‘கொட நாடு மர்மங்கள்; நீதிமன்ற கண்காணிப்பில் விசாரணை வேண்டும்” – அ.தி.மு.க முன்னாள் எம்.பி கோரிக்கை

0 9

கொடநாடு மர்மங்கள் தொடர்பாக சென்னை உயர் நீதிமன்றம் சிறப்பு புலனாய்வுக் குழு அமைத்து விசாரணை நடத்த வேண்டும் என்று அதிமுக முன்னாள் எம்பி கேசிபழனிசாமி கூறியுள்ளார்கொடநாடு எஸ்டேட் காவலாளி கொலை இதையடுத்து நடந்த மர்ம மரணங்கள் நடந்து இரண்டு ஆண்டுகள் ஆகப்போகிறது இந்த நிலையில் தெஹல்கா முன்னாள் ஆசிரியர் மேத்யூஸ் சாமுவேல் இதுதொடர்பான ஆவணப் படத்தை வெளியிட்டுள்ளார் அதில் முக்கியக் குற்றவாளியான சயான் அளித்துள்ள வாக்குமூலத்தில் தமிழக முதல்வரின் பெயர் அடிபட்டுள்ளது இது தமிழக அரசியலில் பரபரப்பைப் பற்ற வைத்துள்ளதுஇதுகுறித்து அதிமுக முன்னாள் எம்பி கேசிபழனிசாமி கோவையில் செய்தியாளர்களிடம் கூறுகையில் “கொடநாடு எஸ்டேட் கொள்ளை மற்றும் கொலை வழக்கு தொடர்பாக வெளியாகியுள்ள சர்ச்சை குறித்து சென்னை உயர் நீதிமன்றம் தாமாக முன்வந்து வழக்காக எடுத்து மேத்யூஸ் மற்றும் சயானிடம் விசாரணை நடத்த வேண்டும் இதற்காக சிறப்பு புலனாய்வுக் குழு அமைத்து அந்தக் குற்றச்சாட்டின் உண்மைத் தன்மையை விசாரிக்க வேண்டும் அதில் தவறு இருந்தால் சம்பந்தப்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் தவறு ஏதும் இல்லாத பட்சத்தில் மேத்யூஸ் மற்றும் சயான் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்ஏற்கெனவே ஜெயலலிதா மரணம் தொடர்பாக பல்வேறு சந்தேகங்கள் வெளியாகி அதிமுக தொண்டர்கள் மற்றும் மக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது எனவே நீதிமன்றத்தின் கண்காணிப்பில் இதன் உண்மைத் தன்மையை விசாரிக்க வேண்டும் அதைத்தான் அதிமுக தொண்டர்களும் மக்களும் விரும்புகின்றனர்” என்றார்

Leave A Reply

Your email address will not be published.