“நாட்டுக்காகச் செத்தாலும் சந்தோஷம்தான்!’’ புல்வாமாவில் பலியான சுப்பிரமணியனின் ஃப்ளாஷ்பேக்

0 8

ஜம்மு-காஷ்மீர் மாநிலம் புல்வாமா மாவட்டத்தில் தீவிரவாதிகள் நடத்திய கொடூர தாக்குதலில் மத்திய ரிசர்வ் போலீஸ் படைப்பிரிவைச் சேர்ந்த 44 பேர் கொல்லப்பட்டனர் இந்தச் சம்பவத்தில் தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே உள்ள சவலாப்பேரி கிராமத்தைச் சேர்ந்த கணபதி என்பவரது மகன் சுப்பிரமணியன் உயிரிழந்தார் சவலாப்பேரி கிராமத்துக்குள் நுழையும்போதே அனைவரது முகத்திலும் சோகம் கொட்டிக் கிடப்பதைக் காணமுடிகிறதுவறண்ட நிலத்தின் வெக்கையையும் சுள்ளென அடிக்கும் வெயிலின் கடுமையையும் தாண்டி தகித்துக்கொண்டிருக்கிறார்கள் கிராமத்து மக்கள் மேகாலயா மாநிலத்தில் சிஆர்பிஎஃப்படையில் பணியாற்றும் வீரரான ராம்குமார் கூறுகையில் “நான் இந்த வேலையில் சேர்ந்ததற்குக் காரணமே சுப்பிரமணியன் அண்ணன்தான் அவர் எனக்குப் பயிற்சி கொடுத்து ஊக்கப்படுத்தி இருக்காவிட்டால் நான் இந்த வேலைக்குப் போயிருக்கவே முடியாது உடல் தகுதிக்கு எப்படித் தகுதிப்படுத்திக்கொள்ள வேண்டும் என்பதை எல்லாம் கற்றுக் கொடுத்தார் அவர் கொடுத்த ஊக்கத்திலேயே நான் இப்போது மேகாலயாவில் 120-வது பட்டாலியனில் வேலை செய்கிறேன்எனக்கு மட்டுமல்லாமல் இங்குள்ள நிறைய பேருக்கு அவர் பயிற்சிகள் கொடுத்திருக்கிறார் இப்போது நான் வேலையில் சேர்ந்த பிறகும் கூட அடிக்கடி செல்போனில் பேசுவார் எங்கள் பணியில் எப்படி நடந்துகொள்ள வேண்டும் என்பதைச் சொல்லிக் கொடுப்பார் பணி நேரத்தில் பகலில் எப்படி இருக்க வேண்டும் இரவில் எப்படி இரண்டு மடங்கு அலர்ட்டாக இருக்க வேண்டும் என்பதைச் சொல்லிக் கொடுப்பார் அவர் மறைந்த செய்தியைக் கேள்விப்பட்டு லீவு எடுத்து ஓடோடி வந்தேன்’’ என்றார் கண்களைத் துடைத்தபடியே  சுப்பிரமணியனின் மறைவால் அவரது குடும்பத்தினர் மிகுந்த சோகத்தில் இருக்கிறார்கள் மகனை இழந்த துக்கத்தில் இருக்கும் தாய் மரகதம் அம்மாளிடம் பேசினோம் “எங்க குடும்பம் சாதாரண விவசாய குடும்பம் கொஞ்சம் விவசாய நிலம் இருக்கும் அதில் கஷ்டப்பட்டு உழைச்சுப் பிழைக்கிறோம் எனக்கு ரெண்டு மகனும் ரெண்டு மகளும் இருக்காங்க எல்லோருக்கும் கல்யாணமாகிருச்சு சுப்பிரமணியன்தான் கடைசிப் பையன் எப்பவும் துறுதுறுன்னு இருப்பான் எல்லாரிடத்திலேயும் அன்பா இருப்பான் அவனுக்குப் படிப்பை விடவும் விளையாட்டுலயும் விவசாயத்திலயும்தான் ஆர்வம் அதிகம்போலீஸ் வேலையில் சேரணும் என்பது அவனோட கனவு அதுக்காக காலை மாலை நேரங்களில் உடற்பயிற்சி எடுப்பான் 5 வருடத்துக்கு முன்பு மத்திய போலீஸ் படையில் வேலை கிடைச்சுது உடனே என்கிட்ட வந்து சந்தோசமாகப் பேசினான் வெளியூரில் வேலைக்குப் போறதுல எனக்கு இஷ்டம் இல்லை ஆனால் என்னிடம் வேலை பற்றியும் நாட்டுக்காக சேவை செய்யப் போறது பற்றியும் பேசி சம்மதிக்க வச்சான் இப்படி ஆகும்னு தெரிஞ்சிருந்தா வேலைக்குப் போகவிட்டிருக்க மாட்டேன்’’ எனக் கதறினார்28 வயதான சுப்பிரமணியனின் மனைவி கிருஷ்ணவேணி திருமணம் நடந்த ஒன்றரை வருடங்களிலேயே கணவனை இழந்து துக்கத்தில் தவிக்கிறார் இந்த ஆண்டு தலைப் பொங்கல் என்பதால் சுப்பிரமணியன் ஒருமாதம் விடுமுறை எடுத்து சொந்த ஊருக்கு வந்திருந்தார் கடந்த 10-ம் தேதி பணிக்குத் திரும்புவதற்காகப் புறப்பட்டுச் சென்ற கணவன் இப்போது இல்லை என்பதை நம்ப முடியாமல் அதிர்ச்சியில் இருக்கிறார்விழிகளில் வழியும் கண்ணீரோடு சோகத்தில் இருந்த கிருஷ்ணவேணிக்கு