`ஆம்னி பேருந்துகளில் அதிகக் கட்டணம் வசூலித்தால் கடும் நடவடிக்கை!’ – துணை ஆணையர் எச்சரிக்கை

0 17

வரும்15-ம் தேதி பொங்கல் பண்டிகை தமிழகம் முழுவதும் கொண்டாடப்படுகிறது சொந்த ஊரில் பொங்கலைக் கொண்டாட மக்கள் தயாராகி வருகின்றனர் அந்த வகையில் கூட்டத்தை சமாளிக்க தமிழக அரசு சிறப்புப் பேருந்துகள் உட்பட மொத்தம் 24000 பேருந்துகளை இயக்க திட்டமிட்டுள்ளது எனினும் பொது மக்கள் தனியார் பேருந்துகளை நாடுவதால் அதன் கட்டணம் விண்ணை முட்டுவதாகப் பொதுமக்கள் புகார் தெரிவிக்கிறார்கள் சென்னையில் இருந்து சாதாரண நாள்களில் மதுரைக்குச் செல்ல அரசுப் பேருந்துகளில் 450 ரூபாய் வசூலிக்கப்படுகிறது ஆனால் அதே மதுரைக்குத் தனியார் பேருந்துகளில் 850 ரூபாய் வசூலிக்கின்றர் அதே பண்டிகை நாள்கள் என்றால் மூன்று மடங்காகக் கட்டணத்தை உயர்த்தி கொள்ளை லாபம் சாம்பாதிப்பதாகப் பொதுமக்கள் குற்றம் சாட்டுகின்றனர் சென்னையிலிருந்து மதுரைக்குச் செல்ல தனியார் பேருந்துகளில்1200 முதல் 1900 ரூபாய் வரை வசூலிக்கின்றர் இதுவே ஏசி பேருந்து என்றால் 2000-த்தை தொட்டுவிடுகிறது சாதாரண நாள்களில் சென்னையிலிருந்து திருநெல்வேலிக்குச் செல்ல அரசுப் பேருந்துகளில் 650 ரூபாய் ஆனால் தனியார் பேருந்துகளில் 850 ரூபாய் ஆனால் பொங்கல் பண்டிகைக்கு 2000 ரூபாயிலிருந்து 2500 வரை வசூலிப்பதாகப் பொதுமக்கள் புகார் தெரிவிக்கின்றனர்இந்தக் கட்டணக் கொள்ளை குறித்துப் பேசிய போக்குவரத்து துணை ஆணையர் பாலன் “சாதாரண நாள்களில் என்ன கட்டணம் வசூலிக்கப்பட்டதோ அதே கட்டணத்தைதான் பண்டிகை நாள்களிலும் வசூலிக்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது ஆனாலும் அதையும் மீறி அதிக கட்டணம் வசூலிக்கிறார்கள் கடந்த பண்டிகை நாள்களில் அதிக கட்டணம் வசூலிப்பதாகப் புகார் வந்தது அந்தப் புகாரை வைத்து ஆய்வு செய்தபோது 15 பேருந்துகளில் அதிக கட்டணம் வசூலித்தது உறுதியானது அந்தப் பேருந்துகளைப் பிடித்து வைத்துள்ளோம் அதே போன்று தற்போதும் ஆம்னி பேருந்துகளில் அதிக கட்டணம் வசூலிப்பதைத் தடுக்க சிறப்புக் கண்காணிப்புக் குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன சென்னையில்11 மண்டலங்களில் இந்தக் குழுக்கள் 24 மணி நேர கண்காணிப்புடன் செயல்படும் தனியார் பேருந்துகள் அதிக கட்டணம் வசூலிப்பது தெரிய வந்தால் பொதுமக்கள் 18004256151 இந்த எண்ணில் தொடர்புகொண்டு தங்களுடைய புகாரை தெரிவிக்கலாம் பொதுமக்கள் புகார் உறுதி செய்யப்பட்டால் அந்தப் பேருந்தின் உரிமம் ரத்து செய்வதோடு அபராதமும் விதிக்கப்படும் என்றார்      

Leave A Reply

Your email address will not be published.