‘கும்மி டான்ஸ் பிடிச்சிருக்கு!’ வெளிநாட்டு மாணவிகளின் பொங்கலோ பொங்கல்

0 15

இங்குப் பறக்கும் வண்ணப்பறவைஎங்கு இருந்தோ வந்த பறவைகல்லூரி மண்தான் எங்கள் வேடந்தாங்கல் 39எந்தக் காலத்துலயுமே காலேஜ் பியூட்டிகளின் எவர்கிரீன் சாங் இது இப்போ பொங்கல் சீசன் வேற கேட்கவா வேண்டும்கட்டிக் கரும்போ கண்டாங்கி சேலையோ நாங்களும் ஒரு கை பார்த்துடுறோம் என அமெரிக்கா தென் கொரியா சிங்கப்பூர்ல உள்ளிட்ட நாடுகளுலேருந்து பாரம்பர்யமான முறையில் பொங்கல் கொண்டாடுறதுக்காக மதுரைக்கே பறந்து வந்திருக்காங்க இந்த வெளிநாட்டு வண்ணப்பறவைகள்பறையிசை ஒருபக்கம் பட்டையக் கிளப்பிட்டிருக்க கை வளை குலுங்க பொங்கல் வைச்சிட்டிருந்த நம்மூரு பொண்ணுக்குப் பக்கத்திலேயே ஒத்தாசையா நின்னு ஆர்வமா 39பொங்கல் செய்முறை39 கேட்டுத் தெரிஞ்சுகிட்டு இருந்தாங்க அந்த வெளிநாட்டுப் பெண்மணி ஓவர் பில்டப்பாக இருக்கே எங்கே இதெல்லாம் நடக்குதுனுதானே கேட்கப் போறீங்கமதுரை டோக் பெருமாட்டி கல்லூரியில்தான் இந்தக் கோலாகலமான பொங்கல் திருவிழா கொண்டாட்டம் வரிசையா வைச்சிருந்த பொங்கல் பானைகளெல்லாம் ஐ ஆம் ரெடிங்கிற பாணியில பொங்கி வரவும் எல்லாரும் சேர்ந்து உற்சாகமா பொங்கலோ பொங்கல்னு குலவையிட்டு கல்லூரி மைதானத்தைக் களைகட்ட வெச்சிட்டாங்கசூடுபிடிக்கும் ஆட்டம் ஆரம்பமானது 39நீயா நானா 39போட்டி39 ஜாலி மட்டுமில்ல களத்தில் இறக்கிவிட்டா நாங்க வேற லெவல்39ன்னு முந்தானையை இழுத்து முடிஞ்சிட்டு கயிறு இழுக்கும் போட்டியில காலேஜ் பொண்ணுங்களுக்கு 39ஹெவி டஃப்39 கொடுத்து நின்னாங்க நம்ம  39எவர் கிரீன் யூத்39 லெக்சரர்ஸ் தமிழர் திருநாளாம் தைப்பொங்கல் பெருவிழா – இத்தகைய பொங்கல் திருவிழாவைக் கொண்டாடுறதுக்காகவே வெளிநாட்டிலிருந்து முன்னாடியே கிளம்பி வந்து ஒரே வாரத்துல கிராமிய கலாசாரம் மற்றும் பழந்தமிழர்களோட பாரம்பர்யமான குறும்பர் நடனம் கும்மியாட்டமெல்லாம் கத்துகிட்டு ஆன் ஸ்டேஜ் பர்ஃபாமன்ஸ் கொடுத்து அதகளம் பண்ணிட்டாங்க வெளிநாட்டு மாணவ மாணவிகள்கலர்ஃபுல் செல்ஃபிக்களில் சிரித்துக் கொண்டிருந்த எல்லாரையும் மைதானத்தில் ஓடி வந்து கொண்டிருந்த மாணவிகளோட ஹேய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ங்கிற கோரஸ் சத்தம் எல்லாருக்கும் எனர்ஜி