அடிப்படைக் கல்வி தாய்மொழியில் இருக்க வேண்டும்: தங்கம் தென்னரசு

0 16

குழந்தைகளின் அடிப்படைக் கல்வி தாய்மொழியில்தான் இருக்க வேண்டும் என்று தமிழகப் பள்ளிக் கல்வித்துறையின் முன்னாள் அமைச்சரும் திமுக முன்னணி தலைவர்களில் ஒருவருமான தங்கம் தென்னரசு விருப்பம் தெரிவித்துள்ளார்விருதுநகர் மாவட்டம் மல்லாங்கிணற்றைச் சேர்ந்த தங்கம் தென்னரசு தற்போது திருச்சுழித் தொகுதி சட்டமன்ற உறுப்பினராக உள்ளார் அவரை நேரில் சந்திக்கச் சென்றோம் இனிய தமிழ்ப்புத்தாண்டு வாழ்த்துகள் என்று கூறி நம்மை வரவேற்றார் அவருடன் நடத்திய சிறு உரையாடல்“தைப்பொங்கல் தினத்தை ஒவ்வோர் ஆண்டும் எப்படிக் கொண்டாடுவீர்கள்“கல்லூரியில் படிக்கும்வரை பொங்கல் தினத்தன்று ஒருநாள் மட்டுமே கட்சிக் கரை வேட்டி கட்ட அப்பா அனுமதிப்பார் அன்றைய தினம் எங்கள் பகுதியில் கட்சிக் கொடியேற்றுவேன் போட்டிகளில் பங்கேற்பேன் இது வழக்கமாக இருந்தது தைப்பிறப்பைத் தமிழ்ப்புத்தாண்டு எனத் தலைவர் கருணாநிதி அறிவித்ததிலிருந்து ஒவ்வோர் ஆண்டும் எங்கள் குடும்ப உறுப்பினர்கள் அனைவரும் சென்னைக்குச் சென்று அவரிடம் ஆசி வாங்குவோம் பின்னர் இங்கே பொங்கல் கொண்டாட்டம் இருக்கும் கட்சிக்கொடி ஏற்றுதல் பொங்கல் விளையாட்டுப் போட்டிகளை ரசித்தல் என இருக்கும் மாட்டுப்பொங்கல் அன்று எங்கள் தோட்டத்தில் பொங்கல் வைத்துக் குடும்பத்தோடு பாரம்பர்ய வழக்கப்படி கொண்டாடுவோம் “இந்த ஆண்டு தைப்பொங்கல் கொண்டாட்டத்துக்கான திட்டம் என்ன“இந்த ஆண்டு தலைவர் இல்லாதது எங்களுக்கு மிகப்பெரிய மனக்குறை அதனால் எங்களுக்கு இந்தப் பொங்கல் இனிக்கவில்லை கொண்டாட்டம் பெருமளவு இருக்காது வழக்கம்போல் கட்சிக் கொடியேற்றுவதில் அதிக நேரம் செலவிடுவேன்“தை 1-ம் தேதி தமிழ்ப் புத்தாண்டு என்பதை பெரும்பாலான மக்கள் இன்னும் ஏற்றுக்கொள்ளவில்லையே“சுயமரியாதை பகுத்தறிவுக் கருத்துகளை பெரியார் எடுத்துச் சொன்னபோது அவரை கல்லால் எறிந்த சம்பவங்கள் நிறைய உண்டு தைப்புத்தாண்டுதான் தமிழ்ப்புத்தாண்டு என்ற கருத்தை மக்களுக்கு எடுத்துச் சொல்ல வேண்டிய கடமையும் பொறுப்பும் நமக்கு நிறைய உண்டு சித்திரை 1-ம் தேதியை மரபு வழியாகக் கொண்டாடி வந்த மக்களிடம் தை முதல்நாள் தமிழ்ப் புத்தாண்டு என்பதை விளக்கிக் கூற வேண்டும் தமிழறிஞர்கள் நன்றாகச் சிந்தித்த பின்பே தைப்பிறப்பைத் தமிழ்ப் புத்தாண்டாக அறிவித்தனர் வானியல் ரீதியாக நிரூபிக்கப்பட்ட ஒன்று தமிழர்களிடம் இன உணர்வு வலுப்பெறும்போது தமிழ்ப்புத்தாண்டு எது என்ற தெளிவு ஏற்படும்“தமிழகப் பள்ளிக்கல்வித்துறையின் தற்போதைய செயல்பாடு எப்படி உள்ளது“ஏமாற்றமளிக்கிறது திட்டங்கள் எல்லாம் அறிவிப்புகளாக இருக்கிறதே தவிர நடைமுறைக்கு வந்தபாடில்லை நிர்வாகச் சீர்திருத்தம் என்ற பெயரில் மிகப்பெரும் குளறுபடிகள் நடக்கின்றன ஏராளமான அறிவிப்புகள் வெளியிடப்படுவதால் என்ன அறிவிப்பு வெளியானது என்பது தெரியாமல் மக்கள் குழப்பமடைந்துள்ளனர் ஒரு அறிவிப்பு வெளியிட்ட