`எனது இறுதி மரண வாக்குமூலம்!’ – ராமர் பிள்ளையின் அதிர்ச்சி வீடியோ

0 11

மூலிகையில் இருந்து பெட்ரோல் தயாரிக்கும் தனது கண்டுபிடிப்பை முழுமையடையவிடாமல் சதி நடப்பதாக ராமர் பிள்ளை குற்றம் சாட்டியுள்ளார் நீண்ட இடைவேளைக்குப் பிறகு மூலிகை பெட்ரோல் புகழ் ராமர் பிள்ளை மீண்டும் லைம்லைட்டுக்கு வந்துள்ளார் மூலிகை பெட்ரோல் தயாரிப்பில் வழக்கு மிரட்டல் சிறை எனப் பரபரப்பில் இருந்து விடுபட்டு இருந்த ராமர் பிள்ளை மீண்டும் மூலிகை பெட்ரோல் தயாரிப்பில் தீவிரம் காட்டி வந்தார் இந்நிலையில் மூலிகையில் இருந்து பெட்ரோல் தயாரிக்கும் தனது கண்டுபிடிப்பை முழுமையடையவிடாமல் சதி நடப்பதாக ராமர் பிள்ளை குற்றம் சாட்டியுள்ளார் இது குறித்து தனது இறுதி மரண வாக்குமூலம் எனக் கூறி அவர் வெளியிட்டுள்ள வீடியோவில் “21 ஆண்டுகளாகப் போராடி விட்டேன் இனிமேல் போராடுவதற்கு அர்த்தமில்லை மூலிகையில் இருந்து பெட்ரோல் தயாரிக்கும் தனது கண்டுபிடிப்பை முழுமைப்படுத்த விடாமல் சதி நடக்கிறது மக்களுக்கு இது கிடைத்துவிடக்கூடாது என்பதற்காகச் சிலர் தவறான தகவல்களை பரப்பி வருகின்றனர் எனது உயிரைப் பணயம் வைத்து மக்களுக்கு இதைக் கொண்டுவர பாடுபடுவேன் மத்திய இணையமைச்சர் பொன்ராதாகிருஷ்ணன் மற்றும் தமிழிசை உள்ளிட்டோர் எனது ஆய்வை நேரில் வந்து பார்க்க வேண்டும் நேரில் பார்த்து அதன் உண்மைத் தன்மையை மக்களிடம் எடுத்துரைக்க வேண்டும் மரணத்தின் வாயில் இருந்து இதைத் தெரிவிக்கிறேன் முன்னாள் அமைச்சர் முரளி மனோகர் ஜோஷி மற்றும் பிரதமர் அலுவலகத்தைத் தொடர்பு கொண்டு நீங்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக்குக் கொலை மிரட்டல் வந்துகொண்டிருக்கிறது டிசம்பர் 10-ம் தேதிக்குள் நீங்கள் இதனைச் செய்யாவிட்டால் 11-ம் தேதி நான் இருக்க மாட்டேன் இந்த உலகத்தை விட்டுச் செல்வதை தவிர வேறு வழியில்லை என்று கூறியுள்ளார்

Leave A Reply

Your email address will not be published.