நாய், செல்போனுடன் வகுப்பறையில் பள்ளி தாளாளர் – பதறும் சென்னை அரசுப் பள்ளி மாணவிகள் #ViralVideo

0 3

சென்னை கொருக்குப்பேட்டையில் உள்ள அரசு உதவி பெறும் பள்ளியில் வகுப்பறையில் மாணவிகள் அமர்ந்திருக்கும்போது ஒரு கையில் நாயைப் பிடித்தப்படியும் இன்னொரு கையில் செல்போனை பார்த்தப்படியும் அமர்ந்திருக்கும் பெண் குறித்த வீடியோ வெளியாகியுள்ளது சென்னை கொருக்குப்பேட்டையில் ஆர்ஜேஆர் அரசு உதவி பெறும் நடுநிலைப்பள்ளி செயல்பட்டுவருகிறது இந்தப் பள்ளியில் 160 மாணவ மாணவிகள் பயில்கின்றனர் தீபாவளியையொட்டி (நவம்பர் 8-ம் தேதி) இந்தப்பள்ளியில் திடீரென தீப்பிடித்தது இதனால் மாணவ மாணவிகள் ஆசிரியர்கள் அலறியடித்து பள்ளியை விட்டு வெளியேறினர் தீயணைப்பு வீரர்கள் விரைந்துவந்து தீயை அனைத்தனர் இந்தச் சூழ்நிலையில் இந்தப்பள்ளி நிர்வாகத்துக்கும் அங்குள்ள சில ஆசிரியர்களுக்கும் நீண்ட காலமாக பிரச்னை இருந்துவருகிறது குறிப்பாக பள்ளி தலைமை ஆசிரியருக்கு இருக்கை கூட வகுப்பறையில் கிடையாது இதனால் தலைமை ஆசிரியர் ஸ்ரீதேவி பிரியா தினமும் வீட்டிலிருந்து இருக்கையைக் கொண்டு வந்து திரும்ப அதை எடுத்துச் செல்லும் சூழல் நிலவுகிறது  தற்போது இந்தப்பள்ளியை மூட அதை நடத்துபவர்கள் முடிவு செய்து பள்ளியை வணிக வளாகமாக மாற்றிவிட்டதாக பெற்றோர்கள் குற்றம் சாட்டுகின்றனர் கடந்த முறை தீ விபத்து ஏற்பட்டபோதுகூட பள்ளியைவிட்டு வெளியேற மாணவ மாணவிகள் சிரமப்பட்டுள்ளனர் இந்தப் பள்ளியில்தான் வகுப்பறைக்குள் மாணவர்கள் அமர்ந்திருந்து கல்வி கற்றுக்கொண்டிருக்கும்போது ஷேரில் அமர்ந்தபடி ஒரு கையில் நாயையும் மற்றொரு கையில் செல்போனையும் பார்த்தபடி இருக்கும் வீடியோ வெளியாகியுள்ளது அந்த வீடியோ குறித்து விசாரித்தபோது பள்ளியில் தாளாளர் ஜெயந்தி என்று மாணவ மாணவிகள் கூறினர்இதுகுறித்து பெற்றோர் ஒருவர் கூறுகையில் “நானும் இந்தப்பள்ளியில்தான் படித்தேன் அப்போது பள்ளி வளாகம் விரிவடைந்து எல்லா வசதிகளும் இருந்தன தற்போது பள்ளி வளாகத்தில் வணிக நிறுவனங்கள் உள்ளதால் மாணவ மாணவிகளுக்கு எந்தவித அடிப்படை வசதிகளும் இல்லை குறிப்பாக கழிவறைக்கு தாழ்பாள் இல்லை மேலும் ஒரே கழிவறை மட்டும் பயன்பாட்டில் உள்ளது இதனால் மாணவ மாணவிகள் பெரிதும் சிரமப்படுகின்றனர் அதுகுறித்து பள்ளி நிர்வாகத்திடம் கேட்டால் சரிவர பதில் இல்லை சமீபத்தில் நடந்த தீ விபத்தில் யாருக்கும் பாதிப்பு இல்லை கும்பகோணம் பள்ளி விபத்துபோல ஒரு அசம்பாவிதம் நடப்பதற்கு முன் பள்ளிகல்வித்துறை நடவடிக்கை எடுக்கவேண்டும்  சில நாள்களுக்கு முன் பள்ளிக்கு நாயுடன் வந்த தாளாளர் ஜெயந்தி வகுப்பறைக்குச் சென்றுள்ளார் இருக்கையில் அமர்ந்தப்படி செல்போனை அவர் பார்த்துள்ளார் அப்போது அவர் அழைத்து வந்த நாயால் மாணவ மாணவிகள் அச்சம் அடைந்துள்ளனர் ஏற்கெனவே எனது மகளுக்கு நாய் கடித்துள்ள நிலையில் வகுப்பறைக்கு நாயை அழைத்து வந்த சம்பவம் எங்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது எனவே சம்பந்தப்பட்டபள்ளி தாளாளர் ஜெயந்தி இனிமேல் நாயுடன் வகுப்பறைக்குள் வருவதை தடுக்க கல்வி அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார் இதுகுறித்து வட்டார கல்வி அலுவலர் குமாரிடம் பேசினோம் “சம்பந்தப்பட்ட பள்ளியில் ஆய்வு நடத்தி நடவடிக்கை எடுத்துவருகிறோம் நவம்பர் மாதத்தில் நடந்த தீ விபத்து குறித்து ஆய்வு நடத்தியுள்ளோம் இந்தப் பள்ளியின் தாளாளர் ஜெயந்தியிடம் நோட்டீஸ் அனுப்பியுள்ளோம் அதற்குப் பதிலளித்த அவர் பள்ளியைத் தொடர்ந்து நடத்த அவர் விரும்பவில்லை என்று கூறியுள்ளார் இதனால் விரைவில் கல்வி உயரதிகாரிகளுடன் ஆலோசித்து அடுத்தகட்ட நடவடிக்கை எடுக்கப்படும்3939 என்றார் குமாரிடம் வகுப்பறைக்குள் பள்ளி தாளாளர் ஜெயந்தி நாயுடன் இருக்கும் வீடியோ குறித்து கேட்டதற்கு “ஏற்கெனவே அதுதொடர்பான தகவல் எங்களுக்குக் கிடைத்ததும் அவரை எச்சரித்துள்ளோம் இந்தப்பள்ளி தொடர்பாக நீதிமன்றத்தில் வழக்கு நிலுவையில் உள்ளது பொங்கல் விடுமுறை முடிந்தபிறகு பள்ளிக்குச் சென்று மீண்டும் ஆய்வு நடத்தி நடவடிக்கை எடுக்கப்படும் என்றார் பள்ளி தாளாளர் ஜெயந்தியிடம் பேசியபோது அந்த வீடியோவில் நாயுடன் இருப்பது நான் இல்லை அது எங்கள் ஸ்கூலே இல்லை மேலும் பள்ளி தலைமை ஆசிரியர் ஸ்ரீதேவிபிரியா மற்றும் அவரின் கணவர் சோமசுந்தரம் என்கிற ராஜாவால்தான் இந்தப்பள்ளியை எங்களால் தொடர்ந்து நடத்த முடியாத சூழல் உள்ளது உங்களுக்கு இந்த வீடியோவை கொடுத்ததுகூட அவர்களால்தான் இருக்கும் என்றார்  

Leave A Reply

Your email address will not be published.