பின் மூன்று மாதங்களுக்குப் பின் அதற்கு முரணான அறிவிப்பை வெளியிடுகிறார் அமைச்சர் “பள்ளிக் கல்வித்துறைக்கெனத் தனியாக தொலைக்காட்சி சேனல் ஆரம்பிக்கப்போவதாக அறிவித்துள்ளார்களே“மாணவர்களின் மனநிலையை முதலில் புரிந்துகொள்ள வேண்டும் முறையான கல்வி அறிவு பெற வகுப்பறை அவசியம் ஒருவருக்கு அவரது வயதுக்குரிய கல்வியைக் கற்றுத்தரும் கடமை ஆசிரியர்களுக்கு உண்டு ஆனால் மூன்று ஆண்டுகளாகப் பள்ளிகளில் ஆசிரியர் நியமனம் இல்லை மேல்நிலைப் பள்ளி மாணவர்களுக்கு பிப்ரவரியில் செய்முறைத் தேர்வும் மார்ச் மாதம் பொதுத்தேர்வும் நடைபெற உள்ளது ஆனால் இப்போதுதான் தற்காலிக முதுகலை ஆசிரியர்களை நியமிக்கப்போவதாக அறிவித்துள்ளனர் இப்படி இருந்தால் மாணவர்கள் எப்படிப் படிக்க முடியும்“மாணவர்களின் எண்ணிக்கையைக் காரணம்காட்டி அரசுப்பள்ளிகளை மூடும் முடிவு சரியானதா“மிகவும் தவறு காமராஜர் அண்ணா கலைஞர் ஜெயலலிதா என யாரும் பள்ளியை மூடும் முடிவை எடுக்கவில்லை புரட்சிகரமான திட்டங்களை நிறைவேற்றுவதாகக் கூறிக்கொண்டு பள்ளிகளை மூடுகின்றனர் 3000 பள்ளிகளை மூடுவதுதான் பள்ளிக் கல்வித்துறையின் புரட்சியா மூடப்பட உள்ள பள்ளிகளில் கிராமப்புறங்களில் உள்ள பள்ளிகளும் அடங்கும் அரசுப் பள்ளிகளை மூடுவது  தொடக்கக் கல்விக்கான அடிப்படை உரிமையை நசுக்கும் செயல்“தனியார் பள்ளிகளுக்கு இணையாக அரசுப்பள்ளிகளில் ஆங்கில வழிக்கல்வி முறை அறிமுகம் செய்யப்பட்டுள்ளதாகக் கூறுகிறார்களே“திமுக ஆட்சியின்போது மெட்ரிக் பள்ளிகளைக்கூட மத்தியப் பாடத்திட்டத்துக்கு மாற்ற அனுமதி தரவில்லை தமிழ் வழிக்கல்வியை முற்றிலும் பாதிக்கும் என்பதாலும் சமச்சீர் கல்விக்கு விரோதமாக அமையும் என்பதாலும்தான் அந்த முடிவில் இருந்தோம் ஆனால் இன்று ஆங்கிலவழிப் பள்ளிகளை முழுமையாக ஆதரித்து தமிழ்வழிப் பள்ளிகளை மூடுவது என்பது தமிழ் மொழிக்கும் தமிழ்வழி கல்விக்கும் செய்யும் மிகப்பெரும் துரோகம்கல்லூரி மாணவர்கள் படிக்கும் பாடம் 11-ம் வகுப்பு பாடத்தில் சேர்க்கப்பட்டுள்ளது இதனால் மாணவர்களின் மனநிலை என்னவாகும் என்பதைச் சிந்திக்க வேண்டாமா பள்ளிக் கல்வித்துறை வேகமாகச் செயல்படுகிறது என்ற பிம்பத்தை மக்கள் மத்தியில் உருவாக்கும் நடவடிக்கைதான் நடந்துகொண்டிருக்கிறதே தவிர செயல்பாடு எதுவும் இல்லை அண்ணா நூலகத்துக்கு ரூ5 கோடிக்குப் புத்தகங்கள் தருவதாகச் சொன்னார்கள் ஆனால் இதுவரை ஒரு புத்தகம்கூட வாங்கவில்லை நூல் தேர்வுக்குழுவைக்கூட இன்னும் அமைக்கவில்லை“தாய்மொழிக் கல்வியின் அவசியம் என்ன“ஒரு குழந்தை கற்றுக்கொள்வதன் முதல்படி தாய்மொழிதான் பள்ளியில் முறைசார்ந்த கல்வியைக் கற்றுக்கொள்வதற்கு முன்பாக ஒவ்வொரு விஷயத்தையும் வீட்டிலேயே கற்றுக்கொள்கிறது இதற்குத் தாய்மொழிதான் உதவுகிறது தாய்மொழிதான் கற்றலின் தொடக்கப் புள்ளி தாய்மொழி வழியில் கற்பவர்கள் இயல்பாகவே மிகப்பெரும் அறிவுத்திறன் கொண்டவர்களாக இருப்பர் இது உலகம் முழுக்க நிரூபிக்கப்பட்ட ஒன்று உலகத்தோடு