“பெண்களை ஐயப்பன் ஏற்றுக்கொண்டபோதும், ஆர்.எஸ்.எஸ். ஏற்கவில்லை!” – தீண்டாமை ஒழிப்பு முன்னணி

0 10

மதத்தின் பெயரால் தமிழ்நாட்டில் இன்றும் தேவதாசி முறை நடைமுறையில் இருக்கிறது வேதனையளிக்கிறது என தீண்டாமை ஒழிப்பு முன்னணியின் மாநிலப் பொதுச்செயலாளர் கேசாமுவேல்ராஜ் தெரிவித்துள்ளார்தீண்டாமை ஒழிப்பு முன்னணி சார்பில் சமூக நீதி காத்திடும் கேரள இடது முன்னணி அரசுக்கு ஆதரவாக உரிமைச் சங்கமம் நிகழ்ச்சி விருதுநகரில் நடைபெற்றது இந்த நிகழ்ச்சியில் தீண்டாமை ஒழிப்பு முன்னணியின் பொதுச்செயலாளர் சாமுவேல்ராஜ் பங்கேற்றார் அப்போது பேசிய அவர் மகாத்மா காந்தியைச் சுட்டுக்கொன்ற கோட்சே தன்னுடைய கையில் இஸ்மாயில் என்ற பெயரைப் பச்சை குத்தியிருந்தார் இந்தப் படுகொலைமூலம் இந்து – இஸ்லாம் பிரச்னையை ஏற்படுத்த அவர் முயன்றார் அதேபோலத்தான் ஒவ்வொரு பிரச்னைகளுக்கும் பின்புலமாகப் பிஜேபி இருந்துவருகிறது ஆர்எஸ்எஸ் அமைப்புக்கும் இந்திய சுதந்திரப் போராட்டத்துக்கும் எந்தச் சம்பந்தமும் இல்லை மாறாக ஆங்கிலேய அரசுக்கு ஆதரவான நிலைப்பாட்டையே ஆர்எஸ்எஸ் எடுத்திருந்தது சுதந்திரப் போராட்டத்தில் ஆர்எஸ்எஸ் அமைப்பின் பங்கு குறித்து இதே விருதுநகர் தேசபந்து மைதானத்தில் எச்ராஜா விவாதம் நடத்தத் தயாராபிஜேபி-யில் இருக்கும் பெண்கள் மட்டும்தான் பாரத் மாதாக்களா சபரிமலையில் பெண்களை அனுமதிப்பதற்கு ஆதரவாக 56 லட்சம் பெண்கள் பங்கேற்ற 620 கிலோ மீட்டர் மனிதச்சங்கிலி கேரளாவில் நடந்துள்ளது 56 லட்சம் பேரும் பாரத மாதாக்கள்தானே இந்தப் போராட்டம் உலகத்தின் கவனத்தையே வெகுவாக ஈர்த்துள்ளது கம்யூனிஸ்ட் கட்சியினர் எந்த மதத்துக்கும் எதிரானவர்கள் அல்ல எந்த வழிபாட்டுத் தலங்களையோ எந்தச் சாமியையோ நாங்கள் சேதப்படுத்தவில்லை ஒவ்வொரு மதத்தினரின் உணர்வுகளையும் மதிப்பளிப்பவர்கள் நாங்கள் ஆனால் இந்து மத புராணத்தின் பெயரால் பெண்கள் பல ஆண்டுகளாக அடிமைகளைப்போல நடத்தப்பட்டனர் மதுரை மீனாட்சி அம்மன் கோயில் ஶ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயிலைச் சுற்றி தேவதாசி பெண்கள் இருந்தனர் அந்தத் திட்டத்துக்கு எதிராகப் பல போராட்டங்கள் நடந்துள்ளன இந்த முறைக்குப் போராடியவர்களின் பெயர் வரலாற்றில் நிலைத்துள்ளது கிருஷ்ணகிரி மாவட்டத்தில் இன்றும்கூடத் தேவதாசி முறை இருந்துவருகிறது இந்த முறையை எப்படி ஏற்றுக்கொள்ள முடியும்சபரிமலை ஐயப்பன் கோயிலுக்குச் சென்ற கனகதுர்கா பிந்து ஆகியோரை ஐயப்பனே ஏற்றுக்கொண்டு விட்டார் ஆனால் ஆர்எஸ்எஸ் அமைப்பினர்தான் ஏற்றுக்கொள்ள மறுக்கின்றனர் சாமி வரம் கொடுத்தாலும் பூசாரி வரம் கொடுக்க மறுக்கிறார் கனகதுர்கா பிந்து ஆகியோர் பெயர் வரலாற்றில் என்றென்றைக்கும் நிலைத்திருக்கும் ஆகமவிதி என்றால் என்ன ஒவ்வொருவரும் தங்கள் நிலைக்கேற்ப அதனை மாற்றிக்கொள்கின்றனர் ஆகம