`நான்தான் முதல் கேள்வியைக் கேட்பேன்னு தெரியாது!”- `ஹாய் ராகுல்’னு கூப்பிட்ட கல்லூரி மாணவி பூரிப்பு

0 13

தேர்தல் நேரம் நெருங்கிவிட்ட வேளையில் அனைத்துக் கட்சிகளும் தீவிரமாகக் களத்தில் இறங்கத் தொடங்கியுள்ளது இதன் முன்னோட்டமாக நேற்றைய தினம் தமிழகத்துக்கு வருகை புரிந்தார் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி சென்னை ஸ்டெல்லா மாரிஸ் கல்லூரியில் மாணவர்களிடையே பேசினார் ரொம்பவே கூலாக தனது கலந்துரையாடலைத் தொடங்கினார் ராகுல் காந்தி  “எளிமையான கேள்விகளாக இல்லாமல் கடினமான கேள்விகளைக் கேளுங்கள் என சிரித்தபடியே கேள்விகளை எதிர்கொண்டார் அப்போது கல்லூரி மாணவி ஒருவர் ராகுலை சார் என்று கூப்பிட “ ராகுல் என நீங்கள் என்னை அழைக்கலாம் என்றார் உடனே அந்தப் பெண் `ஹாய் ராகுல்39 என அழைத்தார் அந்த வீடியோ பட்டி தொட்டி எங்கும் வைரலானது ஒரு நாட்டின் பிரதமர் வேட்பாளரை பெயர் சொல்லி அழைத்ததைப் பலரும் ஆச்சர்யமாகப் பார்த்தனர் அந்தப் பெண்ணின் பெயர் அஸ்ரா காதர் அவரிடம் தொடர்புகொண்டு பேசினோம்   “ஸ்டெல்லா மாரிஸ் கல்லூரியில் 3-ம் ஆண்டு `பைன் ஆர்ட்ஸ்39 படித்து வருகிறேன் நான்தான் முதல்ல கேள்வி கேட்கப் போறேன்னு எனக்குத் தெரியாது  நான் என் பேரை குடுத்துருந்தேன் அவங்க என்னோட பேரை முதலாவதாகவே கூப்பிட்டுட்டாங்க எனக்கு ரொம்ப பதற்றமா இருந்தது ஆனா என்னை கூல் பண்ற மாதிரி அவரே  சார்னுலாம் கூப்பிடாதனு சொல்லிட்டாரு நானும் `ஹாய் ராகுல்39னு சொல்லிட்டேன் அவர் சொன்ன பதில் நம்பிக்கை அளிக்கக்கூடியதா இருந்தது நிறைய பேர் இப்போ பேசுறாங்க இவ்ளோ வைரல் ஆகும்னு நினைச்சுப் பார்க்கல எனக்கு ஓவியம் வரைவதில் ஆர்வம் அதிகம் அதனாலதான் அந்த கோர்ஸ் எடுத்தேன் சின்ன வயசுல இருந்தே எனக்கு மேடை நாடகங்களில் (Stage play)  ஈடுபாடு அதிகம் கல்லூரியில் மேடை நாடகங்களில் நடித்துள்ளேன் கலையின் மூலமாக சமூக மாற்றத்தைக் கொண்டு வரமுடியும் என்ற நம்பிக்கை எனக்கு அதிகம் என்றார்

Leave A Reply

Your email address will not be published.