குதிரைச் சிலைக்குப் பல்லாயிரம் காகித மாலைகள்… களைகட்டிய குளமங்கலம் அய்யனார் கோயில் திருவிழா!

0 7

புதுக்கோட்டை மாவட்டம் குளமங்கலம் வில்லுனி ஆற்றங்கரையில் அமைந்திருக்கிறது பெருங்காரையடி மீண்ட அய்யனார் திருக்கோயில் 1574-ம் ஆண்டு கட்டப்பட்ட பழைமை வாய்ந்த இந்தக் கோயிலின் முன்பகுதியில் 35 அடி உயரத்தில் குதிரைச் சிலை அமைக்கப்பட்டுள்ளது இதுதான் ஆசியாவின் மிகப் பெரிய குதிரைச் சிலையாகும் ஒவ்வொரு மாசி மகத்தன்றும் இங்கு நடைபெறும் திருவிழா பிரசித்தி பெற்றது 2 நாள்கள் நடைபெறும் இந்த விழாவில் ஆசியாவின் மிகப்பெரிய குதிரைச் சிலைக்கு குதிரையின் கழுத்துப் பகுதி வரைக்கும் ஆயிரக்கணக்கான மாலைகள் பக்தர்களால் நேர்த்திக்கடனாகச் செலுத்தப்படுகின்றன சுற்றுவட்டார கிராமப் பகுதிகள் மட்டுமல்லாமல் வெளியூர் வெளிநாடு என எங்கு இருந்தாலும் பக்தர்கள் மாசி மகத் திருவிழாவிற்கு குளமங்கலத்தில் ஆஜராகி விடுகின்றனர் குதிரைக்குச் செலுத்தும் மாலை நேர்த்திக்கடனை ஒருபோதும் செலுத்தத் தவறுவதில்லைஇது ஒருபுறம் இருக்க மறுபுறம் திருவிழாவிற்கு வரும் பக்தர்கள் அனைவருக்கும் அன்னதானம் கொடுப்பதாகச் சிலர் நேர்த்திக்கடன் வைத்துக்கொள்கிறார்கள் அதன்படி மாசி மகத் திருவிழாவின் போது தங்கள் வீட்டில் சமைத்து எடுத்து வந்த உணவை லட்சக்கணக்கான பக்தர்களுக்கு அன்னதானமாக வழங்குகின்றனர்இப்படிச் சிறப்புமிக்க குதிரை உருவானது குறித்தும் நேர்த்திக்கடன் குறித்தும் கோயில் பரம்பரை பூசாரியான சாமியப்ப குருக்களிடம் பேசினோம் “கொஞ்ச வருஷத்துக்கு முன்னால் ஒரு தம்பதி கோயிலுக்கு வந்தாங்க அய்யனாரை தரிசித்துவிட்டு நிறைய நேரம் கோயிலிலேயே உட்கார்ந்து இருந்தாங்க வழக்கத்தைவிட நிறைய நேரமாகக் கோயில்லையே உட்கார்ந்து இருந்ததால் என்ன ஏதுன்னு அவங்ககிட்ட விசாரிச்சேன்`ரொம்ப வருஷமாக எங்க பொண்ணுக்குத் திருமணம் ஆகலை39ன்னு சொல்லி அழுதாங்க உடனே `உங்கள் பொண்ணுக்கு மாலை எடுத்துக் கொடுக்கணும்கிற கோரிக்கையை மனமுருகி அய்யனாரிடம் வைங்க பெரிய குதிரைக்கு மாலை போடுறதாவும் வேண்டிக்கங்க39 என்று சொல்லி அவங்களை வீட்டுக்கு அனுப்பி வச்சேன்6 மாசம் கழித்து மீண்டும் கோயிலுக்கு வந்தாங்க வெறும் கையோடு இல்லை மகள் மாப்பிள்ளையுடனும் மேளதாளம் முழங்க குதிரைக்கு மாலை போட்டுவிட்டு மன நிறைவோடு போனார்கள் இப்படித் திருமணமே ஆகாது என்று வந்த ஆயிரம் ஆயிரம் பேருக்கு அய்யனாரு மணமாலை எடுத்துக் கொடுத்திருக்காரு3939 என்று சிலிர்ப்பும் நெகிழ்ச்சியுமாகக் கூறியவர் தொடர்ந்து அய்யனாரின் அருள்திறன் பற்றியும் மெய்சிலிர்க்க விவரித்தார்“பக்தர்கள் மனமுருகி வேண்டிக்கிட்ட நியாயமான கோரிக்கையை அய்யனார் நிறைவேற்றத் தவறியதில்லை அதேபோல் பக்தர்கள் பக்கத்தூர் அரையப்பட்டியில் இருந்தாலும் சரி அமெரிக்காவில் இருந்தாலும் சரி நேர்த்திக்கடனைச் செலுத்தத் தவறுவதில்லை விவசாயம் செழிக்க குழந்தை வரம் என ஏராளமான கோரிக்கைகள் தினமும் அய்யனாரிடம் வைக்கப்படுகின்றன அனைத்தும் நிறைவேற்றப்படுதுங்கறது பக்தர்கள் சொல்றதிலிருந்தே புரிஞ்சிக்க முடியும் குறைந்த அளவிலான மாலைகளில் தொடங்கி இன்று அய்யனாருக்கு ஆயிரக்கணக்கான மாலைகள் நேர்த்திக்கடனாகக் கழுத்து வரையிலும் அணிவிக்கப்படுகிறது இதுவே