ஆணவக்கொலை குறித்துப் பேச மறுப்பது ஏன்? – பட்டியலின எம்.எல்.ஏ-க்களுக்கு இயக்குநர் ரஞ்சித் கேள்வி

0 15

39இந்தியாவின் தேசத்தந்தை அம்பேத்கர் மட்டும்தான் வேறு யாரும் கிடையாது39 எனத் திரைப்பட இயக்குநர் பாரஞ்சித் கூறியுள்ளார் அம்பேத்கர் நினைவு நாளை முன்னிட்டு சென்னை அம்பேத்கர் மணிமண்டபத்தில் வைத்து 39பரியேறும் பெருமாள்39 திரைப்படத்துக்கு பாராட்டுவிழா நடைபெற்றது இதில் இந்திய குடியரசுக் கட்சியின் மாநிலத் தலைவர் சேகுதமிழரசன் உள்ளிட்டோர் கலந்துகொண்டு பரியேறும் பெருமாள் படத்தின் இயக்குநர் மாரிசெல்வராஜ் மற்றும் தயாரிப்பாளர் ரஞ்சித் ஆகியோருக்கு விருது வழங்கப்பட்டது விழாவின்போது பேசிய பாரஞ்சித் “இந்தியாவின் தேசத்தந்தை அம்பேத்கர் மட்டும்தான் வேறு யாரும் கிடையாது எல்லோரும் கேட்பார்கள் தேசத்தந்தை மகாத்மா காந்தி தானே என்று கிடையவே கிடையாது அம்பேத்கர் மட்டும்தான் இந்த மனிதகுலத்தின் மாண்பை ஒற்றுமையை நிமிடத்துக்கு நிமிடம் பேசியவர் என்றவர் பட்டியலின   எம்எல்ஏ-க்கள் எம்பி-க்கள் குறித்து வருத்தம் தெரிவித்தார் சமீபகாலமாக நடந்துவரும் ஆணவப் படுகொலைகளைப் பற்றி பேசுவதற்குக்கூட இங்கு இருக்கும் பட்டியலின கட்சிகளும் கம்யூனிசத் தோழர்கள் மட்டுமே வருகிறார்கள் ஆனால் தமிழகத்தில் பட்டியலின சமூகத்தைச் சேர்ந்தவர்கள் எம்எல்ஏ-க்களாக எம்பி-க்களாக எத்தனையோ பேர் இருக்கிறார்கள் ஆனால் இவர்கள் ஆணவக் கொலைகள்குறித்துப் பேச மறுக்கிறார்கள் இத்தனை பேரும் குறைந்த பட்சம் சமீபத்தில் கிருஷ்ணகிரியில் நடந்த ஆணவக் கொலைக்குக்கூட கண்டனக் குரல் ஏன் எழுப்பவில்லை நீங்கள் இருக்கும் கட்சி உங்களைப் பேசவிடாது யாரால் தேர்ந்தெடுக்கப்பட்டோமோ அவர்களுக்காக குரல் கொடுக்க முடியவில்லை என்றால் ஏன் நீங்கள் எம்எல்ஏ-க்களாக எம்பி க்களாக இருக்க வேண்டும் பட்டியலின சமூகத்துக்கு நீங்கள் பேசினால் உங்களை கட்சியை விட்டு தூக்குவேன் என மிரட்டினார்கள் என்றால் தயங்காமல் கட்சியை விட்டு வெளியே வாருங்கள் நாங்கள் உங்களைத் தேர்தலில் வெற்றிபெறவைக்கிறோம்பட்டியலின மக்களின் ஆதரவைப் பெற்று பதவிக்கு வந்தவர்கள் குறைந்தபட்சம் அந்த மக்களுக்கு ஆதரவு தெரிவிக்க வேண்டும் அப்படி தெரிவிக்காதவர்களுக்கு நாம் ஏன் ஓட்டுப்போட வேண்டும் வருகின்ற பாராளுமன்றத் தேர்தலில் பட்டியலின கட்சிகள் கூட்டணி அமைக்க வேண்டும் 7 தனித்தொகுதிகளுக்காக மட்டுமாவது கூட்டணி அமைக்க வேண்டும் வேறு யாரிடமும் செல்லாமல் தோற்றாலும்  வென்றாலும் பரவாயில்லை எனப் பட்டியலின கட்சிகள் கூட்டணி அமைக்க வேண்டும் என்று ஆவேசமாகக் கூறினார்

Leave A Reply

Your email address will not be published.