர் லிங்கதுரையும் 17 வயது சிறுவனும் ட்ரை கிளினிங்கில் வேலைப்பார்த்துள்ளனர் மூன்று பேரும் விஜய்யின் தீவிர ரசிகர்கள் சம்பவத்தன்று குடிபோதையில் இருந்த அவர்கள் மிரட்டல் வீடியோவை பதிவு செய்துள்ளனர் அவர்களிடமிருந்து அரிவாள் செல்போன் ஆகியவற்றைப் பறிமுதல் செய்துள்ளோம் அதோடு அனிஷேக் 17 வயது சிறுவன் ஆகியோரைக் கைது செய்துள்ளோம் 17 வயது சிறுவன் சிறுவர் சீர்திருத்தப்பள்ளியிலும் அனிஷேக் புழல் சிறையிலும் அடைக்கப்பட்டுள்ளனர் என்றனர் போலீஸ் உயரதிகாரி ஒருவர் கூறுகையில் “லிங்கதுரைக்கு சொந்த ஊர் தூத்துக்குடி மாவட்டம் விளாத்திக்குளம் அனிஷேக்குக்கு சொந்த ஊர் குமரி மாவட்டம் தக்கலை அனிஷேக் ஒரு செய்தி நிறுவனத்தில் பணியாற்றுகிறார் அனிஷேக் மூலம்தான் வீடியோ பரவியுள்ளது கைதான அனிஷேக் 17 வயது சிறுவனிடம் ரசிகர் மன்ற உறுப்பினர்கார்டுகூட இல்லை லிங்கதுரை சிக்கினால் இன்னும் கூடுதல் விவரங்கள் கிடைக்கும் லிங்கதுரை தலைமறைவாக இருக்கும் இடம் எங்களுக்குத் தெரிந்துவிட்டது விரைவில் அவரைக் கைது செய்துவிடுவோம் என்றார் 

Leave A Reply

Your email address will not be published.