அய்யனாரின் அருளுக்குச் சாட்சி சுற்றுவட்டார கிராமங்கள் மட்டுமன்றி வெளியூர் வெளிநாடுகளில் இருந்தும் கோயிலுக்கு பக்தர்கள் வருகின்றனர் என்றவரிடம் கோயில் எப்படி உருவானது என்ற கேள்வி எழுப்பினோம்  “இப்போது கோயில் இருக்கற பகுதி முழுவதும் முன்னால் அடர்ந்த காரைச்செடிகளா இருந்திருக்கு முன்னோர்கள் அப்போது பெரிய காரைச்செடிக்குக் கீழே பொங்கல் வைத்துத்தான் வழிபட்டு இருக்காங்க ஒரு பக்கம் பெரியவங்க பொங்கல் வச்சுக்கிட்டு இருந்துருக்காங்க மறுபக்கம் சிறுவர்கள் விளையாடிக்கிட்டு இருந்திருக்காங்கஅருகிலேயே ஆடுகள் மேய்ஞ்சிக்கிட்டு இருந்திருக்கு சிறுவன் ஒருவன் மண்ணால கத்தி செஞ்சு அதில் ஒரு ஆட்டை வெட்டிட்டான் மண்ணால ஆன அந்தக் கத்தி ஆட்டோட கழுத்துல பட்டதுமே அந்த ஆட்டோட கழுத்து வெட்டப்பட்டு ரத்தம் பீறிட்டிருக்கு அப்போ ரத்தம் பீறிட்ட இடத்திலிருந்து காரைச் செடிக்குக் கீழ் சுயம்பு வடிவில் அய்யனார் உருவாகிட்டாரு அதுக்குப்புறம் அந்த இடத்தில் கோயில் கட்டி வழிபட்டு வருகிறோம் ரத்தம் பீறிட்ட இடத்திலிருந்து வந்தாலும் அய்யனாருக்குக் கிடா வெட்டப்படுவது இல்லை அருகே உள்ள கருப்பர் சந்நிதியில்தான் கிடா வெட்டப்படும் கிடா வெட்டப்படும் போது சுவாமி நடை சாத்தப்படும் அய்யனார் வாகனம் யானைதான் ஆனால் யானை மெதுவாகச் செல்லும் குதிரை வேகமாகச் செல்லும் என்பதால் குதிரையையும் பயன்படுத்தி இருக்கிறார்கள் அப்போது இந்த ஊர் ஜமீன்தாரணி அம்மா குதிரை மேல இருந்த பிரியத்தால சுவாமியிடம் வேண்டிக்கிட்டு பெரிய குதிரையை நேர்த்திக்கடனாகக் கட்டி இருக்காங்க இப்போது புதுப்பிக்கப்பட்டு ஆசியாவின் மிகப் பெரிய குதிரையாகக் காட்சியளிக்கிறது என்றார்குளமங்கலம் கொத்தமங்கலம் மறமடக்கிப் பகுதிகளில் குதிரை மாலை கட்டும் தொழிலை 20-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் செய்து வருகின்றன தை மாசி மாதங்களில் மிகவும் பரபரப்பாகக் காணப்படுகின்றனர்  மாலை கட்டும் தொழிலாளி மோகனிடம் பேசினோம்“மாசிமகத்திற்காக 2 மாசத்துக்கு முன்னாலேயே மாலை கட்ட ஆரம்பிச்சுடுவோம் ஆரம்பத்தில் எங்க அப்பா காலத்தில் சோளம் கம்பு போன்ற தானியங்களை வச்சுத்தான் மாலை கட்டி இருக்காங்க அதுக்கு அப்புறம் மலர் மாலைகள் இப்போது ஜிகினா காகித மாலைகள் கட்டிக் கொடுத்துக்கிட்டு வர்றோம் இதற்குத் தேவையான பொருள்களை மதுரையிலிருந்து வாங்கி வருகிறோம் மாசி பங்குனியில்தான் எங்களுக்கு அதிகமாக ஆர்டர் வரும் அந்த 4 மாதங்களை வச்சுத்தான் எங்களுக்கு ஒரு வருஷ பிழைப்பே ஓடும் வேண்டிய கோரிக்கைகளை நிறைவேற்றித் தரும் தெய்வம் என்பதால் எங்கள் பிழைப்பு தொடர்ந்து நடக்க வேண்டி நாங்களும் நேர்த்திக்கடனாக மாலை செலுத்துகிறோம் இதுவரையிலும் எங்களையும் எங்கள் தொழிலையும் அய்யனார் நல்லபடியாகக் காப்பாற்றி வருகிறார் என்றார்அய்யனார் தன் வாகனமான குதிரைக்கு மாலை அணிவிப்பதாக வேண்டிக்கொள்ளும் பக்தர்களின் அனைத்து விருப்பங்களையும் நிறைவேற்றுகிறார் என்பதைக் கோயில் பூசாரியும் சரி நேர்த்திக் கடன் செலுத்துபவர்களுக்கு மாலை கட்டிக் கொடுக்கும் மோகனும் சரி ஒருமித்த குரலில் சொல்வதிலிருந்தே அய்யனாரின் அருள்திறனை நம்மால் புரிந்துகொள்ள முடிகிறது

Leave A Reply

Your email address will not be published.