கண்மாய் சீரமைத்துக் கொண்டிருந்த தொழிலாளர்களுக்கு ஷாக் கொடுத்த மலைப்பாம்பு! #Srivilliputhur

0 13

திருவில்லிபுத்தூர் அருகே கண்மாய் கரை சீரமைப்புப் பணியின்போது 10 அடி நீளமுள்ள மலைப்பாம்பு மீட்கப்பட்டதுவிருதுநகர் மாவட்டம் திருவில்லிபுத்தூர் அருகே மேற்குத்தொடர்ச்சி மலைப் பகுதியில் ஏராளமான வன உயிரினங்கள் வசித்து வருகின்றன அந்த உயிரினங்கள் அவ்வப்போது உணவுத் தேவைக்காக மலையடிவாரத்தில் உள்ள கிராமங்கள் மற்றும் காட்டுப்பகுதிக்குள் வந்துவிடுகின்றன இந்த நிலையில் கூமாபட்டி அருகே விராக சமுத்திரம் கண்மாய் உள்ளது இந்த கண்மாயின் கரையை சீரமைக்கும் பணி தற்போது நடைபெற்றுக்கொண்டிருந்ததுஇன்று காலை தொழிலாளர்கள் பணிபுரிந்து கொண்டிருக்கும்போது 10 அடி நீளமுள்ள மலைப்பாம்பு ஒன்று கரையின் அருகே உள்ள முட்புதரில் கிடந்துள்ளது இதைக் கண்ட பணியாளர்கள் உடனடியாக தீயணைப்பு மற்றும் வனத்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர் அதன்படி அங்கே வந்த தீயணைப்புத் துறையினரும் வனத்துறையினரும் அந்தப் பாம்பை மீட்டனர் பின்னர் மேற்குத்தொடர்ச்சி மலைப்பகுதியில் பாம்பு பாதுகாப்பாக விடப்பட்டது இதேபோல கடந்த சில நாள்களுக்கு முன் கூமாபட்டி அருகே கிணற்றுக்குள் விழுந்த 2 வயதுள்ள புள்ளிமான் ஒன்று தீயணைப்புத் துறையினரால் மீட்கப்பட்டு வனப்பகுதிக்குள் விடப்பட்டது

Leave A Reply

Your email address will not be published.