தொடர்புகொள்ள ஆங்கிலம் அவசியம் ஆங்கிலத்தை வரவேற்கிறோம் அதனால்தான் இரண்டாவது மொழிப் பாடமாக ஆங்கிலம் உள்ளது ஆனால் அடிப்படைக் கல்வி என்பது தாய்மொழியாகத்தான் இருக்க வேண்டும்“அரசுப் பள்ளிகளில் பயிலும் மாணவர்களின் எண்ணிக்கை ஒவ்வோர் ஆண்டும் குறைந்துகொண்டே வருகிறதே“பள்ளி மாணவர்களுக்குப் பல்வேறு நலத்திட்டங்களும் வழங்கப்பட்டு வருவதால் மாணவர் சேர்க்கையில் குறைவு இல்லை ஆனால் அந்த மாணவர்களைத் தக்கவைப்பதில்தான் சிக்கல் உள்ளது ஆனால் அரசுப் பள்ளி சரியில்லை எனக் கூறி அங்கே இருந்து வெளியேறும் மாணவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது இதைச் சரிசெய்ய வேண்டும் தனியார் பள்ளிகள் எல்லாம் தற்போது கோச்சிங் மையங்களாக மாறிவிட்டன இதை முறைப்படுத்த வேண்டும்“அரசுப்பள்ளிகளை மேம்படுத்த என்னென்ன செய்ய வேண்டும்“கல்வித்தரத்தை மேம்படுத்த வேண்டும் ஒவ்வொரு மாணவரும் அந்தந்த வயதுக்கேற்றத் திறனை அடைந்து விட்டாரா என்பதை உறுதி செய்ய வேண்டும் ஆசிரியர்கள் தயாராக வேண்டும் பாடப்புத்தகங்களைத் தாண்டி மாணவர்கள் தங்களைத் தயார்படுத்திக்கொள்ள வேண்டும் ஆசிரியர்களை ஊக்குவித்தால் மாணவர்கள் தானாக முன்னேறுவார்கள் அரசுப் பள்ளிகளுக்குத் தனியார் பங்களிப்பு நிறைய உண்டு கழிப்பறை அடிப்படை வசதிகள் செய்ய வேண்டும் கோயில்களுக்குச் செய்வதைப் போல பள்ளிகளுக்கும் நிறைய செய்ய வேண்டும் தான் படித்த பள்ளிக்கு ஏதாவது செய்ய வேண்டும் என்ற எண்ணம் இளைஞர்களிடம் உண்டு இதை முறையாகப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும்“அண்ணா மறுமலர்ச்சித் திட்டத்தின்கீழ் அனைத்துக் கிராமங்களுக்கும் கொண்டு வரப்பட்ட நூலகங்கள் எதுவும் இப்போது பயன்பாட்டில் இல்லையே“சட்டமன்றத்தில் இதுசம்பந்தமாக பலமுறை பேசியுள்ளோம் இந்தியாவிலேயே வேறு எந்த மாநிலத்திலும் இந்தத் திட்டம் இல்லை ஏற்கெனவே நூலகத்துறை மூலம் கிராமத்தில் கிளை நூலகங்கள் செயல்பட்டுக்கொண்டிருக்கும்போது மீண்டும் இந்த நூலகம் அமைப்பதால் அரசுக்குச் செலவுதானே எனக் கலைஞரிடம் கேட்டபோது `ஒரே கிராமத்தில் பல கோயில்கள் இருக்கும் போது இரண்டு நூலகம் இருப்பதில் என்ன தவறு39 எனக் கேட்டார் அப்படி உருவானதுதான் இந்தத் திட்டம் மாணவர்களுக்கு வாசிப்புப் பழக்கம் தேவை புத்தகங்களை நோக்கி அவர்கள் செல்ல வேண்டும் பாடப்புத்தகங்களைத் தாண்டிய வாசிப்புப் பழக்கம் மாணவர்களுக்கு ஏற்பட வேண்டும் ஆனால் இந்த நூலகம் முழுவதும் வேறு பயன்பாட்டுக்கு மாற்றப்பட்டுள்ளது பல இடங்களில் எந்தப் பயன்பாட்டிலும் இல்லைஅண்ணா நூலகத்தை மாதிரி நூலகமாகக் கொண்டுவரத் திட்டமிட்டு பிரமாண்டமாக அமைத்தோம் அதைச் சுற்றிப் பார்த்த கலைஞர் அதன் பிரமாண்டத்தைக் கண்டு சாதாரண மனிதன் தயங்கி விடக்கூடாது என எண்ணினார் அதற்காகவே வீட்டிலிருந்து புத்தகத்தை எடுத்து வந்து படிக்கும் (own book reading) திட்டத்தைக் கொண்டுவந்தோம்

Leave A Reply

Your email address will not be published.