சென்னையில் கட்டடத் தொழிலாளியான `கொல்கத்தா டான்’ – துப்பாக்கி முனையில் சிக்கிய பின்னணி

0 9

 கள்ள துப்பாக்கி கள்ளநோட்டு வழக்குகளில் தேடப்பட்ட கொல்கத்தா டான் சென்னையில் கட்டடத் தொழிலாளியாகப் பணியாற்றி வந்துள்ளார் அவரை நீலாங்கரை போலீஸ் இன்ஸ்பெக்டர் நடராஜன் தலைமையிலான போலீஸாரும் கொல்கத்தா போலீஸாரும் சேர்ந்து துப்பாக்கி முனையில் நேற்றிரவு கைது செய்தனர் கள்ள துப்பாக்கி கள்ள நோட்டுக்களின் பயன்பாடு மேற்கு வங்கத்தில் அதிகமாக இருந்தது இதனால் கள்ள துப்பாக்கிகளை விற்பவர்கள் மீதும் கள்ள நோட்டுகளை புழக்கத்தில் விடுபவர்களைப் பிடிக்கவும் கொல்கத்தா போலீஸார் நடவடிக்கை மேற்கொண்டனர் அப்போது கொல்கத்தா போலீஸாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது அதில் ஹசனும் அவருடைய கூட்டாளிகளும் சேர்ந்துதான் கள்ள துப்பாக்கி கள்ள நோட்டுகளைப் பங்களாதேஷ் நாட்டிலிருந்து மேற்கு வங்க மாநிலத்தில் விற்றது தெரியவந்தது அதுதொடர்பாகக் கொல்கத்தா போலீஸார் ஹசன் மற்றும் அவரின் கூட்டாளிகளைப் போலீஸார் தேடிவந்தனர் ஆனால் கூட்டாளிகளுடன் தலைமறைவான ஹசன் தமிழகத்துக்கு வந்தார் அவர் சென்னை நீலாங்கரைப் பகுதியில் கட்டடத் தொழிலாளியாகப் பணியாற்றிவந்தார்  இந்தத் தகவல் மத்திய உளவுத்துறை போலீஸார் மூலம் கொல்கத்தா போலீஸாருக்குத் தெரியவந்தது உடனடியாகக் கொல்கத்தா போலீஸார் நீலாங்கரை போலீஸாருடன் இணைந்து ஹசன் வேலைபார்த்த கட்டுமான இடத்துக்குச் சென்றனர் அப்போது ஹசன் தூங்கிக் கொண்டிருந்தார் துப்பாக்கி அவரிடம் இருக்கலாம் எனக் கருதிய போலீஸார் துப்பாக்கியோடு அங்கு சென்றனர் போலீஸாரைப் பார்த்ததும் ஹசன் தப்பி ஓட முயன்றார் அவரை போலீஸார் துப்பாக்கி முனையில் கைது செய்தனர் ஹசனின் கூட்டாளி ஒருவர் அம்பத்தூர் பகுதியில் இருக்கும் தகவல் போலீஸாருக்குத் தெரியவந்தது உடனடியாக அங்கு சென்று அவரைப் பிடித்தனர் அவரின் பெயர் மற்றும் விவரங்கள் தெரியவில்லை அவரிடமும் ஹசனிடமும் போலீஸார் விசாரித்துவருகின்றனர் இதுகுறித்து சென்னை போலீஸார் கூறுகையில் “எங்களுக்குத் தகவல் கிடைத்ததும் உடனடியாக சம்பவ இடத்துக்குச் சென்றோம் அங்கு கொல்கத்தா போலீஸார் அடையாளம் காட்டிய ஹசனை துப்பாக்கி முணையில் பிடித்து கொல்கத்தா போலீஸாரிடம் ஒப்படைத்தோம் ஹசன் கொல்கத்தாவில் டானாக இருந்துள்ளார் அவர் மீதான வழக்குகள் நிலுவையில் உள்ளன கொல்கத்தா போலீஸார் ஹசனையும் அவரின் இன்னொரு கூட்டாளியையும் அழைத்துச் சென்றுவிட்டனர் என்றனர்  

Leave A Reply

Your email address will not be published.