காவல்துறை தொடர்பான பொதுமக்கள் விவரங்களுக்காக இணைய வழி சேவை தொடக்கம்!

0 13

கரூர் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் அலுவலகத்தில் தமிழக காவல்துறை அறிமுகம் செய்துள்ள காவல் சரிபார்ப்பு சேவை என்ற புதிய இணைய வழி சேவையை பொதுமக்கள் பயன்பாட்டுக்காக கரூர் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் ராஜசேகரன்  தொடங்கி வைத்தார் இதுபற்றி தமிழக காவல்துறை சார்பில் “தனிநபர் மற்றும் தனியார் நிறுவனங்கள் wwweservicestnpolicegovin  என்ற இணையத்தின் மூலம் விண்ணப்பிக்கலாம் இந்த சேவை மூலம் தனிநபர் விவரம் சரிபார்ப்பு வாடகைதாரர்கள் விவரம் சரிபார்ப்பு வீட்டு வேலையாட்கள் விவரம் சரிபார்ப்பு வேலை நிமிர்த்தமாக சரிபார்ப்பு ஆகியவற்றுக்கு இணையம் வழியாக கட்டணம் செலுத்தி தகவல்களைப் பெற்று பயன்பெறலாம் மேலும் தனிநபர் விவரம் சரிபார்ப்பு மூலம் ஒருவரின் தற்போதைய வீட்டு முகவரி தமிழக காவல்துறையின் வசம் உள்ள ஆவணங்கள் அடிப்படையில் ஒரு நபர் மீது ஏதேனும் சட்ட நடவடிக்கைகள் உள்ளதா என்பது போன்ற விவரங்களை மட்டும் இச்சேவையின் மூலம் சரி பார்த்துக்கொள்ளலாம் காவல்துறை மூலம் பெறப்படும்  சரிபார்ப்பு விண்ணப்பங்கள் பெறப்பட்ட 15 நாள்களுக்குள் முன்நடத்தை சரிபார்ப்பு பணி முடிக்கப்படும் மேற்கூறிய சேவைகளைப் பெற இணையம் வழியே விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் அவர்கள் இருக்குமிடத்திலேயே மின்னஞ்சல் மூலம் தகவல்களைப் பெற்றுக்கொள்ளலாம் இதற்கு கட்டணமாக தனி நபர் ஒரு விண்ணப்பத்துக்கு ரூ500-ம் தனியார் நிறுவனங்கள் ஒரு விண்ணப்பத்துக்கு ரூ1000  மட்டும் என்று நிர்ணயிக்கப்பட்டுள்ளது இணையம் வழியாக கிரெடிட் கார்ட் டெபிட் கார்ட் இணைய வழி வங்கி சேவை ஆகிய முறைகளில் கட்டணம் செலுத்திக்கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது

Leave A Reply

Your email address will not be published.