‘பொங்கல் பரிசு’ – குமாரபாளையத்தில் ரேஷன் கடையில் தி.மு.க-வினர் வாக்குவாதம்

0 20

நாமக்கல் மாவட்டம் குமாரபாளையத்தில் ரேஷன் கடையில் அதிமுக-வினருடன் திமுக-வினர்  வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்தமிழகம் முழுவதும் பொங்கல் பரிசு தொகுப்பு கடந்த வாரம் முதல் ரேஷன் கடைகளில் வழங்கப்பட்டு வருகிறது குடும்ப அட்டைதாரர்களுக்கு ₹ 1000 பொங்கல் பரிசுத் தொகுப்பினை வழங்கி வரும் சூழ்நிலையில் நேற்று குமாரபாளையத்தில் உள்ள ரேஷன் கடைகளில் திமுக-வினர் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்இதுகுறித்து நம்மிடம்  பேசிய திமுக-வினர் “அரசு வழங்கும் திட்டத்தில் அதிமுக அரசு வழங்கும் பரிசுப்பொருள் என்று எழுதியுள்ளார்கள் அவர்கள் கட்சிக்கொடியின் கலரான கறுப்பு வெள்ளை சிவப்பு மூவர்ண கலரில் பேனர் வைக்கப்பட்டுள்ளது அதனால் தான் வாக்குவாதத்தில் ஈடுபட்டோம் இது தொடர்ந்தால் திமுக-வினர் போராட்டத்தில் ஈடுபடுவோம் என்றனர் திமுக-வினர் வாக்குவாதத்தில் ஈடுபட்ட  நேரத்தில் அந்த பேனர்கள் எடுக்கப்பட்டது இதனால் ஒரு மணி நேரத்துக்கும் மேலாக கடை சாத்தப்பட்டது இதனால் பொதுமக்கள் பாதிக்கப்பட்டனர்

Leave A Reply

Your email address will not be published.