தென்னகத் திருப்பதி வெங்கட்ரமண சுவாமி கோயிலில் மாசிமக திருவிழா!

0 7

தென்னகத் திருப்பதி என்று அழைக்கப்பட்டு வரும் கரூர் தான்தோன்றிமலை அருள்மிகு ஸ்ரீ கல்யாண வெங்கட்ரமண சுவாமி திருக்கோயிலில் ஆண்டுதோறும் மாசிமக திருவிழா வெகுவிமரிசையாக நடைபெறுவது வழக்கம் அந்த வகையில் இன்று சிறப்பு பூஜைகள் நடத்தி கொடி ஏற்றத்துடன் மாசிமகத் திருவிழா தொடங்கப்பட்டுள்ளதுகரூர் மாவட்டம் தான்தோன்றிமலையில் அமைந்துள்ளது ஸ்ரீ கல்யாண வெங்கட்ரமண சுவாமி திருக்கோயில் இந்தக் கோயில் `தென்னகத் திருப்பதி39 என்று அழைக்கப்படுகிறது இந்தக் கோயிலில் பிப்ரவரி 10 முதல் மார்ச் 1-ம் தேதி வரை மாசிமக திருவிழா 20 நாள்கள் நடைபெறவுள்ளது  திருவிழாவின் முக்கிய நிகழ்வாக வரும் 18-ம் தேதி திருக்கல்யாண நிகழ்ச்சியும் தொடர்ந்து விழாவின் முக்கிய நிகழ்ச்சியான வரும் பிப்ரவரி 20-ம் தேதி திருத்தேரோட்டமும் நடைபெறவுள்ளனதொடர்ந்து பிப்ரவரி 21-ம் தேதி தெப்பத் திருவிழாவில்  அருள்மிகு ஸ்ரீகல்யாண வெங்கட்ரமண சுவாமி ஸ்ரீதேவி பூதேவியுடன் தெப்பத் தேரில் அமர்ந்து வலம் வருவதைக் காண ஏராளமான பக்தர்கள் கூடுவார்கள் நிறைவாக வரும் மார்ச் 1ம் தேதி புஷ்ப யாகம் நிகழ்ச்சியோடு திருவிழா நிறைவுபெறும் மேலும் இந்நிகழ்ச்சியை காண கரூர் மட்டுமல்லாது திருச்சி நாமக்கல் சேலம் ஈரோடு திண்டுக்கல் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களைச் சார்ந்த பொதுமக்களும் கலந்துகொள்வார்கள் என்பதால் இதற்கான முழு ஏற்பாடுகளை இந்து சமய அறநிலையத்துறையினர் மேற்கொள்ளவுள்ளனர்

Leave A Reply

Your email address will not be published.