20 அடி உயர கட்-அவுட்டில் ஏறி பாலாபிஷேகம்! – அஜித் ரசிகர்களுக்கு நடந்த விபரீதம்

0 12

பாலபிஷேம் செய்தபோது அஜித் குமார் கட்-அவுட் சரிந்து விழுந்ததில் 6 ரசிகர்கள் படுகாயம் அடைந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறதுபொங்கல் பண்டிகையை முன்னிட்டு நடிகர் அஜித் நடித்த `விஸ்வாசம்39 திரைப்படம் இன்று வெளியானதையொட்டி அவரது ரசிகர்கள் அனைத்து திரையரங்கு முன்பும் பட்டாசுகள் வெடித்துக் கொண்டாடிவருகின்றனர் விழுப்புரம் மாவட்டம் திருக்கோவிலூரில் உள்ள ஸ்ரீனிவாசா திரையரங்கில் `விஸ்வாசம் திரைப்படம்39 இன்று காலை திரையிடப்பட்டதுஅப்போது 200-க்கும் மேற்பட்ட அஜித் ரசிகர்கள் பட்டாசுகள் வெடித்தும் இனிப்புகள் வழங்கியும் கொண்டாடினர் திரையரங்கம் முன்பு 20 அடி  உயரத்தில் வைக்கப்பட்டிருந்த அஜித் கட்-அவுட் மீது 10-க்கும் மேற்பட்ட ரசிகர்கள் ஏறி மாலை அணிவித்து பால் ஊற்றி அபிஷேகம் செய்தனர் அப்போது பாரம் தாங்காமல் அந்த கட்-அவுட் கீழே சரிந்துவிழுந்ததுஅதைக் கண்டதும் அங்கு நின்றிருந்த ரசிகர்கள் அலறி அடித்துக்கொண்டு நாலாபுறமும் சிதறி ஓடினர் அந்த விபத்தில் அஜித் ரசிகர்கள் ஏழுமலை அருள் ஸ்ரீதர் முத்தரசன் பிரபாகரன் பிரதாப்  உள்ளிட்ட 6 பேர் படுகாயம் அடைந்தனர் தகவலறிந்ததும் அங்கு விரைந்து சென்ற திருக்கோவிலூர் போலீஸார் படுகாயம் அடைந்த ரசிகர்களை மீட்டு சிகிச்சைக்காக திருக்கோவிலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர்

Leave A Reply

Your email address will not be published.