தூத்துக்குடி கனரா வங்கியில் ரூ.1 கோடி நகை மோசடி – 50 லட்சத்தை  மீட்ட போலீஸார்!

0 14

தூத்துக்குடியில் கனரா வங்கியில் ரூ1 கோடி மதிப்பிலான நகைகளுக்குப் பதில் கவரிங் நகைகளை வைத்து மோசடிசெய்த வழக்கில் ரூ50 லட்சத்து 15 ஆயிரம் பணத்தை போலீஸார் மீட்டனர்தூத்துக்குடி மட்டக்கடைப் பகுதியில் இயங்கிவருகிறது கனரா வங்கி இதில் பொதுமக்கள் நகைகளை அடகு வைத்துள்ளனர் இந்த நகைகள் 3 மாதங்களுக்கு ஒருமுறை பரிசோதனை செய்து சரிபார்ப்பது வழக்கம் அதன்படி சில நாள்களுக்கு முன் வங்கி அதிகாரிகள் சரிபார்ப்புப் பணியில் ஈடுபட்டனர் அப்போது சில நகைகள் காணால்போனதாக சந்தேகித்தனர் இந்நிலையில் அடகு வைக்கப்பட்டிருந்த அனைத்து நகைப் பொட்டலங்களும் சரிபார்க்கப்பட்டன அப்போது 22 பேரின் ரூ1 கோடி மதிப்பிலான நகைகளுக்குப் பதிலாக போலியான கவரிங் நகைகள் அடகுவைக்கப்பட்டு மோசடி செய்யப்பட்டிருப்பது தெரியவந்ததுஇச்சம்பவம் அப்பகுதியில் பரவ ஆரம்பித்ததும் பொதுமக்கள் வங்கி முன்பு திரண்டு போராட்டத்தில் ஈடுபட்டனர் ”போலியான 22 பேரின் நகைகள் திருப்பி வழங்கப்படும் என ”வங்கிக் கிளை மேலாளர் மற்றும் போலீஸார் உத்தரவாதம் அளிக்கப்பட்டதன் பேரில் போராட்டத்தைக் கைவிட்டனர் இதையடுத்து வங்கிக் கோட்ட மேலாளர் முகமது இஸ்மாயில் வங்கி நகை மதிப்பீட்டாளர் சண்முகசுந்தரம் மீது அளித்த புகாரின் பேரில் தூத்துக்குடி வடபாகம் காவல் ஆய்வாளர் பார்த்திபன் தலைமையிலான போலீஸார் தீவிர விசாரணையில் ஈடுபட்டுவந்தனர்இந்நிலையில் போலி நகைமூலம் மோசடி செய்யப்பட்ட ரூ1கோடியே 15 ஆயிரம் ரூபாயில் ரூ50 லட்சத்து 15 ஆயிரத்தை வடபாகம் போலீஸார் மீட்டனர் இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய மாவட்ட எஸ்பி முரளி ரம்பா தூத்துக்குடி மட்டக்கடை  பகுதியில் உள்ள கனரா வங்கி கிளையில் 22 நபர்களின் பெயர்களில் வைக்கப்பட்ட 73 நகை கடன் கணக்குகளில் வைத்த நகைகள் போலியானவை எனத் தெரியவந்ததாகவும் இதனால் வங்கிக்கு ரூ10015000 அளவில் வங்கிக்கு இழப்பு ஏற்பட்டுள்ளதாகவும் இதுகுறித்து வங்கித் தரப்பு அளிக்கப்பட்ட புகாரின் பேரில் நகை மதிப்பீட்டாளர் சண்முகசுந்தரம் என்பரைக் கைதுசெய்து அவர்மீது 7 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்யப்பட்டதுஅவரிடம் மேற்கொண்ட விசாரணையில் தனக்குத் தெரிந்த பல நபர்களின் பெயரில் வங்கியில் போலியான நகைகளை அடமானம் வைத்து தான் பெற்ற பணத்தை அவர் கொடுத்துவைத்திருப்பதாகக் கூறிய நபர்களிடமிருந்து ரூ50 லட்சத்து 15 ஆயிரத்தை மீட்டுள்ளோம் தொடர்ந்து விசாரணை நடத்திவருகிறோம் மீதமுள்ள தொகையும் மீட்கப்படும் இது தொடர்பாக வேறு வங்கி அதிகாரிகளுக்கும் தொடர்பு உள்ளதா என விசாரணை செய்துவருகிறோம்” என்றார்     

Leave A Reply

Your email address will not be published.