விபத்தில் மூளைச்சாவு அடைந்த மகனின் உடல் உறுப்புகளை தானமாகக் கொடுத்து நெகிழ்ந்த ஏழைப் பெற்றோர்!

0 11

விபத்தில் மூளைச்சாவு அடைந்த மகனின் உடல் உறுப்புகளை தானம் செய்து நெகிழ வைத்துள்ளனர் ராமநாதபுரத்தைச் சேர்ந்த கூலித் தொழிலாளி பெற்றோர்ராமநாதபுரம் மாவட்டம் பட்டிணம்காத்தான் பகுதியில் வசித்து வருபவர்கள் ராமதாஸ் –  அன்னக்கிளி தம்பதி இவர்களுக்கு நான்கு பிள்ளைகள் ராமதாஸ் கட்டட தொழிலாளியாகக் கூலி வேலை பார்த்து வருகிறார் இவரின் கடைசி  மகன் விக்னேஸ்வரன் 21 வயதுடைய இவர் மெக்கானிக்கல் பட்டய படிப்பை முடித்துள்ளார்  இந்த நிலையில் கடந்த 2 -ம் தேதி பட்டிணம்காத்தான் புறவழிச் சாலை பகுதியில் இரு சக்கர வாகனத்தை ஓட்டிச் சென்றபோது எதிரே வந்த இருசக்கர வாகனத்தில் நேருக்கு நேர் மோதிய விபத்தில் சிக்கியுள்ளார் இதில்  விக்னேஸ்வரன் தலையில்  பலத்த காயமடைந்து  உயிருக்கு ஆபத்தான  நிலையில் ராமநாதபுரம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு பின்னர் மேல் சிகிச்சைக்காக விக்னேஸ்வரனை மதுரை தனியார் மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர் அங்கு அவருக்கு 6 நாள்கள்  மருத்துவ சிகிச்சை அளித்தும் பலனில்லாத நிலையில் மூளைச்சாவு அடைந்துள்ளார்இந்த நிலையை அறிந்த விக்னேஸ்வரனின் தந்தை கட்டட தொழிலாளியான ராமதாஸ் தனது மனதைத் திடப்படுத்திக்கொண்டு மகன் உயிர் பிழைக்க வாய்ப்பில்லை என்ற நிலையில் தன் மகனின் உடல் உறுப்புகளை தானம் செய்ய முன்வந்தார் இதை அறிந்த மருத்துவமனை நிர்வாகம் விக்னேஸ்வரனின் இதயம் கண் கல்லீரல் சிறுநீரகம் ஆகிய உறுப்புகளை அறுவை சிகிச்சை மூலம் அகற்றினர் பின்னர் மாற்று உடல் உறுப்பு சிகிச்சைக்காக காத்திருந்த ஆறு நபர்களுக்கு விக்னேஷ்வரனின் உடல் உறுப்புகள் தானம் அளிக்கப்பட்டனகண்ணுக்குக் கண்ணாக வளர்த்த 21 வயது மகன் மூளைச்சாவு அடைந்த நிலையில் தன் மகனின் உடலில் இயங்கும் மற்ற உறுப்புகளை மாற்று நபர்களுக்கு பொருத்துவதன் மூலம் தன் மகன் இந்த உலகத்தில் வாழ்வான் என்ற எண்ணத்துடன் விக்னேஷ்வரனின் பெற்றோர் புத்திர சோகத்திலும் உறுப்பு தானத்தை செய்துள்ளனர் இதை அறிந்த உறவினர்கள் மற்றும் நண்பர்கள் நெகிழ்ச்சி அடைந்தனர் மேலும் முழுமையான கல்வி அறிவு பெறாத கிராமத்து பெற்றோர்கள் தன் மகனின் உடல் உறுப்புகளை தானம் செய்த பெற்றோரின் நிலையைக் கருதி மதுரை மீனாட்சி மிஷன் மருத்துவமனை நிர்வாகத்தினர் விக்னேஷ்வரனுக்கு அளித்த சிகிச்சைக்கான கட்டணம் ஏதும் பெறாமல்  விக்னேஷ்வரனின் உடலைச் சொந்த ஊரான ராமநாதபுரத்துக்கு அனுப்பி வைத்தனர்ராமநாதபுரம் கொண்டு வரப்பட்ட விக்னேஸ்வரனின் உடல் இன்று மாலை ராமநாதபுரத்தில் தகனம் செய்யப்பட்டது விக்னேஸ்வரனின் இறுதி நிகழ்ச்சியில் பங்கேற்ற அவரது உறவினர்கள் நண்பர்கள் விக்னேஸ்வரனின்  உடல் உறுப்பு தானத்துக்கு சம்மதித்ததன் மூலம் முன் மாதிரியாகத் திகழ்ந்த விக்னேஸ்வரனின் பெற்றோரின் செயலை எண்ணி கண்ணீர் விட்டபடி சென்றனர்

Leave A Reply

Your email address will not be published.