`வாவ்… இதுதான் உண்மையான இயற்கை விவசாயம்!’ – ஜெர்மனி மூதாட்டியை அசர வைத்த கரூர் பெண்

0 15

 கரூரைச் சேர்ந்த சரோஜா என்ற பெண் 20 ஏக்கரில் இயற்கை விவசாயம் செய்து ஜெர்மனி மூதாட்டியை ஆச்சர்யப்பட வைத்திருக்கிறார் இயற்கை விவசாயம் குறித்து அறிந்துகொள்வதற்காக ஜெர்மனியிலிருந்து சரோஜா வீட்டுக்கு வந்து ஒருவாரகாலம் தங்கி வயலில் வேலையும் செய்து அசத்தியிருக்கிறார் அந்த மூதாட்டிகரூர் மாவட்டம் அரவக்குறிச்சி ஒன்றியத்தில் உள்ள லிங்கமநாயக்கன்பட்டிதான் சரோஜாவுக்குச் சொந்த ஊர் 52 வயதாகும் இவர் இயற்கை வேளாண் விஞ்ஞானி நம்மாழ்வார் அவர்களின் சிஷ்யைகளில் ஒருவர் நம்மாழ்வாரிடம் கற்ற இயற்கை விழிப்பு உணர்வைத் தொடர்ந்து கடந்த எட்டு வருடங்களாகத் தனக்குச் சொந்தமான 20 ஏக்கரில் முழுக்க முழுக்க இயற்கை விவசாயமே செய்கிறார்முருங்கை வாழை நுணா சவுக்கு நாவல் என்று சகல பயிர்களையும் பயிர் செய்திருக்கிறார் இயற்கை முறையில் கிடைக்கும் இழை தழைகளைக் கொண்டு மூடாக்குப் போட்டு அதன்மூலம் மண்ணை வளமாக்கி விவசாயம் செய்து வருகிறார் இந்தப் பகுதியே சுண்ணாம்பு மண் அதிகம் நிறைந்த எந்தப் பயிரும் எடுக்காத மண் தன்மையைக் கொண்ட பகுதி இருந்தாலும் நம்மாழ்வார் காட்டிய வழியில் இவர் விவசாயம் செய்வதால் சுற்றுவட்டார பகுதிகளிலேயே இவரது தோட்டம் மட்டும் பசுமை போர்த்தி காணப்படுகிறது இவர் நம்மாழ்வார் வழியில் 39உணவே மருந்து39 என்கிற விழிப்பு உணர்வை முன்னெடுத்து வருகிறார்இதற்காக இந்தியா முழுக்க பயணிக்கிறார் ஜீரோ பட்ஜெட் சுபாஷ் பாலேக்கரிடம் பயிற்சி பெற்றிருக்கிறார் பாலேக்கரிடம் ஜெர்மனியில் இருந்து பயிற்சி பெற இருவர் வந்திருக்கிறார்கள் அவர்கள் மூலமாகத்தான் ஜெர்மனியில் உள்ள பெர்லின் பகுதியைச் சேர்ந்த மோனிகா என்ற 70 வயது மூதாட்டியும் பெங்களூரு வந்திருக்கிறார் அங்கே இருந்தபோதுதான் தனது இயற்கை விவசாயம் பசுமை போர்த்திக் கிடக்கும் தோட்டம் பற்றிய விஷயங்களை ஃபேஸ்புக்கில் பதிவிட்டுள்ளார் அதைப் பார்த்துவிட்டுதான் மோனிகா சரோஜாவை தொடர்பு கொண்டு பேசியதோடு அவரது வீட்டுக்கு வந்து ஒருவாரம் தங்கிச் சென்றுள்ளார் இதுகுறித்து நம்மிடம் பேசிய சரோஜா `எனது ஆங்கிலப் பதிவுகளைப் பார்த்துட்டுதான் என் நம்பரை புடிச்சு என்கிட்ட பேசினாங்க மோனிகா அம்மா `உங்க தோட்டத்துக்கு வரலாமா39ன்னு கேட்டார் `ஆல்வேஸ் வெல்கம்39ன்னு சொன்னேன் உடனே வந்துட்டாங்க என் வீடும் தோட்டமும் பசுமைப் போர்த்திக் கிடக்கும் வெள்ளாமையும் அவரை ரொம்ப கவர்ந்துட்டு `வாவ் இதுதான் உண்மையான இயற்கை விவசாயம்39ன்னு பாராட்டினாங்க ஒருவாரம் தங்கி வயல்ல வேலை பார்க்குறது நுணா இலை டீ போட்டு தர்றதுன்னு தோட்டத்தையே அணில் பிள்ளை மாதிரி சுத்தி சுத்தி வந்தாங்க `மறுபடியும் வருவேன்39ன்னு சொல்லிட்டு மனசே இல்லாமல்தான் கிளம்பிப் போனாங்க இடையில் நம்மாழ்வார் அய்யா பற்றிச் சொன்னதும் `வாட் எ மேன் ஐயம் வெரி இம்ப்ரஸ்டு39ன்னு நம்மாழ்வாரை மெச்சினாங்க இந்தியாவில்தான் சுற்றுப்பயணத்துல இருக்காங்க 10 நாள்ல மறுபடியும் என் தோட்டத்தைப் பார்க்க வர்றேன்னு சொல்லி இருக்காங்க’’ என்றார் மகிழ்ச்சியாக  

Leave A Reply

Your email address will not be published.