கள்ளக்குறிச்சியில் பிரேமலதா போட்டி?- நம்பிக்கை தந்த எடப்பாடி

0 7

அ.தி.மு.க. கூட்டணியில் கள்ளக்குறிச்சி தொகுதி தே.மு.தி.க.வுக்கு ஒதுக்கப்படவுள்ளது. இத்தொகுதியில் தே.மு.தி.க. பொருளாளரும், விஜயகாந்த்தின் மனைவியுமான பிரேமலதா போட்டியிடப் போவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. அவரது வெற்றிக்குத் தான் பொறுப்பேற்பதாக முதல்வர் எடப்பாடி பழனிசாமி உத்தரவாதம் அளித்திருப்பதால், தே.மு.தி.க. வட்டாரம் குஷியில் திளைக்கிறது.இதுகுறித்து நம்மிடம் பேசிய தே.மு.தி.க. நிர்வாகிகள், “கடந்த 2014 நாடாளுமன்றத் தேர்தலில், பா.ஜ.க.வுடன் கூட்டணி அமைத்துப் போட்டியிட்ட தே.மு.தி.க., கள்ளக்குறிச்சி தொகுதியில் 1.64 லட்சம் வாக்குகளைப் பெற்று மூன்றாமிடம் பெற்றது. வெற்றி பெற்ற அ.தி.மு.க. வேட்பாளர் காமராஜ் 5.33 லட்சம் வாக்குகளைப் பெற்றார். இன்று, அ.தி.மு.க., தே.மு.தி.க. இரண்டும் கரம் கோத்துள்ளன. இத்தொகுதியில் பிரேமலதா விஜயகாந்த் நிற்கப் போவதாக எங்கள் கட்சித் தலைமை அறிவுறுத்தியுள்ளது. தேர்தல் பணிகளையும் ஜரூராக தொடங்கிவிட்டோம்” என்றனர். சேலம், கள்ளக்குறிச்சி இரண்டு நாடாளுமன்றத் தொகுதிகளின் வெற்றிக்கு முதல்வர் எடப்பாடி பழனிசாமி பொறுப்பேற்றுள்ளாராம். “உங்க வெற்றிக்கு நான் உறுதி!” என்று நேரடியாகவே பிரேமலதாவுக்கு முதல்வர் எடப்பாடி உத்தரவாதம் அளித்திருப்பதால், தே.மு.தி.க-வினர் உற்சாகமடைந்துள்ளனர்.

Leave A Reply

Your email address will not be published.