`மாட்டுவண்டி பயணம்; உறியடி போட்டி!’ – பொங்கல் வைத்து தைத்திருநாள் கொண்டாடிய மாணவிகள்

0 20

விருதுநகர் அருகே கல்லூரி மாணவிகள் மாட்டுவண்டியில் பயணம் செய்தும் உறியடி போட்டியில் பங்கேற்றும் தைத்திருநாளை கொண்டாடினர்தமிழர் திருநாளாம் தைப்பொங்கல் ஜனவரி 15-ம் தேதி வெகு விமரிசையாகக் கொண்டாடப்பட உள்ளது தமிழ்நாடு மட்டுமன்றி உலகம் முழுவதும் உள்ள தமிழர்கள் இந்த நாளை சிறப்பாகக் கொண்டாடுவார்கள் தமிழ்நாட்டின் பெரும்பாலான கிராமங்களில் வீடுகளுக்கு வர்ணம் பூசி அழகுபடுத்துவர் கிராமம்தோறும் கபாடி கோ-கோ கோலப்போட்டி உறியடித்தல் போன்ற பல்வேறு போட்டிகள் நடத்தப்படும்வெளியூரில் தங்கிப் படிக்கும் மாணவர்களும் பணிபுரியும் ஊழியர்களும் தங்கள் சொந்த ஊர்களுக்குச் சென்று குடும்பத்தினரோடு பொங்கல் கொண்டாடுவார்கள் விருதுநகர் மாவட்டம் பாலவநத்தம் அருகே உள்ள நோபல் மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் இன்று தைப்பொங்கல் விழா சிறப்பாகக் கொண்டாடப்பட்டது அப்போது மாணவிகள் அனைவரும் கல்லூரிக்கு சேலை கட்டி வந்திருந்தனர்பாரம்பரியத்தை உணரும் வகையில் மாணவிகள் அனைவரும் மாட்டுவண்டியில் கல்லூரி வளாகத்தை சுற்றினர் அதன் பின்னர் கயிறு இழுத்தல் உறியடித்தல் போட்டிகளும் நடத்தப்பட்டன மாணவிகள் அனைவரும் மிகுந்த ஆர்வமுடன் பொங்கல் பண்டிகையைக் கொண்டாடி மகிழ்ந்தனர்

Leave A Reply

Your email address will not be published.