குருக்க்ஷேத்ரா தொழில்நுட்பத் திருவிழா – முன்னோட்டம்

0 9

இந்தியாவின் பாரம்பர்யமிக்க தொழில்நுட்பக் கல்லூரிகளுள் நம் தமிழகத்தின் அண்ணா பல்கலைக் கழகத்துக்கு என்றுமே குறிப்பிடத்தக்க இடம் உண்டு தமிழகத்தின் பழம்பெரும் கல்லூரியின் பெருமைமிக்க தொழில்நுட்பத் திருவிழாவான `குருக்க்ஷேத்ரா39 இந்த வருடம் அண்ணா பல்கலைத்தின் CEG TECH FORUM என்னும் மாணவ அமைப்பினரால் வரும் பிப்ரவரி 13 முதல் பிப்ரவரி 17 வரை கிண்டி பொறியியல் கல்லூரியில் நடைபெறவுள்ளது இதில் இந்தியாவின் பல்வேறு ஐஐடி என்ஐடி மற்றும் பொறியியல் கல்லூரி மாணவர்கள் கலந்துகொண்டு தங்கள் படைப்புகளை காட்டவுள்ளனர்வெறும் கண்காட்சியாக மட்டுமல்லாமல் பல்வேறு தரப்பினரையும் கவரும் வண்ணம் ROBO WAR LASER TAG TECHNO FAIR GOD SPEED AERO MODELLING என்று ஒரு சின்ன ஹாலிவுட் உலகத்துக்கு நம்மை அழைத்துச் செல்ல இருக்கிறது கிண்டி பொறியியல் கல்லூரியின் குருக்க்ஷேத்ராROBO WARல் மாணவர்களின் கண்டுபிடிப்புகள் ஒவ்வொன்றும் சரசரவென்று அங்குமிங்கு திரும்புவதும் ஒன்றை ஒன்றை மோதிக்கொள்வதும் போட்டிபோட்டு முன்னேறுவதும் கண்ணைக் கவருவது மட்டுமல்லாமல் அவர்களின் படைப்புகளையும் ஒரு நொடி எப்படி இப்டியெல்லாம் என்று யோசிக்க வைக்கும்”LASER TAGல் வண்ண வண்ண திருவிழா என்று தான் சொல்ல வேண்டும் கல்லூரி முழுவதுமே இருளில் மின்னும் நட்சத்திரமாய் அங்குமிங்கும் மின்னிக்கொண்டு இருக்கும்GOD SPEEDல் குட்டி குட்டி கார்கள் சீறி சீறிப் பாய்ந்து முன்னேறி கொண்டிருக்கும் காட்சிகளும் அது செய்யும் சாகசங்களும் குருக்க்ஷேக்த்ராவின் சிறப்புகள் என்று சொல்லலாம்  தரையில் மட்டுமல்லாமல் வானத்திலும் AERO MODELLING என்னும் பெயரில் பல சாதனைகள் நிகழ்த்தப்படவுள்ளனகுருக்க்ஷேத்ரா என்னும் இந்த தொழில்நுட்பத் திருவிழா வெறும் இளம் மாணவர்களுக்கானதா என்றால் இல்லை என்கிறார்கள் CEG TECH FORUM மாணவர்கள் பள்ளி மாணவர்களைக் கவரும் வண்ணம் KRITHI WORKSHOP” என்னும் பயிற்றரங்கம் நடைபெறவுள்ளது பெண்களுக்கான WOMEN HACKATHON” என்னும் பிரத்யேக நிகழ்வுகளும் இதில் இடம்பெறவுள்ளனஇதுவரை கண்டறியப்படாத பலரின் திறமைகளை அங்கீகரிக்கும் வகையில் K-AWARDS என்னும் விருதுகளும் வழங்கப்படவுள்ளது அறிவியலும் தொழில்நுட்பமும் அன்றாட வாழ்க்கையாகிப் போன 20-ம் நூற்றாண்டில் இந்த இளம் மாணவர்களின் கண்டுபிடிப்புகள் நம்மை ஒரு நிமிடம் “மாணவர்கள் நினைத்தால் எல்லாம் சாத்தியமே” என்னும் வரிகளை ஒரு நொடி நினைவுறுத்திச் செல்கிறது விவசாயம் நீர்ப்பாசனம் மருத்துவம் சாலைவழி மற்றும் வான்வழி போக்குவரத்து தொலைத்தொடர்பு சாதனங்கள் என்று எல்லாத் துறைகளிலும் இவர்கள் தங்களின் புதுமைகளை புகுத்தியுள்ளனர்இந்தியாவின் எதிர்காலம் நான்கு சுவர்களுள் வடிவமைக்கப்பட்டுக் கொண்டிருக்கிறது என்பதை மீண்டும் நிரூபிக்கவிருக்கிறது கிண்டி பொறியியல் கல்லூரியின் குருக்க்ஷேத்ரா என்னும் தொழில்நுட்பத்திருவிழாஉங்க கிரியேட்டிவிட்டிக்கு ஒரு சவால் விவரங்களுக்கு க்ளிக் செய்க

Leave A Reply

Your email address will not be published.