தூத்துக்குடி இரட்டை கொலை! – குண்டர் தடுப்புச் சட்டத்தில் சகோதரர்கள் சிறையிலடைப்பு

0 25

தூத்துக்குடியில் தாத்தா பேரன் வெட்டிப் படுகொலை செய்யப்பட்ட வழக்கில் மாரிமுத்து சின்னத்தம்பி ஆகிய அண்ணன் தம்பி இருவரும் குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்தூத்துக்குடி மாவட்டம் வல்லநாடு அருகில் உள்ளது பக்கபட்டி கிராமம் இக்கிராமத்தைச் சேர்ந்தவர் ராமையா இவரின் மகன் சுடலைமணி நெல்லையில் உள்ள தனியார் ஜவுளிக்கடையில் வேலை பார்த்து வந்துள்ளார் தினமும் பக்கப்பட்டியிலிருந்து பேருந்தில் நெல்லைக்குச் சென்று வருவது வழக்கம் இந்த நிலையில் கடந்த டிசம்பர் 26-ம் தேதி புதன்கிழமை இரவு 1130 மணிக்கு வேலையை முடித்துவிட்டு தன் வீட்டுக்குச் செல்வதற்காக முறப்பநாடு பேருந்து நிலையத்தில் இறங்கியுள்ளார் சுடலைமணியை வீட்டுக்கு அழைத்துச் செல்வதற்காக அவரின் தாத்தா முத்துசாமி பக்கபட்டி விலக்கில் காத்திருந்தார்பேருந்தை விட்டு இறங்கிய சுடலைமணி பக்கபட்டி விலக்கு நோக்கி நடந்து சென்றுகொண்டிருக்கையில் அப்பகுதியில் மறைந்திருந்த மர்ம நபர்கள் சுடலைமணியைப் பின்தொடர்ந்து அரிவாளால் வெட்டினர் இதைப் பார்த்ததும் தடுக்கச் சென்ற தாத்தா முத்துசாமிக்கும் வெட்டு விழுந்தது இதில் இருவரும் சம்பவ இடத்திலேயே  உயிரிழந்தனர் சுடலைமணியும் அதே பகுதியைச் சேர்ந்த சின்னத்தம்பி என்பவரும் தாமிரபரணி ஆற்றில் குளித்துக்கொண்டிருந்தபோது அதே பகுதியைச் சேர்ந்த வடிவேல் முருகன் என்பவரும் குளிக்க வந்துள்ளார் அப்போது இரு தரப்பினருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளதுபின்னர் இது தொடர்பாக வடிவேல் முருகன் சின்னத்தம்பி மீது மட்டுமே போலீஸில் புகார் கூறியதாகவும் இருவருக்கும் ஏதோ தொடர்பு உள்ளதாகவும் கூறி சின்னத்தம்பி சுடலைமணியிடம் பேச்சை நிறுத்திவிட்டார் அத்துடன் இது தொடர்பாக அடிக்கடி மோதல் ஏற்பட்டது எனவும் இந்த நிலையில்தான் சுடலைமணியை சின்னத்தம்பி கொலை செய்ய திட்டமிட்டதாக விசாரணையில் தெரிய வந்ததுஇச்சம்பவம் தொடர்பாக சின்னத்தம்பி அவரின் அண்ணன் மாரிமுத்து தம்பி அருண்குமார் மற்றும் அவரின் உறவினரான மற்றொரு சின்னத்தம்பி ஆகிய 4 பேரை போலீஸார் தேடி வந்தனர் இந்த நிலையில் கடந்த 28-ம் தேதி சுடலைமணியையும் தாத்தா முத்துசாமியையும் கொலை செய்ததாகக் கூறி சின்னத்தம்பி மற்றும் அவரது அண்ணன் மாரிமுத்து ஆகிய இருவரும் நெல்லை மாவட்டம் ஆலங்குளம் குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் சரணடைந்தனர்இருவரும் 15 நாள்கள் நீதிமன்றக் காவலில் பாளையங்கோட்டை மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர் இந்த நிலையில் இன்று மாவட்ட எஸ்பி முரளி ரம்பா பரிந்துரையின் பேரில் மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரி இருவரையும் குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்து சிறையில் அடைக்க உத்தரவிட்டார் இதன்படி இருவரும் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்      

Leave A Reply

Your email address will not be published.