சிதம்பரம் சிவகாமசுந்தரி அம்மன் கோயிலில் கோலாகலமாக நடந்த கும்பாபிஷேகம்!

0 28

சிதம்பரம் நடராஜர் கோயிலில் உள்ள சிவகாமசுந்தரி அம்மன் கோயில் கும்பாபிஷேகம் நடந்தது சிதம்பரம் நடராஜர் கோயிலில் சிவகாமசுந்தரி அம்மனுக்கு சிவகாமி கோட்டம் எனும் தனிக் கோயில் உள்ளது இந்தக் கோயில் சோழ மன்னர்களால் சுமார் ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்டது இந்தக் கோயிலில் திருப்பணிகள் நடைபெற்ற வந்த நிலையில் இன்று கும்பாபிஷேகம் நடைபெற்றதுஇதையொட்டி யாகசாலை பூஜை கடந்த 5-ம் தேதி முக்குறுணி விநாயகர் சந்நிதியில் கணபதி ஹோமத்துடன் தொடங்கியது 7-ம் தேதி யாகசாலை பிரவேசம் முதலாம் கால யாகசாலை பூஜை நடைபெறுகிறது 8-ம் தேதி காலை இரண்டாம் கால யாகசாலை பூஜையும் அன்று மாலை மூன்றாம் கால யாகசாலை பூஜையும் 9-ம் தேதி காலை நான்காம் கால யாகசாலை பூஜையும் அன்று மாலை ஐந்தாம் கால யாகசாலை பூஜையும் நடைபெற்றது நேற்று  காலை ஆறாம் கால யாகசாலை பூஜை ருத்திர ஹோமமும் மாலை ஏழாம் கால யாகசாலை பூஜையும் இரவு எட்டாம் கால யாகசாலை பூஜையும் நடைபெறுகிறது  இன்று  காலை கோ பூஜை கஜ பூஜை அஸ்வ பூஜை நடந்தது கட யாத்திரை தானம் புறப்பட்டு காலை 9 மணிக்கு மேல் 10 மணிக்குள் மீன லக்னத்தில் ஸ்ரீசிவகாமசுந்தரி அம்பாள் கோயிலுக்கும் ஸ்ரீஸப்தமாதா ஸ்ரீமகாகணபதி ஸ்ரீவள்ளி-ஸ்ரீதேவசேனாசமேத ஸ்ரீசுப்பிரமணியர் ஸ்ரீசண்டிகேஸ்வரி ஸ்ரீசித்ரகுப்தர் ஸ்ரீநடுக்கம் தீர்த்த விநாயகர் ஸ்ரீசக்ரம் விஜஸ்தம்பம் ஆகிய பரிவார சந்நிதிகளுக்கும் மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது இதில் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு கும்பாபிஷேகத்தைக் கண்டுகளித்தனர் 

Leave A Reply

Your email address will not be published.