“தமிழக அரசின் கடனைப் பார்த்தால் பயமாக இருக்கிறது!’’ – தங்க தமிழ்ச்செல்வன் பேச்சு

0 17

“தமிழக பட்ஜெட் அறிவிப்பில் கூறப்பட்டுள்ள கடனைப் பார்த்தால் எனக்குப் பயமாக இருக்கு தமிழக அரசின் கடன் ரூ400000 கோடியை எட்டியுள்ளது 2 ஆண்டுகளில் ரூ48000 கோடி கடன் வாங்கி என்ன வளர்ச்சித் திட்டம் செயல்படுத்தினீர்கள் தொழிற்சாலை முதலீடுகளில் அரசுக்கு என்ன வருவாய் தமிழக மக்களுக்கு வழங்கிய பொங்கல் பரிசு ரொக்கம் எங்கிருந்து கொடுத்தீர்கள் கடனா கஜானாவில் இருந்து  எடுத்ததா என அமமுக கொள்கைப் பரப்புச் செயலாளர் தங்க தமிழ்ச்செல்வன் கேள்வி எழுப்பினார்ராமநாதபுரம் நாடாளுமன்றத் தொகுதி அமமுக ஆலோசனைக் கூட்டம் கொள்கை பரப்புச் செயலாளர் தங்க தமிழ்ச்செல்வன் தலைமையில் நடந்தது ராமநாதபுரத்தில் நடந்த இந்தக் கூட்டத்தில் பேசிய அவர் “கடந்த நான்கரை ஆண்டுகளில் தமிழகத்துக்கு பாஜக எந்தத் திட்டமும் கொண்டு வரவில்லை நீட் தேர்வு உதய் மின் திட்டம் மற்றும் தமிழக விவசாயத்தைப் பாதிக்கும் மத்திய அரசு திட்டங்களை எதிர்க்கத் தமிழக அரசுக்குத் துணிச்சல் இல்லை மத்திய அரசின் மிரட்டலுக்கு அதிமுக அரசு அடிபணிந்துள்ளது என்பது தமிழக மக்கள் எண்ணம் வரும் நாடாளுமன்றத் தேர்தலில் பாஜக-வுக்கும் அதிமுக-வுக்கும் தமிழக மக்கள் மிகப் பெரிய பாடம் புகட்டுவர் மத்திய அரசின் கெடுபிடிகளுக்கு அடிபணியாமல் துணிச்சலாக எதிர்த்து இருந்தால் அதிமுக-வில் இருந்து நாங்கள் (அமமுக) பிரிந்து வந்திருக்க மாட்டோம்மோடியின் கட்டளைகளுக்கு வளைந்து போகும் போக்குப் பிடிக்காமல் பிரிந்து வந்த நாங்கள்தான் உண்மையான அதிமுக-வினர் என நிரூபித்துள்ளோம் கருத்துக் கணிப்பில் அமமுக வளர்ச்சி சிறப்பாக உள்ளது நாடாளுமன்றத் தேர்தலுக்குப் பின் கட்சி சின்னம் எங்களிடம் வரும் ஆட்சியும் எங்களிடம்தான் வரும் 90 சதவிகிதம் தொண்டர்கள் எங்கள் பக்கம் உள்ளனர் நீங்கள் (அதிமுக) மனம் திருந்தி எங்களிடம் வாருங்கள் இருவரும் சேர்ந்து அதிமுக இரட்டை இலையைக் கையிலெடுத்து ஆட்சி செய்வோம் அதிமுக அரசின் அதிகார பலம் பண பலம்  நாடகம் தேர்தலில் தமிழக மக்களிடம் எடுபடாதுதமிழக பட்ஜெட் அறிவிப்பில் கூறப்பட்டுள்ள கடனைப் பார்த்தால் எனக்குப் பயமாக இருக்கு ரூ400000 கோடியை எட்டியுள்ளது  2 ஆண்டுகளில் ரூ48000 கோடி கடன் வாங்கி என்ன வளர்ச்சித் திட்டம் செயல்படுத்தினீர்கள் தொழிற்சாலை முதலீடுகளில் அரசுக்கு என்ன வருவாய் தமிழக மக்களுக்கு வழங்கிய பொங்கல் பரிசு ரொக்கம் எங்கிருந்து கொடுத்தீர்கள் கடனா கஜானாவிலிருந்து  எடுத்ததா அரசு ஊழியர்கள் ஆசிரியர்கள் கோரிக்கைகளில் ஏதேனும் ஒன்றை நிறைவேற்றும் ஆற்றல் மிக்க அரசாகச் செயல்பட தெரியவில்லைமத்திய அரசு சொல்வதற்கெல்லாம் தலை ஆட்டும் அரசாக அதிமுக அரசு உள்ளது நாடாளுமன்றம் தேர்தல் கூட்டணி இன்னும் முடிவாகவில்லை இதற்கிடையில் பிரதமரை போட்டி போட்டு அதிமுக அமைச்சர்கள் புகழ்ந்து தள்ளுகின்றனர் பாஜக-வின் ஒரு அங்கமாக அதிமுக போய்விட்டது ஜெயலலிதா இருந்தால் இதைச் செய்திருப்பார்களா மத்திய அரசைக் கண்டு நீங்கள் பயப்படுவதால் அதை வைத்து பாஜக உங்களை மிரட்டி வருகிறது’’ என்றார் கூட்டத்தில் முன்னாள் அமைச்சர் வதுநடராஜன் முன்னாள் எம்எல்ஏ-க்கள் முத்தையா ரத்தின சபாபதி அமைப்பு செயலாளர் ஜிமுனியசாமி மாவட்டச் செயலாளர் வதுநஆனந்த் உள்ளிட்டோர் பங்கேற்றனர்

Leave A Reply

Your email address will not be published.