டானிக் கொடுத்து அந்த இடத்துக்கே இழுத்துட்டு போயிடுச்சு 39அடடா நல்ல வேளை இதை மிஸ் பண்ணல39ன்னு என் மைண்ட் வாய்ஸ் பேசுறது உங்களுக்கும் கேட்குதா ஆமாங்க ஆல் டைம் பொங்கல் ஸ்பெஷல் விளையாட்டான உறியடிக்குத்தான் இந்த கோரஸ் நம்ம ஃபேஸ்புக் மார்க்39 சாயலோட இருந்த ஒருத்தர் கண்ணுல கறுப்புத் துணியைக் கட்டிக்கிட்டு ஒரே அடியில பானையை அடிச்சு தெறிக்க விட்டு அப்ளாஸ்களை அள்ளினார் காங்கிராட்ஸ் ப்ரோஆட்டம் பாட்டம் கலாட்டாவோட செம்ம பிஸியா பறையடிச்சுட்டிருந்த தமிழ்த்துறை மாணவி மகிழினி கிட்ட பேச்சு கொடுத்தோம் வருஷா வருஷம் எங்க காலேஜ்ல பொங்கல் திருவிழா கொண்டாடிட்டு வர்றோம் ஆனா வெளிநாட்டுலேருந்து வந்த ஸ்டுடென்ட்ஸ்தான் இந்த வருஷத்தோட ஸ்பெஷல்  39விஐபி39ஸ் அவங்களுக்கும் நம்மளோட பாரம்பர்ய நடனம் இசை கலாசாரம் எல்லாமே தெரியணும்ங்கிறதுக்காகத்தான் இந்த முயற்சி அவங்க என்ஜாய் பண்ணுறத பாக்குறப்போ ரொம்ப சந்தோஷமா இருக்குனு கண்களில் உற்சாகம் பொங்க பேசினார்39தமிழர் என்றோர் இனமுண்டு தனியே அவருக்கொரு குணமுண்டு39 என்று சொல்வார் நாமக்கல் கவிஞர் அதுபோலதான் தமிழர்களின் தனித்துவமான அடையாளமாக இருக்கிறது இந்தப் பொங்கல் திருநாள் நமக்கு உணவு கொடுக்கும் உழவர்களையும் உழவையும் நினைத்துப் போற்றுவதற்காகவே இந்த நாளைக் கொண்டாடுகிறோம் எங்களுடன் சேர்ந்து 30 க்கும் மேற்பட்ட வெளிநாட்டு மாணவர்கள் சமய நல்லிணக்கத்தோடும் 39அனைவரும் ஒன்றே39 என்று பேரன்பு பாராட்டியும் வெகு மகிழ்ச்சியாகக் கொண்டாடுகிறார்கள் தமிழால் இணைவோம் தமிழால் உயர்வோம் என்கிறார் தமிழ்த்துறைத் தலைவர் கவிதா ராணிசரி வெளிநாட்டு பெண்கள் யாருமே பேசலையான்னுதானே கேட்குறீங்க அமெரிக்காவிலிருந்து வந்த ரூபிகிட்ட பேசினோம் இந்தப் பொங்கல் விழா ரொம்ப கலர்ஃபுல்லா உயிர்ப்போட இருக்கு எனக்கு எல்லாரும் சேர்ந்து ஆடுன கும்மி டான்ஸ் ரொம்ப பிடிச்சது எனக்கும் இவங்க போட்டிருக்கிற மாதிரி சாரி போட்டுக்கணும்ன்னு ஆசையா இருக்கு இந்த ஊர்ல இருக்கிற தோழிகிட்ட கேட்டிருக்கேன் நிச்சயமா அடுத்த பொங்கலுக்கு இதே மாதிரி டிரஸ் போட்டு வருவேன்னு சொல்லி 39பை39 காட்டினார்பொங்கலோ பொங்கல்

Leave A Reply

Your email address will not be published.