”திண்டுக்கல் மாவட்டத்துக்கே எங்க தோட்டத்து கரும்புதான்!” – ஒரு விவசாயியின் பெருமிதம்

0 12

தைபிறந்தால் வழி பிறக்கும் என்பார்கள் ஆம் வருடம் முழுவதும் உழைத்து களைத்துப் போன விவசாயிகளுக்கு அறுவடைத் திருநாளான தைத்திருநாள்தான் கொண்டாட்டம்  பொங்கல் என்றவுடன் நம் நினைவுக்கு வருவது தின்ன தின்னத் திகட்டாத பொங்கலும் கடிக்கக் கடிக்க கசக்காத கரும்பும் தான் பொங்கலுக்குப் புத்தாடைகளைவிட அதிக எதிர்பார்ப்பு கரும்புக்குத்தான் அந்தளவிற்குச் சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பிக் கடிப்பதற்கு பல்லிற்கு உறுதி சேர்ப்பது கரும்பு தான் திண்டுக்கல்  மாவட்டத்திலிருந்து 5 கிமீ தொலைவில் உள்ள செட்டிநாயக்கன்பட்டி என்ற ஊர் உள்ளது அங்கே கணேசன் என்பவரின் கரும்புத் தோட்டம் புகழ்பெற்றது நாம் இந்த ஊருக்குச் சென்று நாம் கணேசனின் வீடு எங்கே என்று கேட்ட பொழுது அங்கிருந்தவர்கள் கரும்புத் தோட்ட கணேசனா” என்று அடை மொழியோடே கூறினார்கள்அவர்கள் கூறிய படியே நேரில் அவரின் தோட்டத்திற்கு சென்றோம் அங்கு நம்மை வரவேற்று உள்ளே தோட்டத்திற்கு அழைத்துச் சென்றார் அங்கு சென்று பார்த்தால் சுமார் ஒரு ஏக்கர் அளவிற்கு கரும்புத் தோட்டம் விரிந்திருந்தது அவரிடம் தோட்டம் கேட்ட பொழுது ”என்னுடைய அப்பா காலத்திலிருந்தே நாங்க விவசாயம் செய்து வருகிறோம்அவரும் சுமார் 50 ஆண்டு காலமாக ஆலைக் கரும்பினை நட்டு விவசாயம் செய்து வந்தார்அதனை ஆலைகளுக்குக் கொடுத்து வெல்லங்களை வெளியே வியாபாரிகளிடம் விற்பனை செய்தும் வந்துள்ளார்அதன் தொடர்ச்சியாக தான் நானும் கடந்த 10 வருடங்களாகப் பொங்கலுக்கு தேவைப் படக்கூடிய செங்கரும்பினை பயிரிட்டு வருகிறேன் மாசி மாதம் நட்டு மார்கழி கடைசியில் வெட்டி வியாபாரிகளிடம் விற்று விடுவோம் இதனை விற்பதற்கு இடையில் நிறைய சிரமங்களும் எங்களுக்கு உண்டு முதலில் கிடங்கினை வெட்டி கரும்பை நட வேண்டும் கிடங்கிற்கிடையில் மண்ணைப் போட்டே கொண்டேயிருக்க வேண்டும்இது தவிர வாரம் ஒருமுறை தண்ணீர் பாய்ச்ச வேண்டும்அப்புறம் கரும்பினை வெட்டுவதற்கு வேலையாட்களும் சரிவர கிடைப்பதில்லை இதனால் சம்பளம் அதிகமாகக் கேட்கிறார்கள்”பேசிக் கொண்டிருக்கும் பொழுதே வயலின் ஓரத்தில் கணேசனுடைய மனைவி விஜயலெட்சுமி நடந்து வந்தார் இவரும் கணேசன் உடனிருந்து விவசாயம் செய்து வருகிறார் அவரை அறிமுகம் செய்துவிட்டு கணேசன் தொடர்ந்தார் விவசாயம் செய்வதொன்றும் அவ்வளவு எளிதான ஒன்றல்ல கரும்பினை நட்டு வளரக் கூடிய ஆரம்பத்தில் முயல்கள் வந்து கத்தரித்து விடும் இரவு நேரங்களில் அருகிலுள்ளவர்கள் வைத்திருக்கும் ஆடுமாடு போன்றவை வந்து மேய்ந்துவிட்டுச் செல்லும் இதற்காகவே நான் கூரைச் சாலையிலும் கரும்பு தோட்டத்திற்குப் பக்கத்திலும் இரவு நேரங்களில் வந்து தூங்கி கொள்வேன் இதனிடையே சமீபத்தில் கஜா புயலினால் கரும்பு எல்லாம் சாய்ந்து விட்டதுஇதனால் கடந்து வருடத்தை விட இந்த வருடம் மிகவும் கஷ்டமாகத் தான் இருந்தது இதனைப் பற்றி தமிழக அரசும் புயல் பாதித்த விவசாய நிலங்களுக்கு அறிவித்த எந்த உதவியும் வரவில்லை” என்று கூறினார்பாதித்த இடங்களைப் பார்வையிட விஏஓ மட்டும் வந்து சென்றதாக கூறினார் இந்தப் பாதிப்பினால் போதிய விலையும் தனக்கு கிடைப்பதில்லை என்று வருந்தினார் 30 கட்டுகளை ஏற்றி செல்வதற்கு அதாவது ஒரு வண்டிக்கு ரூ7000 மட்டுமே கொடுத்து வியாபாரிகள் வாங்கி செல்கின்றனர்பிறகு வேலையாட்களுக்கு வண்டி ஏற்றுவதற்கு 30 கட்டிற்கு 800 ரூபாய் கூலி தருவதாகவும் கூறினார் இவ்வளவு பிரச்னைகளுக்கிடையில் விவசாயம் செய்வதற்கு போதிய தண்ணீர் இல்லதாதல் கரும்பிற்கு நீர் பாய்ச்ச தண்ணீரை டிராக்டரில் இருந்து வாங்கி வருவதாகக் கூறினார்இத்தனை இடர்பாடுகள் வந்தாலும் தன் தந்தை 50 ஆண்டு காலமாக செய்து வந்ததைப் போலவே இவரும் இவருக்குப் பக்க பலமாகவும் உறுதுணையாகவும் இவரது மனைவி விஜயலெட்சுமியும் விவசாயத்தின் மேலுள்ள ஆசையினாலும் தொடர்ந்து கரும்பினை நட்டு ஒவ்வொரு பொங்கலுக்கும்  தன்னுடைய நிலத்தில் விளையும் கரும்பே திண்டுக்கல் மாவட்டத்தில் இருக்கும் ஒவ்வொரு வீட்டிலும் கடிக்ககடிக்க இனிக்கட்டும் என்கிறார் வாசகர்கள் அனைவருக்கும் பொங்கல் நல்வாழ்த்துகளையும் கணேசன் தெரிவித்துக் கொண்டார்

Leave A Reply

Your email address will not be published.