தஞ்சாவூர் எஸ்.பி செந்தில்குமார் மாற்றப்பட்டது ஏன்? – பின்னணித் தகவல்கள்!

0 19

தஞ்சாவூர் கலெக்டர் அண்ணாதுரை எஸ்பி செந்தில்குமார் மற்றும் வேளாண்மைத்துறை அமைச்சர் துரைக்கண்ணு ஆகிய மூவரும் ஒரே சமூகத்தைச் சேர்ந்தவர்கள் இதனால் எஸ்பி செந்திகுமார் உயர்அதிகாரிகள் சொல்வதைக் கேட்பதும் இல்லை மரியாதையும் கொடுப்பதும் இல்லை என சொல்லப்படுகிறது மேலும் இவர் மீது பல்வேறு புகார்கள் உயர் அதிகாரிகளுக்குச் சென்ற வண்ணம் இருந்ததாகவும் அதனாலேயே பணி மாறுதல் செய்யப்பட்டதாகவும் தஞ்சாவூரில் போலீஸ் வட்டாரத்தில் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறதுதஞ்சாவூர் எஸ்பி செந்தில்குமார் உள்ளிட்ட உயர் போலீஸ் அதிகாரிகள் 12 பேர் திடீரென இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர் இதில் குறிப்பாக தஞ்சாவூரில் எஸ்பியாக இருந்த செந்தில்குமார் மட்டும் விருதுநகர் மாவட்டம் ராஜபாளையத்தில் உள்ள தமிழ்நாடு சிறப்பு காவல் படையின் 11வது பட்டாலியன் கமாண்டராக பணி மாற்றம் செய்யப்பட்டுள்ளார் அவருக்குப் பதிலாக ராஜபாளையத்தில் இருந்த மகேஸ்வரன் தஞ்சை எஸ்பியாக  பதவி ஏற்றுக்கொள்கிறார் அதிகாரிகள் மாற்றம் என்பது வழக்கமான ஒன்றுதான் என்றாலும் எஸ்பி செந்தில்குமார் பட்டாலியனுக்கு மாற்றப்பட்டதற்கு பல்வேறு காரணங்கள் இருப்பதாக போலீஸ் அதிகாரிகள் பல பகீர் தகவல்களை தெரிவித்துள்ளனர்இது குறித்து போலீஸார் தரப்பில் சிலரிடம் பேசினோம் “தஞ்சாவூரில் பணிபுரியும் கலெக்டர் அண்ணாதுரை எஸ்பி செந்தில்குமார் மற்றும் வேளாண்மைத்துறை அமைச்சர் துரைக்கண்ணு ஆகிய மூவரும் ஒரே சமூகத்தைச் சேர்ந்தவர்கள் இதனால் இவர்கள் அதிகாரிகள் மூன்று பேரும் உறவினர்கள் போலவே பழகி வந்தனர் அதோடு கலெக்டர் அண்ணாத்துரையும் எஸ்பி செந்தில்குமாரும் ஒன்றாக படித்தவர்கள் மேலும் கலெக்டர் அண்ணாதுரை அமைச்சர் துரைக்கண்ணுவை மாமா என உறவுமுறை கூறியே அழைப்பார் என்றும் சொல்லப்படுகிறது மூன்று பேரும் ஒரே சமூகத்தை சேர்ந்தவர்கள் என்பதால் மாற்றும் சமூகத்தைச் சேர்ந்த மக்களுக்கு எந்த நலத்திட்டங்களும் செய்யப்படவில்லை என்று குற்றச்சாட்டும் எழுந்ததுஇதைக் கண்டித்து ஆர்ப்பாட்டமும் நடத்தப்பட்டுள்ளது இந்த நிலையில் செந்தில்குமார் பல இடங்களில் தனது  அதிகாரத்தை தவறாகப் பயன்படுத்தி வருவதாக டிஐஜி லோகநாதனுக்கு புகார்கள் வந்து கொண்டே இருந்தது இது குறித்து செந்தில்குமாரிடம் பலமுறை டிஐஜி உள்ளிட்ட உயர் அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்தனர் ஆனால் அமைச்சருக்கு நெருக்கமானவர் என்பதால் உயர் அதிகாரிகள் யாரையும் மதிக்காமலும் அவர்கள் சொல்வதைக் கேட்காமலும் இருந்து வந்துள்ளார் ஒருமுறை டிஐஜிலோகநாதன் போனில் தொடர்புகொண்டபோது வெளியில் இருந்துகொண்டு அலுவலகத்தில் இருப்பதாக தெரிவித்துள்ளார் செந்தில்குமார் உடனே அவரை அலுவலக போனிலிருந்து போன் செய்யச் சொல்லி இருக்கிறார் டிஐஜி ஆனால் அதற்கு அவர் மறுத்து விட்டாராம் இப்படியாக செந்தில்குமார்  மீது தொடர்ந்து புகார் தொடர்ந்து எழுந்த வண்ணம் இருந்தது மேலும் அமைச்சர் துரைக்கண்ணுவுக்காக எம்பி வைத்திலிங்கம் சொல்வது எதையும் கேட்பது கிடையாது இவர் மீது வந்த புகார்களை மேலிடத்தில் உயரிய பொறுப்பில் உள்ள அதிகாரிகள் விசாரித்து அவை அனைத்தும் உண்மை எனக் கண்டறிந்துள்ளனர் இதுபோன்ற காரணங்களால் தான் எஸ்பி செந்தில்குமார் தூக்கியடிக்கப்பட்டார்தஞ்சாவூரில் எஸ்பியாக இருந்தவர்கள் பட்டாலியனுக்கு மாற்றப்பட்டதே கிடையாது இவரை தண்டிக்க வேண்டும் என்பதற்காகவே இந்தத் துறைக்கு மாற்றியுள்ளனர் ஆனாலும் செந்தில்குமார்  அமைச்சர் துரைக்கண்ணு மூலமாகவும் தனக்கு நெருக்கமானவர்கள் மூலமாகவும் பட்டாலியனுக்கு மாற்றப்பட்ட பணி மாறுதலை மாற்றம் செய்து வேறு ஏதேனும் ஊருக்கு எஸ்பி பொறுப்பிலேயே செல்வதற்கு முயற்சி செய்து வருகிறார்” என போலீஸ் வட்டாரத்தில் தெரிவித்தனர் இதுகுறித்து எஸ்பி தரப்பில் பேசினோம்`தனது பணியை அவர் சிறப்பாகவே செய்துவந்தார் நடவடிக்கைகள் எல்லாம் நல்லாதான் எடுத்துட்டு வந்தார் அவரைத் திடீர்னு ஏன் பணியிட மாற்றம் செஞ்சாங்கனு தெரியல’ என்கின்றனர்

Leave A Reply

Your email address will not be published.