விதிப்படி பெண் ஒருவர் பாதுகாப்புத் துறை அமைச்சராக வர முடியும் என்றால் பெண்களால் ஏன் கோயிலுக்குச் செல்லக்கூடாது 48 நாட்கள் விரதமிருந்துதான் ஐயப்பன் கோயிலுக்கு வர வேண்டும் என்றால் பலர் அங்கே செல்ல மாட்டார்கள் தற்போது பம்பையில் குளித்தால் போதும் அங்கேயே இருமுடி கட்டிக்கொண்டு கோயிலுக்குச் செல்லலாம் கோயிலுக்குச் செல்லும்போது மனைவி முகத்தைத் திரும்பிக்கூடப் பார்க்கக்கூடாது என்று இருந்தது ஆனால் இன்று கோயிலில் இருந்தே ஆண்ட்ராய்டு போனில் பேசுகிறார்கள் ஐயப்பன் எல்லா மாற்றங்களையும் ஏற்றுக்கொண்டுள்ளார் நாகரிக மாற்றம் நடந்துகொண்டேதான் இருக்கும்பிரதமர் நரேந்திர மோடி மத்திய இணையமைச்சர் பொன்ராதாகிருஷ்ணன்  பிஜேபி தேசியச் செயலாளர் எச்ராஜா மாநிலத் தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் ஆகியோருக்கு சமூக வலைதளங்களில் வேறு பெயர்வைத்து அழைக்கிறார்கள் ஆனால் நாங்கள் அவ்வாறு அழைக்க மாட்டோம் நாகரிக அரசியல் நடத்துபவர்கள் நாங்கள் பெயர் சொல்லித்தான் அழைப்போம்  60 வயது முதியவர்களுக்கு 10 வயது சிறுமிகளைத் திருமணம் செய்யும் முறை இந்து மதத்தில் இருந்தது இதன் காரணமாக 1920-ம் ஆண்டில் தமிழ்நாட்டில் மட்டும் 11 வயதுக்குட்பட்ட விதவைகள் 5 லட்சம் பேர் இருந்தனர் அந்தச் சிறுமிகள் இறக்கும்வரை சாப்பாட்டில் உப்பு காரம் சேர்க்கக்கூடாது என்ற நிலை இருந்தது இவையெல்லாம் நாடு சந்தித்த கொடூர வரலாறு ஆனால் இன்று இப்படி இருந்தால் போக்சோ சட்டத்தில் கைது செய்யப்படுவார்கள் சமூக மாற்றத்துக்காக முதல்வர் நாற்காலியைத் தூக்கி எறியவும் கேரள முதல்வர் பினராயி விஜயன் தயார் நிலையில்தான் உள்ளார் சமூகநீதியை நிலைநாட்டும் கேரள அரசுக்குத் துணை நிற்க வேண்டும் என்றார்ஆதித்தமிழர் கட்சித் தலைவர் குஜக்கையன் கேரளாவில் பினராயி விஜயன் தலைமையிலான இடதுசாரி அரசு அமைந்த பின்புதான் தாழ்த்தப்பட்டோர் உட்பட அனைத்துச் சாதியினரும் அர்ச்சகர் ஆகலாம் என்ற சட்டம் அமல்படுத்தப்பட்டுள்ளது கையால் மலம் அள்ளும் முறையை மாற்றிப் பாதாளச் சாக்கடை சுத்தம் செய்வதற்காகக் கேரளாவில் நவீன இயந்திரம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது சபரிமலை ஐயப்பன் கோயிலுக்கு அனைத்து வயதுப் பெண்களும் செல்லலாம் என்ற நீதிமன்றத் தீர்ப்பைச் சரியான முறையில் நிறைவேற்றி வருகிறார் கேரள முதல்வர் ஆனால் ஆர்எஸ்எஸ் அமைப்பு இதற்கு எதிராகப் போராட்டம் நடத்தி பிரச்னை செய்துவருகிறது தற்போது முற்போக்குச் சக்திகளுக்கும் பிற்போக்குச் சக்திகளுக்கும் இடையேயான களப்போராட்டம் நடைபெற்று வருகிறது எனவே அனைவரையும் சமமாகக் கருதி ஆட்சி செய்துவரும் கேரள அரசுக்கு ஆதரவான கருத்துகளை மக்கள் மத்தியில் கொண்டுசெல்ல வேண்டும் என்றார்

Leave A Reply

Your email address will not be published.