ஸ்டாலின் மருமகன் சபரீசன் மீது வழக்கு பதிவு –  சென்னை காவல் துறை நடவடிக்கை

0 10

பொள்ளாச்சி பாலியல் குற்ற வழக்கில் தனது பெயரையும் தன் குடும்பத்தின் பெயரையும் களங்கப்படுத்தும் விதமாக ஸ்டாலினின் மருமகன் சபரீசன்  செயல்படுவதாக சென்னை மாநகரக் காவல் துறையில் துணை சபாநாயகர் பொள்ளாச்சி ஜெயராமன் புகார் அளித்துள்ளார் இப்புகார்மீது வழக்கும் பதியப்பட்டுள்ளதுபொள்ளாச்சி விவகாரத்தில் தன் பெயரை திமுக ஐடி விங்கைச் சேர்ந்தவர்கள் சபரீசன் தூண்டுதலின் பெயரில் களங்கப்படுத்துவதாக பொள்ளாச்சி ஜெயராமன் நேரடியாகவே குற்றம் சாட்டினார் இந்நிலையில் சென்னை மாநகர காவல் துறையில் சபரீசன் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி புகார் அளிக்கப்பட்டது பொள்ளாச்சி ஜெயராமன் அளித்த இப்புகாரில் தற்போது வழக்கு பதியப்பட்டுள்ளது குற்றவழக்கு எண் 972019 பெயரில் சபரீசன் மீது வழக்கு பதியப்பட்டுள்ளது பொள்ளாச்சி விவகாரத்தில் திமுக அதிமுக இடையே வார்த்தைப் போர் சூடாகிவரும் நிலையில் எதிர்க்கட்சித் தலைவர் ஸ்டாலினின் மருமகன் சபரீசன் மீதே ஆளும் தரப்பு வழக்கு பதிந்துள்ளது தமிழக அரசியலில் அதிர்வைக் கிளப்பியுள்ளது இந்த நிலையில் சபரீசன் தரப்பிலும் பொள்ளாச்சி ஜெயராமனுக்கு எதிராக வக்கீல் நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது

Leave A Reply

Your email address will not be published.