`கழிவறை சுவரில் வரையப்படும் சிறந்த ஓவியத்துக்கு தேசிய அளவில் பரிசு!’ – ஆட்சியர் அறிவிப்பு

0 13

“கரூர் மாவட்டத்தில் உள்ள வீடுகளில் உள்ள கழிப்பறைகளில் சிறந்த விழிப்பு உணர்வு ஓவியம் வரைந்தால் தேசிய அளவில் விருதுக்கு பரிந்துரைக்கப்படும் என்று கரூர் மாவட்ட ஆட்சித்தலைவர் அன்பழகன் அறிவித்துள்ளார் மக்கள் திறந்தவெளியை கழிப்பறையாக்குவதை தடுக்கவும் கழிப்பறைக் கட்டி சுகாதாரத்தை பேணச் செய்யவும் மத்திய மாநில அரசுகள் பல்வேறு முயற்சிகள் மேற்கொண்டு வருகின்றன அதில் ஒன்றுதான் தங்கள் கழிவறையில் சிறந்த விழிப்பு உணர்வு ஓவியங்களை வரையும் மக்களுக்கு தேசிய அளவில் பரிசு என்ற அறிவிப்பு இதுகுறித்து கரூர் ஆட்சியர் விடுத்துள்ள அறிக்கையில் “அனைவரது வீடுகளிலும் கழிப்பறை கட்டி பயன்படுத்துவதை ஊக்குவிக்கும் வகையிலும் திறந்தவெளி மலம் கழித்தலால் ஏற்படும் தீமைகளை விளக்கும் வகையிலும் மத்திய அரசு `சுவாச் சுந்தர் சௌசாலயா (Swachh SuNdar Shauchalaya)’ என்ற திட்டத்தின் மூலம் ஊராட்சிப் பகுதிளில் உள்ள மக்கள் தங்கள் இல்லங்களில் உள்ள கழிப்பறைகளில் விழிப்பு உணர்வு ஓவியங்கள் வரைய ஊக்குவிக்கிறதுகரூர் மாவட்டத்தில் உள்ள 157 கிராம ஊராட்சிகளிலும் பொதுமக்கள் தங்கள் வீடுகளில் உள்ள கழிவறைகளில் பல வண்ணங்களில் கண்ணைக்கவரும் வகையிலும் கழிவறைகளின் முக்கியத்துவம் குறித்தும் விழிப்பு உணர்வு ஏற்படுத்தும் வகையிலான ஓவியங்கள் வரைந்து அதை புகைப்படம் எடுத்து swachhbharatmissiongovin என்ற இணையதளத்தில் வரும் 3112019 க்குள் பதிவேற்றம் செய்ய வேண்டும் அவ்வாறு பதிவேற்றம் செய்யப்படும் ஓவியங்களில் இருந்து தேர்ந்தெடுக்கப்படும் சிறந்த ஓவியத்துக்கு மத்திய அரசின் தேசிய அளவிலான விருதுகள் வழங்கப்படும் கழிவறை கட்டியுள்ள அனைத்து மக்களும் இந்தப் போட்டியில் பங்கேற்கலாம் என்று கூறியுள்ளார்

Leave A Reply

Your email address will not be published.