ஆறுதல் தெரிவித்துப் பேசினோம் “திருமணம் ஆனதிலிருந்து அவர் எங்கிட்ட ரொம்பப் பாசமா இருப்பார் பணிக்காக வெளிமாநிலம் போனாலும் கூட தினமும் நேரம் கிடைக்கும்போதெல்லாம் என்னோடு பேசுவார் அதனால் அவர் எனக்குப் பக்கத்தில் இருப்பது மாதிரியே இருக்கும் இப்படி நடக்கும்னு நான் நினைச்சுக் கூடப் பார்க்கலையே’’ எனக் கலங்கி அழுத்தார்சற்று ஆசுவாசப்பட்டபடி தொடர்ந்து பேசிய அவர் “அவரோட வேலை பற்றியும் இரவிலும் பகலிலும் வேலை எப்படி இருக்கும் என்பது பற்றி எல்லாம் நிறைய பேசுவார் கல்யாணமான புதிதில் ஒருநாள் தற்செயலாகப் பேசிக்கொண்டிருந்தபோது `நம்ம நாட்டுக்காக நான் உயிர்த் தியாகம் செய்ய வேண்டியதிருந்தாலும் எனக்கு மகிழ்ச்சிதான்’ என்று சொன்னார் நான் அழுதுகொண்டே `ஏன் இப்படிப் பேசுகிறீர்கள்’ என்றேன் சும்மாதானே பேசினேன் என அவர் என்னைச் சமாதானப்படுத்தினார் ஆனால் அன்றைக்கு அவர் சொன்னது மாதிரியே இப்போது நடந்துருச்சுஎங்களுக்குக் கல்யாணமானதிலிருந்து 6 முறை மட்டுமே அவர் விடுமுறையில் வந்திருக்கிறார் இந்த முறை லீவில் வந்திருந்தபோது அவங்க அப்பாவுக்குக் கண் அறுவை சிகிச்சைக்கு அழைச்சுட்டுப் போனார் எங்களுக்குக் கொஞ்சம் விவசாய நிலம் இருக்கு தோட்ட வேலையை எல்லாம் அவரே செஞ்சார் இந்த ஊரில் நிறைய பேருக்கு உதவி செஞ்சிருக்கார் லீவுக்கு வந்தாருன்னாலே விளையாட்டுப் போட்டிகளை நடத்துவார்இந்த ஊரில் 3 கபடி டீம் இருக்கு அதை எல்லாம் அழைச்சுப் போட்டிகளை நடத்தி பரிசு குடுப்பார் இவர் வெளிமாநிலத்தில் இருக்கார் அவங்க அண்ணன் கிருஷ்ணசாமி துபாயில் இருக்கிறார் அதனால் பெற்றோரை கூட இருந்து கவனிக்க முடியலையே என்கிற ஏக்கம் அவருக்கு அதிகமா இருந்துச்சு அடிக்கடி அம்மா அப்பாவைப் பற்றி போனில் கேட்பார் அவங்களை நல்லாப் பாரத்துக்கச் சொல்வார் யாருக்காவது காய்ச்சல் தலைவலின்னு போனில் சொல்லிட்டா அடிக்கடி அதைப் பற்றி விசாரித்துக் கொண்டே இருப்பார் சரியாகி விட்டது என்பது தெரியும் வரையிலும் தொடர்ந்து விசாரிப்பார்எல்லார் மேலயும் ரொம்பவும் அக்கறையாகவும் பாசமாகவும் இருக்கும் அவரது மறைவை எப்படித் தாங்குறதுன்னே தெரியல இது எனக்கு மிகப்பெரிய இழப்பு அவர் லீவில் வரும்போது வீரர்கள் ஓரிடத்திலிருந்து செல்லும்போது கான்வாய் செல்வது பற்றி எல்லாம் நிறைய பேசியிருக்கிறார் அப்போது கான்வாய் வாகனங்கள் 2 அல்லது 3 மட்டும்தான் செல்லும் என்றும் காலையில் 3 வாகனங்கள் புறப்பட்டுச் சென்றால் அடுத்த வாகனங்கள் மாலையோ அல்லது இரவிலோதான் புறப்படும் எனச் சொல்லியிருக்கிறார்ஆனால் தற்போது நடந்துள்ள சம்பவத்தில் 2500 வீரர்கள் 70 வாகனங்களில் ஒரே சமயத்தில் புறப்பட்டுப் போயிருக்கிறார்கள் அதுவும் 20 நாள்கள் வரையிலும் வீரர்களை கேம்பில் தங்க வைத்து ஒரே சமயத்தில் கூட்டிப் போயிருக்கிறார்கள் அதனாலோ என்னவோ ஒரே தாக்குதலில் இவ்வளவு உயிரிழப்பு இந்தத் தாக்குதலில் என்னைப் போலவே பலரும் வாழ்க்கையைத் தொலைத்துவிட்டுத் தவிக்கிறோம் பல குடும்பப் பெண்கள் நிர்க்கதியாக்கப்பட்டு இருக்கிறார்கள் பல பேர் உடல் ஊனமுற்றுப் ஆஸ்பத்திரியில் இருக்கிறார்கள் இனிமேல் இதுபோன்ற சம்பங்கள் நடக்காமல் இருக்க அரசாங்கம் தீவிர நடவடிக்கை எடுக்க வேண்டும் இனியும் என்னைச் போல யாரும் பாதிக்கப்படக் கூடாது அதற்கான நடவடிக்கை எடுக்க வேண்டும்’’ என்றபடி அமைதியானார்விழிகள் எங்கோ வெறித்திருக்க கண்ணீர் வழிந்தோடியது எதுவும் பேசாமல் அங்கிருந்து கிளம்பினோம்

Leave A Reply

Your email address will not be published.