ஆளுநர் பங்கேற்ற தூய்மை பாரத நிகழ்ச்சி – காற்றில் பறந்த சருகுகளால் பதறிய அதிகாரிகள்

0 9

 ராமநாதபுரத்தில் தூய்மை பாரதம் உறுதிமொழி நிகழ்ச்சியில் பங்கேற்க வந்திருந்த தமிழக கவர்னர் பன்வாரிலால் புரோஹித் தூய்மைப் படுத்துவதற்காக கொட்டப்பட்ட இலை சருகுகள் காற்றில் பறந்ததால் பரபரப்பு ஏற்பட்டதுராமநாதபுரம் பட்டிணம்காத்தான் ஊராட்சி பகுதியில் தூய்மை பாரத இயக்கத்தின் விழிப்பு உணர்வு நிகழ்ச்சி நடந்தது இந்த நிகழ்ச்சியில் பங்கேற்ற தமிழக கவர்னர் பன்வாரிலால் புரோஹித் தூய்மை பாரத இயக்கத்தின் அவசியம் குறித்தும் ராமநாதபுரம் மாவட்டத்தின் தூய்மை பாரத இயக்கத்தின் செயல்பாடு குறித்தும் உரையாற்றினார் பின்னர் அங்கு கூடியிருந்த மாணவ மாணவிகள் ஊரக வாழ்வாதார இயக்கத்தினர் அதிகாரிகள் பொதுமக்கள் கவர்னர் பன்வாரிலாலுடன் இணைந்து  தூய்மை பாரத இயக்கத்துக்கான உறுதி மொழியை எடுத்துக்கொண்டனர் இந்நிகழ்ச்சியில் அமைச்சர் மணிகண்டன் மாவட்ட ஆட்சியர் வீரராகவ ராவ் உள்ளிட்ட மாவட்ட அதிகாரிகள் பங்கேற்றனர் இதைத் தொடர்ந்து அங்கு அமைக்கப்பட்டிருந்த தூய்மை பாரத இயக்கம் தொடர்பான புகைப்பட கண்காட்சியைத் திறந்து வைத்தார் இதைத் தொடர்ந்து விழா மேடையின் எதிர்புறத்தில் உள்ள சாலை ஓரத்தில் கவர்னர் பன்வாரிலால் புரோஹித் தூய்மைப் பணி மேற்கொண்டார் இதற்கென ஏற்கெனவே தூய்மைப்படுத்தப்பட்டிருந்த பகுதியில் காய்ந்த இலை சருகுகளும் கிழித்த செய்தித் தாள்களும் குப்பைகளாக கொட்டப்பட்டிருந்தது கவர்னர் அந்த இடத்துக்கு வந்து கொண்டிருந்தபோது திடீரென வீசிய காற்றினால் திறந்த வெளியில் கொட்டப்பட்ட சருகுகள் பறந்தோடின இதையடுத்து கவர்னர் கூட்டுவதற்காகவே மீண்டும் காய்ந்த சருகுகளும் கிழிந்த காகிதங்களும் போடப்பட்டன அவற்றை கவர்னர் அமைச்சர் மணிகண்டன் மற்றும் அதிகாரிகள் கூட்டியதுடன் அப்பகுதியில் இருந்த கடைகளுக்கு சென்று தூய்மைப் பணி குறித்து விசாரித்தனர்

Leave A Reply

Your email address will not be published.