`டெல்லி நெருக்கடி கொடுக்குது, உள்ளடி வேலை செய்யாதீங்க!’ – அமைச்சர், எம்.பியை திருப்பி அனுப்பிய எடப்பாடி

0 4

டெல்லி நெருக்கடியை சமாளிக்க முடியாமல் சிவகங்கை தொகுதியை கூட்டணிக் கட்சியான பா.ஜ.க-வுக்கு கொடுக்க முதல்வர் முடிவு செய்திருப்பதற்கு முக்கிய காரணம் இந்தத் தொகுதியில் இருந்து 67 பேர் சீட் கேட்டு விருப்ப மனு செய்திருப்பதுதான் என்கிறார்கள்  அ.தி.மு.க-வின் தலைமை நிர்வாகிகள். “சிவகங்கை தொகுதியை எப்படியாவது அ.தி.மு.க-வுக்கு ஒதுக்க வைக்க வேண்டும் என்று அமைச்சர் பாஸ்கரனும், மாவட்டச் செயலாளர் செந்தில்நாதனும் கடுமையாக முயற்சி செய்தார்கள். அதில் அமைச்சர் பாஸ்கரன் தன் மகனுக்கு காய்நகர்த்தினார். மா.செ சிட்டிங் எம்.பி என்பதால், அவர் ஒரு ரூட்டில் முயற்சி செய்தார். ஒரு கட்டத்தில் அமைச்சரும், மாவட்டச் செயலாளரும் சென்னையில் நடந்த நேர்காணலுக்குச் சென்றார்கள். அங்கே இவர்களுக்கு அதிர்ச்சி காத்திருந்தது தெரியாது. முதல்வரின் வீட்டுக்குச் சென்று `எங்கள்  தொகுதி அ.தி.மு.க-வுக்குச் சாதகமாக இருக்கிறது. நாம் போட்டியிட்டால் எளிதாக வெற்றி பெற்றுவிடலாம். தொகுதி நமக்கு சாதகமாக இருக்கும் சூழ்நிலையில் வேறு யாருக்கும் இந்த வாய்ப்பைக் கொடுக்க வேண்டாம்” என்று சொன்னார்களாம்.உடனே முதல்வர், `எனக்கு டெல்லியிலிருந்து சிவகங்கை தொகுதியை ராஜாவுக்கு கொடுக்கச் சொல்லி நெருக்கடி கொடுக்கிறார்கள். உங்கள் தொகுதியிலிருந்து 67 பேர் சீட் கேட்டு விருப்ப மனு செய்திருக்கிறார்கள். வேறு எந்தத் தொகுதியில் இருந்தும் இந்த அளவுக்கு விருப்ப மனு வரவில்லை. எனவே, நீங்கள் நம் கூட்டணிக் கட்சி வேட்பாளரை வெற்றி பெற வையுங்கள். சட்டமன்றத் தேர்தலில் நான் உங்களுக்கு வேண்டிய தொகுதியைத் தருகிறேன். நமக்கு இந்தத் தேர்தல் ஒரு சவாலானது. காரணம் அம்மா இல்லாமல் நாமே களத்தில் இறங்கி மக்களைச் சந்திக்க இருக்கிறோம். நம் கட்சி நிர்வாகிகள் என்னடா நமக்கு சீட் கிடைக்கவில்லையேன்னு நினைத்து உள்ளடி வேலைகள் பார்த்தால் டி.டி.வி வெற்றி பெற நாமே காரணமாகி விடுவோம். இதையெல்லாம் மனதில் வைத்துக்கொண்டு செயல்படுங்கள்’ என்று சொல்லி அவர்களை திருப்பி அனுப்பியிருக்கிறார். முதல்வரின் இந்த முடிவால் சிவகங்கை மாவட்ட அ.தி.மு.க நிர்வாகிகள் அதிருப்தியில் இருக்கிறார்கள்.

Leave A Reply

Your email address will not be published.