பகுஜன் சமாஜ் 38, சமாஜ்வாதி 37! – தொகுதிப் பங்கீடு அதிகாரபூர்வமாக அறிவிப்பு

0 7

இந்தியாவில் அதிக மக்களவைத் தொகுதிகளை (80) கொண்ட மாநிலமாக உள்ளது உத்தரப்பிரதேசம் பிரதமர் நரேந்திர மோடி சோனியா காந்தி ராகுல் காந்தி போன்ற அரசியல் தலைவர்களின் ஆஸ்தான தொகுதிகளும் அங்கேதான் இருக்கின்றன அப்படிப்பட்ட உத்தரப்பிரதேசத்தில் இப்போது வலுவான சக்தியாக மாறி நிற்கிறது பாஜக 2014 நாடாளுமன்றத் தேர்தலில் 71 இடங்களையும் 2017 சட்டமன்றத் தேர்தலில் 311 இடங்களையும் பெற்று அசுரபலம் கொண்டுள்ளனர் `இம்முறையும் உத்தரப்பிரதேசத்தில் மாயாஜாலம் நிகழ்த்துவோம்” என்று முழங்கி வருகிறார்கள் பாஜகவை வீழ்த்துவதற்கு சரியான வியூகத்தை எதிர்பார்த்துக் காத்திருந்தனர் மாயாவதியும் அகிலேஷூம் அவர்களுக்கு பீகாரில் நிதிஷ்குமாரும் லாலு பிரசாத்தும் அமைத்த `மெகா கூட்டணி’ வழிகாட்டியது அங்கே எதிரும் புதிருமாக இருந்த நிதிஷூம் லாலுவும் கூட்டணி அமைத்ததால் பாஜகவின் ஆட்சியமைக்கும் கனவு கலைந்துபோனது பின்னர் நிதிஷ்குமாரை அணிக்குள் அழைத்து ஆட்சியைப் பிடித்துவிட்டார்கள் இருந்தாலும் பீகார் பாணி கூட்டணி பாஜகவுக்கு உதறலை ஏற்படுத்தியது என்னவோ உண்மைஎனவே அதே பாணியைப் பின்பற்றி உத்தரப்பிரதேசத்தில் மாயாவதியின் பகுஜன் சமாஜூம் அகிலேஷின் சமாஜ்வாதியும் கைகோத்தன இவர்களின் அணியில் இடம் கிடைக்கும் என்று கடைசிநேரம் வரை காத்திருந்தது காங்கிரஸ் ஆனால் அவ்வெண்ணம் ஈடேறவில்லை இதனால் “80 தொகுதிகளிலும் தனித்துப் போட்டியிடுவோம்” என்று அறிவித்தார் ராகுல் காந்தி அதோடு நில்லாமல் பிரியங்கா காந்தியை கிழக்கு உத்தரப்பிரதேசத்தின் பொறுப்பாளராக நியமித்தும் அதிரடி காட்டினார் அதற்குப் பிறகும் மாயாவதி அகிலேஷ் மனதில் மாற்றம் ஏற்படவில்லை இந்த நிலையில் மாயாவதி – அகிலேஷ் கூட்டணி இப்போது இறுதியாகியுள்ளது தொகுதிப்பங்கீடு விவரங்களை இருவரும் கூட்டாக வெளியிட்டுள்ளனர் அதன் படி 38 தொகுதிகளில் பகுஜன் சமாஜூம் 37 தொகுதிகளில் சமாஜ்வாதியும் போட்டியிடுகின்றன காங்கிரஸூக்கு ஆறுதல் அளிக்கும் ஓர் அறிவிப்பையும் வெளியிட்டுள்ளனர் `அமேதி மற்றும் ரேபரேலியில் வேட்பாளர்களை நிறுத்தப் போவதில்லை’ எனும் அறிவிப்பே அந்த ஆறுதல் செய்தி மீதியிருக்கும் 3 தொகுதிகள் அஜித் சிங்கின் ராஷ்டிரிய லோக் தள் கட்சிக்கு ஒதுக்கப்பட்டுள்ளது 

Leave A Reply

Your email address will not be published.